விருச்சிக ராசி - பொதுப்பலன்கள்
விருச்சிக ராசி அன்பர்களே! இது உங்களுக்கு வளமான மாதமாக அமையும். குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன், அன்பும் நெருக்கமும் மேம்படும். பல புதிய தொடர்புகள் ஏற்படும். அனைவரிடமும் சுமுகமான உறவும் ஏற்படும். இந்த மாத இறுதியில் கலாச்சார விழாக்களில் பங்கு கொண்டு மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். எனினும், சிலர் உங்களுக்கு எதிராக பகைமை பாராட்டக் கூடும். எனவே, பொது ஜனத் தொடர்புகளில் நீங்கள் கவனமாக இருப்பதும், பிறருடன் பழகும் பொழுது சமயோசிதமாக செயல்படுவதும் நல்லது. இந்த நேரத்தில் சிலர், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது உடல் அசதியை ஏற்படுத்தும். உங்கள் உணவிலும் கவனம் தேவை. இது குறித்து, உரிய மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது நல்லது. பொதுவாக, வாழ்வில் வளங்களை அனுபவித்து மகிழும் காலமாக இது இருக்கும்.
விருச்சிக ராசி - காதல் / திருமணம்
உங்கள் வாழ்க்கை இப்பொழுது அமைதியாகச் செல்லும். துணையுடன் நெருக்கம் கூடும். பரிசுப் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுத்து, நீங்கள், உங்கள் அன்புத் துணையை மகிழ்விக்கும் காலம் இது. மேலும், உறவுகளும் வலுப்பெறும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இன்பமாகச் செல்லும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
விருச்சிக ராசி - நிதி
பொருளாதார ரீதியாக இந்த மாதம் உங்களுக்கு மிகச் சிறந்த மாதமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக மகிழ்ச்சியுடன் பணம் செலவு செய்வீர்கள். இதனால், செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது; ஆகவே செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை
விருச்சிக ராசி - வேலை
வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். இவை உங்களுக்குப் பாராட்டைப் பெற்றுத் தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்; இதனால் பணிச் சுமை குறையும். ஆனால், பணியிடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, சில நேரங்களில் வேலைகள், சுமுகமாக நடைபெறாமல் போகலாம். இது போன்ற தருணங்களில், வேலைகளை முடிக்க நீங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை
விருச்சிக ராசி - தொழில்
இந்த மாதம் தொழில் சுமாராக நடக்கும். கூட்டாளிகளிடமிருந்து வழக்கமான ஆதரவு கிடைக்கும். எனினும், நீங்கள் விடா முயற்சியுடன் கடினமாக உழைத்தாலும், இப்பொழுது உங்களுக்குக் கிடைக்கும் பலன் குறைவாகவே இருக்கக் கூடும். அங்கீகாரமும் சாதாரணமாகவே இருக்கும். நீங்கள் சில பணிகளை சரிவர முடிக்க முடியாத நிலையும் ஏற்படலாம். அது போன்ற வேலைகளில் நீங்கள் விசேஷ கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொண்டு, அவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், நீங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
விருச்சிக ராசி - தொழில் வல்லுனர்கள்
தொழில் வல்லுனர்களுக்கு, இது அனுகூலம் தரும் மாதமாக இருக்கும். வேலை தவிர, பிற வழிகளிலும் பண வரவு ஏற்படும். வாடிக்கையாளர்கள் மற்றும் சக பணியாளர்களிடம் நீங்கள் பரிவுடன் நடந்து கொள்வீர்கள். பிறரது எண்ணங்களுக்கும் உரிய மதிப்பு அளிப்பீர்கள். இவை உங்களுக்கு நன்மை பயக்கும்.
விருச்சிக ராசி - ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் நேரலாம். பதட்டம், ஒவ்வாமை, கண் பிரச்சினைகள் அல்லது முட்டி வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் அஜீரணக் கோளாறு ஏற்படக் கூடும். எனவே தகுந்த மருத்துவ உதவி பெறவும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
விருச்சிக ராசி - மாணவர்கள்
மாணவர்களுக்கு இது சாதாரண மாதமாகவே இருக்கும். ஆனால், தடைகள், தோல்விகள் போன்றவற்றைக் கண்டு துவண்டு விடாதீர்கள். நம்பிக்கை இழக்காமல், படிப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். தவறான நபர்களிடம் நட்பு கொள்ள வேண்டாம். இதனால் உங்கள் படிப்பு பாதிக்கப்படும். பிறருடன் உரையாடும் பொழுது, கவனம் தேவை.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 5,7,11,12,13,14,16,17,18,19,20,22,23,24,27,28.
அசுப தினங்கள்: 1,2,3,4,6,8,9,10,15,21,25,26,29,30,31.

Leave a Reply