AstroVed Menu
AstroVed
search
search
x

2022 New Year Rasi Palangal Rishabam

dateNovember 8, 2021

2022 புத்தாண்டு ரிஷப ராசி பொதுப்பலன்கள்:

ரிஷப ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வதும் லாப ஸ்தானாதிபதியான குரு தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் தந்தை வழியில் ஆதாயத்தையும் பிதுரார்ஜித சொத்துக்களை அனுபவிக்கும் பாக்கியத்தையும் வெளிநாட்டு பிரயாணங்களால் அனுகூலத்தையும் வாரி வழங்கும் படியாக இந்த குரு பெயர்ச்சி இருக்கப்போகிறது. உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் பொருளாதாரத்தில் ஏற்றத்தையும் இந்த குருப்பெயர்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்:

படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த வருடம் வேலை கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாட்டில் வேலை தேடி வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த வருடம் கிடைக்கும் வாய்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் தாங்கள் நீண்ட நாட்களாக  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பதவி உயர்வை இந்த வருடம் நிச்சயம் எதிர்பார்கலாம். தொழில், குறிப்பாக கூட்டுத் தொழில் அமோகமாக  இருக்கும். குறிப்பாக ஆடை ஏற்றுமதி சம்பந்தப்பட்ட கூட்டுத்தொழில் புரிபவர்களுக்கு அதிக லாபங்கள் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள். தொழில் தொடர்பான  வெளிநாட்டு பயணங்கள் அதிக நன்மையை அளிக்கும்.  

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் காண பால திரிபுர சுந்தரி பூஜை

காதல் / திருமணம்:

ரிஷப ராசி இளம் வயதினர் மனதில் காதல் அரும்பு மலரும்.  காதலில் அன்பும் இனிமையும் இருக்கும். உங்கள் அன்பை இனிமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துவீர்கள். அதன் மூலம் உங்கள் துணையைக் கவர்வீர்கள். நீண்ட காலமாக  திருமண முயற்சியில் தாமதம் கண்டவர்கள் இந்த வருடம் இல்லற வாழ்வில் அடி எடுத்து வைப்பார்கள். திருமணத்திற்கான உங்கள் முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவி உறவு சுமுகமாகவும் நல்லிணக்கத்துடனும் இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து உண்மையாகவும் பற்றுடனும்  பாசத்துடனும் நடந்து கொள்வார்கள். 

திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை

நிதி நிலைமை:

உத்தியோகம் பார்க்கும் ரிஷப ராசி அன்பர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய  உயர்வும் ஒருசேர கிடைக்கப் பெறுவதால் பொருளாதார அந்தஸ்து உயரும். குறிப்பாக அச்சுத் துறை, கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். தங்கம் மற்றும் ரத்தினங்கள் வாங்குவது லாபம் மிகுந்ததாக இருக்கும். வீடு மராமத்து பணிகளை மேற்கொள்வது குறித்த செலவினங்களை இந்த வருடம் நீங்கள் சந்திக்க நேரும். வேலை மற்றும் தொழில் நிமித்தமான வெளிநாட்டு பயணங்களுக்காகவும் நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரும். 

தன நிலையில் ஏற்றம் காண சிவன் பூஜை

மாணவர்கள்: 

ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். பள்ளி மாணவர்கள் இந்த வருடம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். வெளி நாடு சென்று கல்வி  பயில விரும்பும் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் தங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் வகையில் சாதகமான சூழ்நிலை ஏற்படக் காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும். அவர்களுக்கு வெளிநாட்டு வேலையும் கிடைக்கும். 

கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை

ஆரோக்கியம்: 

ரிஷப ராசி அன்பர்களின் ஆரோக்கியம் இந்த வருடம் சீராக இருக்க வாய்ப்பில்லை. உங்கள் ஆரோக்கியத்தில்  ஏற்ற இறக்க நிலை இருக்கும்.  ஒற்றை தலைவலி மற்றும் சளித்தொல்லை போன்ற சிறு உபாதைகள் வந்து நீங்கும். என்றாலும் உங்கள் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல் நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பதும், ஆரோக்கிய உணவை உட்கொள்வதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

ஊனமுற்றவர்களுக்கு பண உதவி செய்வது உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
வெள்ளிக் கிழமைகளில் அன்ன தானம் செய்வது சிறப்பு. 
பசுவிற்கு பழங்களை உண்ண கொடுக்கலாம்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

கோ பூஜை

சாதகமான மாதங்கள் : 

ஜனவரி, பிப்ரவரி, மே, ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : 

மார்ச், ஏப்ரல், ஜூலை, அக்டோபர், நவம்பர்.


banner

Leave a Reply