AstroVed Menu
AstroVed
search
search
x

2022 New Year Rasi Palangal Kadagam

dateNovember 8, 2021

2022 புத்தாண்டு கடக ராசி பொதுப்பலன்கள்:

கடக ராசிக்கு களத்திர ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் களத்திர ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வதும் உழைப்பு மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதியான குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் உத்தியோக ரீதியான மாறுதல்களையும் எதிர்பாராத உயர்பதவியையும் வழங்கும் படியாக இந்த 2022 ஆம் வருடம் இருக்கப்போகிறது. திருமண முயற்சிகளில் வெற்றியையும் ஏற்படுத்தி தருவதாக இந்த 2022 ஆம் வருடம் இருக்கப்போகிறது. 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்:

உத்தியோகத்தில் இருக்கும் கடக  ராசி அன்பர்கள் இந்த வருடம்  தங்களின் உத்தியோகத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.  நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள்.  சுயதொழிலில்  ஈடுபட்டிருக்கும் அன்பர்கள் தாங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வங்கிக் கடன்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் தொடர்பான  பயணங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும். 

உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு முருகன் பூஜை

காதல் / திருமணம்:

கடக ராசி அன்பர்கள் தங்கள் காதலில் வெற்றி பெறுவார்கள். உங்கள் காதல் இரு குடும்பத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படும். பெற்றோர் மற்றும் உறவினர்களின் சம்மதம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண முயற்சிகள் கை கூடும்.  உங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டு கொள்வீர்கள். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள்.  தம்பதிகளுக்கு இடையே புரிந்துணர்வும் அன்னியோன்யமும் கூடும். வருடத்தின் பிறபகுதியில் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து ஆலோசனைகளை வழங்குவார்கள். 

காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலைமை:

உங்கள் நிதிநிலையில் நீங்கள் முயற்சி செய்வதன் மூலம்  ஏற்றத்தைக் காண இயலும். மருத்துவத் துறை, விளம்பரத்துறை, கல்வித்துறை மற்றும் சட்டத்துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில்  லாபங்களைக் காண்பீர்கள். பொருளாதார பாதுகாப்பும் பெறுவீர்கள். வாகன பராமரிப்பு சம்மந்தப்பட்ட  செலவுகள் ஏற்படும்.

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

மாணவர்கள்: 

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அவர்களின்  கிரகிக்கும் திறன் கூடும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். வெளிநாட்டில் மின்னணுவியல், நுண்ணுயிரியல் மற்றும் தகவல் தொழில்  நுட்பத் துறையில் இருக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை பெறுவார்கள்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

ஆரோக்கியம்: 

கடக ராசி அன்பர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும்  சிறு சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது வந்து போகும். உபாதைகள் சிறிய அளவில் இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நன்மை பயக்கும். நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை.

நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

சகோதரிகளுக்கு இனிப்பு பண்டங்கள் வாங்கிக் கொடுக்கலாம். 
சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவிலில் நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. 
தாயார் வயதை உடையவர்களுக்கு அன்னதானம் செய்வது வாழ்வில் ஏற்றத்தை கொடுக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

நவகிரக ஹோமம்

சாதகமான மாதங்கள் : 

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : 

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர். 


banner

Leave a Reply