Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2020 New Year Rasi Palangal Mesham

December 18, 2019 | Total Views : 757
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள்

2020 ஆம் ஆண்டு என்பது, மேஷ ராசி அன்பர்களின் செயலாற்றல் சிறந்து விளங்கும் காலமாக அமையும். உங்கள் தகவல் தொடர்பு, பேச்சாற்றல் போன்றவை, உங்கள் திறனை மேலும் மேம்படுத்தும். உங்கள் அறிவாற்றலும், நேர்மையான நடவடிக்கைகளும், நற்குணங்களாக மலரும். இது உங்களை சமயம், ஆன்மீகம் போன்ற துறைகளுக்கும் இட்டுச் செல்லும். உங்களில் சிலர், ஜோதிடம், கைரேகை போன்ற புனிதக் கலைகளை கற்கும் வாய்ப்பு ஏற்படும். வேறு சிலருக்கு உளவியல் துறையிலும் ஆர்வம் ஏற்படும். உடல் உறுதி பெறும்; உடல்நிலை மேம்படும். நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்தி, பணிகளில் வெற்றி காணும் ஆற்றல் ஏற்படும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தொலைத் தொடர்பு மற்றும் அலைபேசி, நோட்பேட் போன்ற நவீன மின்னணு சாதனங்களின் விற்பனை சிறந்து விளங்கும் வாய்ப்புள்ளது; எனவே, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேஷ ராசி அன்பர்கள், நல்ல தொழில் வளர்ச்சியும், லாபமும் காண இயலும். மேலும், உடன் பிறந்தவர்கள், உடன் பணிபுரிபவர்கள், அண்டை, அயலார்கள் போன்றவர்களுடன், நெருங்கிய உறவு ஏற்படும். சிறு பயணங்களை மேற்கொண்டு மகிழும் வாய்ப்பும் உள்ளது.

வேலை

வேலை தொழில் போன்றவற்றைப் பொறுத்தவரை, இந்த வருடத்தின் முற்பகுதி சுமாராகவே இருக்கும். ஆனால் மே மாதப் பிற்பகுதியிலிருந்து செப்டம்பர் வரை, நிலமை பெரிதும் சீர்படும். எனினும், அதன் பிறகு வருடக் கடைசி வரை, நீங்கள் சராசரி பலன்களையே காண முடியும். தொழிலதிபர், வணிகர் போன்றவர்கள், மே மாத நடுவிலிருந்து ஜூன் மாத இறுதி வரை பல பெரிய, புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறலாம். ஆனால், உங்கள் பணி எதுவாக இருந்தாலும், அதில் முன்னேறுவதற்காக, தவறான, நேர்மையற்ற வழிகளை கண்டிப்பாகக் கையாள வேண்டாம். இது ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

வேலை, தொழில் மேம்பட Group Satyanarayana Pooja

காதல், மணவாழ்க்கை, உறவுகள்

இந்த ஆண்டில் இவை, ஓரளவு நன்றாகவே இருக்கும் எனலாம். உங்கள் துணையுடனான காதலும், உறவும், பெருமளவு மகிழ்ச்சியளிப்பதாகவே அமையும். எனினும் சில நேரங்களில் உறவுகளில், உரசல்களையும், பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்; அது போன்ற நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், நிலைமையை அமைதியாகயும், பொறுமையாகவும் கையாளுவது நல்லது. இதன் மூலம், காதலிலும் சரி, மணவாழ்க்கையிலும் சரி இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனும், மற்ற உறவினர்களுடனும் நேர்மறையான அணுகுமுறையைக் கையாளுவது, இணக்கத்தையும், நெருக்கத்தையும் வளர்க்கும். கடந்தகாலத்தின் கசப்பான நினைவுகளைக் களைந்து விட்டு, ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி நகர்வது, பல நன்மைகள் தரும்.

உறவுகள் சிறக்க Uma Maheshwara Fire Lab (Homa)

நிதி

ஆண்டின் முற்பகுதியில், தேவையற்ற பல செலவுகள் ஏற்படக்கூடும்; இவற்றை கவனமாகக் கையாள்வது அவசியம். ஆனால், பிற்பகுதியில், நீங்கள் சுப செலவுகள் செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். மே, ஜூன் மாதங்களில் வருமானம், தாராளமாக இருக்கும். இதனால் உங்கள் பொருளாதார நிலையும், பணப் புழக்கமும் மேம்படும்.

நிதிநிலை ஏற்றம் பெற Lakshmi Kubera Fire Lab (Homa)

கல்வி

மே முதல் செப்டம்பர் வரையிலான காலம், மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணும் நேரமாக விளங்கும். வெளிநாடு சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும், இது நன்மைகள் தரும் காலகட்டம் ஆகும். எனவே, மாணவர்கள் இந்த பொன்னான நேரத்தை முறையாகப் பயன்படுத்தி, கடுமையாக உழைத்துப் படித்தால், கல்வியில் சாதனைகள் செய்யலாம். ஆனால் தேர்வுகளில் வெற்றி பெறுவது, அதிக மதிப்பெண் வாங்குவது போன்ற எந்த காரணத்திற்காகவும், நேர்மையற்ற நடவடிக்கைகள் எதிலும், கண்டிப்பாக ஈடுபட வேண்டாம். தவறினால் உங்கள் எதிர்காலமே பாதிக்கப்படக் கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

கல்வியில் வெற்றி பெற Dhakshinamurthy Yantra

ஆரோக்கியம்

2020 ஆம் வருடத்தின் ஜனவரி, ஏப்ரல், டிசம்பர் மாதங்களில், உங்கள் உடல் நலனில் கவனம் தேவை. சுகாதாரமற்ற உணவுகள் உட்கொள்வது, துப்புரவில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றால், ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை. எனினும், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நோய்கள் குணமாகி, உடல்நிலை தேரும் வாய்ப்புள்ளது. பகவான் மகாவிஷ்ணு, சிவபெருமான் என்ற இரண்டு பெரும் தெய்வங்களையும் வணங்கி, சோதனையான காலகட்டங்களில் நோய்நொடிகளால் பாதிக்கப்படாமல் இருக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Vaidhyanatha Pooja

பரிகாரங்கள்

வயதில் மூத்தவர்கள், முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள் கடவுள் நம்பிக்கையையும், ஆன்மீக நாட்டத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள் பகவான் விஷ்ணுவையும், சிவபெருமானையும் வழிபாடு செய்யுங்கள் ‘ஓம் ஷம் சனிஸ்சராய நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யுங்கள் ‘ஓம் கெம் கேதவே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யுங்கள்

பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும் கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:

9 Planets Fire Lab (Homa)

சாதகமான மாதங்கள்: பிப்ரவரி, ஜூன், செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள்: ஏப்ரல், ஆகஸ்டு, நவம்பர், டிசம்பர் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

banner

Leave a Reply

Submit Comment