AstroVed Menu
AstroVed
search
search
x

2022 New Year Rasi Palangal Mithunam

dateNovember 8, 2021

2022 புத்தாண்டு மிதுன ராசி பொதுப்பலன்கள்:

மிதுன ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் ஆயுள் ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வதும் களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானாதிபதியான குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு தாமதம் ஆனவர்களுக்கு திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தை வழங்கும் படியாக இந்த குரு பெயர்ச்சி இருக்கப்போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் தொழிலில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தி தருவதாக இந்த குருப்பெயர்ச்சி அமையப்போகிறது.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்:

உத்தியோகத்தில் இருக்கும் மிதுன ராசி அன்பர்கள் இந்த வருடம் பணியிடத்தில் அதிக பணிகள் இருக்கக் காண்பார்கள். பணிகள் மலைபோல வந்து குவியும். என்றாலும் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி பதவி உயர்வு பெறுவீர்கள்.    உங்கள் வருமானமும் உயரக் காண்பீர்கள். நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால், கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற  அங்கீகாரமும் பாராட்டும் மேலதிகாரிகளிடம் இருந்து நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் சொந்தத் தொழில் செய்பவர் என்றால் இந்த வருடம் நீங்கள் நல்ல மனிதர்களின் புதிய நட்பைப் பெறுவீர்கள். அவர்கள் மூலம் ஆதாயமும் முன்னேற்றமும் காண்பீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு ராகு பூஜை

காதல் / திருமணம்:

மிதுன ராசி இளம் வயது அன்பர்கள் தங்கள் காதல் முயற்சிகளில்  வெற்றியைக் காண்பார்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் அன்பர்கள் இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்க தக்க துணை கிடைக்கப் பெறுவார்கள். திருமணமான தம்பதிகள் சுமுகமான நல்லிணக்க உறவை மேற்கொள்வார்கள். வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். இது அவர்கள் உறவை மேலும் வலுப்படுத்தும்.  

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை

நிதி நிலைமை:

நிதிநிலையைப் பொறுத்தவரை மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் வரவேற்கத்தக்க வருடமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் உங்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தரும்.  ஊக வணிகம், பங்கு வர்த்தகம் மூலம் லாபமும் ஆதாயமும் கிடைக்கப் பெற்று அதன் மூலம் நிதிநிலையில் ஏற்றம் காணப்படும். வீடு, நிலம், போன்ற அசையாச் சொத்துக்களை  வாங்குவதற்காக செலவுகள் மேற்கொள்ள நேரும்.  நிலம் சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். 

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை

மாணவர்கள்: 

பள்ளிக் கல்வியில் பயிலும் மிதுன ராசி மாணவர்களுக்கு கல்வியில் கவனம் சிதற  வாய்ப்புள்ளது. மனதை ஒருமுகப்படுத்தி கல்வி பயில்வதை கடினமாக உணர்வார்கள்.  எனவே தியானம் மூலம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியம். உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். அவர்கள் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி வெற்றி காண்பார்கள். அறிவியல் துறை சார்ந்த ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். 

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

ஆரோக்கியம்: 

மிதுன ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். தலைவலி, வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் வந்துபோகும் வாய்ப்பு உள்ளது.  முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். துரித உணவு வகைகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்கள் பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு செவ்வாய் பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.  
ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயம் சென்று வருவது சிறப்பு. 
மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி புரிவது வாழ்கையில் ஏற்றத்தை கொடுக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

சுக்கிரன் ஹோமம்

சாதகமான மாதங்கள் : 

ஜனவரி, பிப்ரவரி, மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர்.

சாதகமற்ற மாதங்கள் : 

மார்ச், ஏப்ரல், செப்டம்பர் நவம்பர் டிசம்பர்.


banner

Leave a Reply