2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2022 New Year Rasi Palangal Mesham

Invoke Ancestral Blessings on Thai Amavasya The First New Moon on the Dawn of Heaven JOIN NOW
x
x
x
cart-added The item has been added to your cart.

2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2022 New Year Rasi Palangal Mesham

November 8, 2021 | Total Views : 103
Zoom In Zoom Out Print

2022 புத்தாண்டு மேஷ ராசி பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! ராசிக்கு ஜீவன ஸ்தானத்திற்கும் லாபஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் ஜீவன ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வது தொழில் ரீதியில் மேன்மையை ஏற்படுத்தும். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவானும் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதனால் உங்கள் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். தொழிலில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். இளைய சகோதரர்களுடனான உறவு பலப்படும். அவர்களால் ஆதாயம் உண்டு. குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பும் இணக்கமான சூழ்நிலையும் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் அமையும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்:

இந்த வருடம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும் என்ற போதிலும் போட்டியாளர்கள் உங்களுக்கு சவாலாக விளங்குவார்கள். புதிய தொழில் குறித்த எண்ணங்கள் இருந்தால் அதை நிறைவேற்றுவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். முதலீடுகளில் மிகுந்த கவனம் தேவை. கூட்டுத் தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்களுக்கு அனுகூலமாக இருக்கக் காண்பார்கள். தொழில் மூலம் சிறந்த லாபம் கிட்டும். இந்த வருடம் பங்கு வர்த்தகம் உங்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தரும். 

உத்தியோக உயர்வுக்கு முருகன் பூஜை

காதல் / திருமணம்:

இளம் வயது மேஷ ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். காதலில் இனிமையும் வெற்றியும் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் காதலுக்கு பெற்றோரின் ஆதரவு இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை அமைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆதரவாகவும் உதவிகரமாகவும்  இருப்பார்கள். திருமணமான தம்பதிகள் உறவில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் இருக்கும். 

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதிநிலைமை:

இந்த வருடம் நீங்கள் செய்யும் செலவுகள் சுபச் செலவுகளாக அமையும். அசையாச் சொத்துக்களை வாங்கி உங்கள் எதிர்கால வாழ்விற்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வீர்கள். நீங்கள் நிதி நிறுவனம், வங்கி,   மருத்துவம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர் என்றால் உங்களுக்கு உங்கள் தொழில் அல்லது உத்தியோகம் மூலம் சிறந்த பண வருவாய் காணப்படும். இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலையில் நீங்கள் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள்.  நீங்கள் சொந்தத் தொழில் செய்பவர் என்றால் உங்கள் வியாபாரம் அல்லது தொழில் மூலமும் நீங்கள் சிறந்த லாபம் காண்பீர்கள்.  புதிய தொழில் தொடங்குவதற்கு உங்கள் பொருளாதாரம் இடம் கொடுக்கும். முதலீடுகள் மூலம் லாபமும் ஆதாயங்களும் கிட்டும்.  என்றாலும் முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம்  அவசியம்.  இந்த வருடம் புதிய தொழில் முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். யூக வனிகமான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் ஏற்றம் காணப்படும். பிட் காயின், கிரிப்டோ கரன்சி மற்றும் ஃபோரெக்ஸ் டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்து உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் காண முடியும்.  நிலம், வீட்டு மனை  போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வகையில் நீங்கள் சுபச் செலவுகளை  மேற்கொள்ள நேரும். 

நிதி நிலையில் ஏற்றம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்: 

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிப்பார்கள். மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதன் மூலம் சிறந்த முறையில் தேர்ச்சி  பெற்று முன்னேறுவார்கள். மேற்படிப்பு  படிக்கும் மாணவர்கள் இந்த வருடம் அனுகூலமற்ற நிலையைக் காண்பார்கள். படிப்பு மற்றும் கல்வி முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். ஆராய்ச்சி கல்வியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தாங்கள் மேற்கொண்ட படிப்பை வெற்றிகரமாக முடிப்பார்கள்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற கணேஷா பூஜை

ஆரோக்கியம்: 

இந்த வருடம் மேஷ ராசி அன்பர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த வயிற்றுப் பிரச்சினை மற்றும்  அஜீரணக் கோளாறு போன்ற உடல் உபாதைகள் நீங்கக் காண்பார்கள்.  சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வதன் மூலமும், உடலுக்கு கேடு தரும் உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலமும் நல்ல உடல் ஆரோக்கியம் பெறலாம். தியானம் மற்றும் உடற் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

.நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில பண உதவி செய்வது பொருளாதார  நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
செம்மண் பானையை உபயோகிப்பது நன்மை பயக்கும்.
செவ்வாய் கிழமைகளில் சிகப்பு உடை உடுத்துங்கள்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

செவ்வாய் ஹோமம்

சாதகமான மாதங்கள் : 

ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : 

பிப்ரவரி, ஜூன், செப்டம்பர், அக்டோபர். 

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos