2022 New Year Rasi Palangal Simmam
2022 புத்தாண்டு சிம்ம ராசி பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களே! குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இளைய உடன் பிறப்புகளுடன் சிறந்த உறவை பராமரிக்க இயலும். இளம் வயது சிம்ம ராசி அன்பர்கள் தங்கள் காதல் உறவில் கவனமாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே உங்கள் வாக்கில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் பெறும். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் விடா முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றி பெற முடியும். தாய் தந்தை மற்றும் வீட்டில் இருக்கும். வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
வேலை / தொழில்:
நீங்கள் அரசு உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தனியார் துறையில் பணி புரியும் சிம்ம ராசி அன்பர்கள் பணியிடத்தில் அதிக பணிகள் இருக்கக் காண்பார்கள். அதிக பொறுப்புகள் காணப்படும். பணிகள் மலை போல வந்து குவியும். என்றாலும் நீங்கள் இந்தச் சூழ்நிலையை சமாளித்து சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். சக பணியாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்தி லாபமும் ஆதாயமும் காண்பீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண லக்ஷ்மி பூஜை
காதல் / திருமணம்:
காதலர்கள் தங்களுக்கு இடையே சில கசப்பான நிகழ்வுகள் அல்லது அனுபவங்களை சந்திக்க நேரும். இதனால் இருவருக்கும் இடையே மன ஒற்றுமை குன்றி கருத்து வேறுபாடு காரணமாக இடைவெளி அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் காதல் உறவில் சுமுக நிலையை தக்க வைக்க முடியும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள். புரிந்துணர்வு அதிகரிக்கும். சுமுகமான உறவு இருக்கும். இருவரும் வெளி இடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். இதனால் உறவின் நெருக்கம் அதிகரிக்கும்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலைமை:
உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காண்பீர்கள். எழுத்துத் துறை மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல் போன்ற விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும்.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்வார்கள். ஆர்வமும் பொறுமையும் மேற்கொள்வதன் மூலம் கல்வியில் வெற்றி காண இயலும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். தங்களின் ஆராய்ச்சியை திறம்பட முடித்து வெற்றி காண்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், என்றாலும் ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுவது உடல் நலனுக்கு நன்மை பயக்கும். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மிக்கு ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு.
வயதில் மூத்தவர்களுக்கு அன்னதானம் செய்வது வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.
சாதகமான மாதங்கள் :
ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.
சாதகமற்ற மாதங்கள் :
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, அக்டோபர்.







