ரிஷப ராசி - பொதுப் பலன்கள்
இந்த மாதம் பல்வேறு ஆதாரங்களின் மூலம் உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள உகந்த மாதம். உங்கள் கவனிப்பு திறன் அதிகரிக்கும். நீங்கள் சமூக வட்டாரத்தில் புதிய உறவுகளையும் நட்புகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். தொலை தூர இடங்களுக்கு பிரயாணம் செய்வீர்கள். புதிய மனிதர்களுடனான தொடர்புகள் உங்களுக்கு நன்மை அளிக்கும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை நீங்கள் புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். உங்கள் உரையாடல் திறன் மூலம் நீங்கள் சமூகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் விரும்பும் முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷப ராசி - காதல்/ திருமணம்
இந்த மாதம் உங்கள் மனதில் காதல் அரும்பு மலர்ந்தாலும் அதனை வெளிப்படுத்தும் தைரியம் குறைந்து காணப்படும். திருமணமான தம்பதிகள் உறவு தனிப்பட்ட முறையிலும் குடும்பத்திலும் சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரகன் பூஜை
ரிஷப ராசி - பொருளாதாரம்
உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும். பண வரவும் பணப் புழக்கமும் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். அதன் மூலம் உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கக் காண்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முதலீடுகளின் மூலமும் நீங்கள் பணம் பெறுவீர்கள். இவ்வாறு பல வகை ஆதாரங்கள் மூலம் நீங்கள் பணம் பெற்று மகிழச்சி அடைவீர்கள். கையில் பணம் உள்ளது என்று நண்பர்களுக்கு கடன் அளிப்பது, நினைத்தவாறு ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது போன்ற செலவுகளைச் செய்வதன் மூலம் பணம் கரையும் வாய்ப்பு உள்ளது. எனவே சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை
ரிஷப ராசி - வேலை
இந்த மாதம் நீங்கள் அதிக துடிப்புடன் செயலாற்ற வேண்டும். ஆனால் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. பணியிடத்தில் காணப்படும் கூடுதல் பணிகள் உங்களுக்கு மன உளைச்சலை அளிக்கும். நீங்கள் பொறுமையுடன் உங்கள் கடமைகளை ஆற்ற வேண்டும். நீங்கள் சக பணியாளர்களிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் காரணமாக நீங்கள் பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:சனி பூஜை
ரிஷப ராசி - தொழில்
இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக முன்னேற்றத்திலும் சிறிது ஏற்ற இறக்கங்கள் காணப்படும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு ஆகும் எனவே நீங்கள் பிறருடன் அளவோடு பழகுங்கள். கையில் இருக்கும் பணிகளை முடிக்காமல் புதிய பணிகளை மேற்கொள்ளாதீர்கள். உங்கள் திட்டங்களில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அத்திட்டத்தை மறு ஆலோசனை செய்து அதனை சிறந்த திட்டமாக மாற்றி கொள்ள முயலுங்கள். வாடிக்கையாளர்களுடனான சந்திப்புகளில் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்.
ரிஷப ராசி - தொழில் வல்லுனர்கள்
நீங்கள் சிறந்த முறையில் செயல்பட்டாலும் பலன்கள் சிறந்த முறையில் காண இயலாது என்பது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்து பணி செய்தால் தான் பணியிடத்தில் நல்ல பலன்களை அனுபவிக்க இயலும். நீங்கள் பிறருடன் உரையாடும் போது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆலோசகராக நீங்கள் செயல்படுவீர்கள்.
ரிஷப ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு கேள்விக் குறியாக இருக்கும். ஆரோக்கியத்தில் காணப்படும் பிரச்சினைகளும், அசௌகரியங்களும் உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். என்றாலும் நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், தகுந்த சிகிச்சை பெறுவதன் மூலம் ஆறுதல் பெறுவீர்கள். முறையான நேரத்தில் உணவும் சரியான நேரத்தில் ஓய்வும், தூக்கமும் உங்கள் ஆரோக்கியத்தை சீராக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : சூரியன் பூஜை
ரிஷப ராசி - மாணவர்கள்
பாடங்கள் படிப்பதைப் பொறுத்தவரை நீங்கள் சரியாக செயல்படுவீர்கள். ஆனால் உங்கள் போக்கை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் பிரச்சினைகள் ஏற்படாமல் காத்துக்கொள்ளலாம். நீங்கள் கற்பனையாக, உணர்வுப் பூர்வமாக செயல்படுவதை தவிர்த்து யதார்த்தமாக செயல்படுவது உங்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று, அங்கு பல புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப நாட்கள் : 1,5,6,8,9,12,13,14,15,17,22,23,24,27,28,29,30.
அசுப நாட்கள் : 2,3,4,7,10,11,16,18,19,20,21,25,26.

Leave a Reply