கன்னி ராசி - பொதுப் பலன்கள்
கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களை எதிர்பார்க்க இயலாது. மனதில் அமைதி நிலவ குடும்பத்தில் அமைதி வேண்டும். எனவே சண்டை சச்சரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் முயற்சி மேற்கொள்ளுங்கள். வீட்டிலேயே இருந்தால் சூழ்நிலையை மாற்றுவது கடினம். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் ஓரளவு சூழ்நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மேலும் புனித யாத்திரைகள் செல்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆன்மீக நாட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள இயலும். பணியிடத்தில் உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை சிரத்தையுடன் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களைக் காணலாம். அஜாக்கிரதையாக இருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரும். கையில் பணம் இல்லாத நிலை இருந்தால் பெரிய தொகையை யாரிடமிருந்தும் கடனாகப் பெறாதீர்கள். தேவையெனில் சிறு தொகையை கடனாக கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்வில் நேர்மையைக் கடைபிடிப்பதன் மூலம் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.
கன்னி ராசி - காதல்/திருமணம்
காதலர்கள் இந்த மாதம் உறவில் அதிக இனிமையை எதிர்பார்க்க இயலாது. திருமணமான தம்பதியர்கள் ஒற்றுமையுடனும் சுறுசுறுப்புடனும் கருத்தொருமித்து செயலாற்றி காரியத்தை செய்து முடிப்பார்கள். இந்த சூழ்நிலை காரணமாக மனதில் அமைதியும் நேர்மறை எண்ணங்களும் காணப்படும். குடும்பம் சம்பந்தமான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காமல் நிதானமாக சிந்தத்து எடுங்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை
கன்னி ராசி - பொருளாதாரம்
வரவு எட்டு ரூபாய் என்றால் செலவு பத்து ரூபாய் என்ற வகையில் இந்த மாதம் காணப்படுவது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். வரவை விட செலவு அதிகமாக இருப்பதால், உங்களின் இந்த பொருளாதார நிலை உங்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தும். உங்கள் நண்பர்களுக்கு கடனாக கொடுத்த தொகையை வசூல் செய்வீர்கள். ஆன்மீக காரியங்களுக்காக நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை
கன்னி ராசி - வேலை
இந்த மாதம் பணியில் ஏற்படும் தடைகளும் முட்டுக்கட்டைகளும் உங்களை வருத்தப்பட வைக்கும். முன்னேற்றம் பெற முடியாத சூழ்நிலை காரணமாக முன் கோபம் அதிகரிக்கும். உங்களின் இந்த மன நிலையை சக பணியாளர்களிடம் காட்டி மோதல்களை ஏற்படுத்தாமல் கவனமாக இருங்கள். முடிந்த வரை ஆக்கப்பூர்வமாக பணியாற்ற முயலுங்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:புதன் பூஜை
கன்னி ராசி - தொழில்
இந்த மாதம் நீங்கள் தொழிலில் இலக்குகளை அமைத்துக் கொண்டு பணியாற்ற முயன்றாலும் உங்களால் அதனை அடைய இயலாத நிலை இருக்கும். கையில் எடுத்திருக்கும் பணியை பாதியில் நிறுத்தாமல் அதனை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் தொழிலை கை விட்டு விடலாம் என்ற தவறான முடிவுக்கு நீங்கள் வராதீர்கள். காலம் வரும் வரை பொறுமையைக் கையாளுங்கள். கடினமாக உழைத்தால் காலம் கனிந்து வரும் போது நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் பேச்சு தந்திரம் சிறந்த ஒரு கருவியாக அமையும். எனவே மற்றவருடன் உரையாடும் போது உங்கள் திறமையை பயன்படுத்துங்கள்.
கன்னி ராசி - தொழில் வல்லுனர்கள்
கடினமாக முயற்சி செய்தால் தான் உங்களால் பணிகளை முடிக்க இயலும் சூழ்நிலை காணப்படும். சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் உங்கள் மனப் போராட்டம் காரணமாக நீங்கள் உணர்ச்சி வசப்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனதிற்கு கடிவாளம் அமைத்து அதனை கட்டுப்படுத்துங்கள். இரண்டு கை தட்டினால் தான் ஓசை. நீங்கள் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சுமூகமாக தீரும்.
கன்னி ராசி - ஆரோக்கியம்
மனதை அரிக்கும் தேவையற்ற கவலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறிது பாதிக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இந்த சூழ்நிலையில் உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள நீங்கள் சரியான நேரத்தில் உணவையும் முறையான ஒய்வு மற்றும் தூக்கத்தையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். எளிய வகை உடற் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் நீங்கள் உங்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை
கன்னி ராசி - மாணவர்கள்
கன்னி ராசி மாணவர்கள் இந்த மாதம் தொடர்ந்து படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். இது ஓரளவிற்கு மன திருப்தியை அளிக்கும். மேற்படிப்பு குறித்த முடிவுகளை நீங்கள் நன்றாக யோசித்து எடுப்பீர்கள். நண்பர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களுடன் நல்லுறவை பராமரிக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப நாட்கள் : 5,6,8,9,12,13,14,15,17,19,20,22,23,24,27.
அசுப நாட்கள் : 1,2,3,4,7,10,11,16,18,21,25,26,28,29,30.

Leave a Reply