July Monthly Dhanusu Rasi Palangal 2019 Tamil

தனுசு ராசி - பொதுப்பலன்கள்
தனுசு ராசி அன்பர்களே! இது, உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற மாதம் ஆகும். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். தன்னம்பிக்கை மேம்படும். இவை, நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் உத்வேகத்தை அளிக்கும். எனினும், முடிவுகளை எடுக்கும் பொழுது, நீங்கள் உணர்ச்சி வசப்படும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் வளமும், சந்தோஷமும் நிறைந்திருக்கும். நல்ல எண்ணங்கள், உங்களுக்கு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் அளிக்கும். இவை, உங்களுக்கு, நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தரும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். இதன் மூலம் நல்ல பலன்களும் விளையும். எனினும், பயணங்களின் பொழுது உங்கள் ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்தவும். உங்கள் சமூக வாழ்க்கையும் சிறப்பாகவே இருக்கும். உடலளவிலோ, மனதளவிலோ, சில பதட்டங்கள் தோன்றலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, நல்ல ஆரோக்கியத்தைப் பெற்றுத் தரும்.
தனுசு ராசி - காதல் / திருமணம்
உங்கள் காதல் துணையுடன் உறவு சாதாரணமாகத் தொடரும். திருமணமானவர்கள், தங்கள் கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு, அதன் பிறகே எந்த முக்கிய முடிவையும் எடுப்பது நல்லது. உறவுகளில் ஏதாவது பிரச்சினைகள் நேர்ந்தால், அதை நீங்கள் பொறுமையுடன் கையாண்டு, தீர்வு காண வேண்டும். இந்த நேரத்தில், உங்களுக்கு நெருக்கமான சிலர் உங்கள் நடத்தை பற்றி தவறான கருத்து கூறும் வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடும். எனினும், நிலைமை விரைவில் சீராகும். கவலை வேண்டாம்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரக பூஜை
தனுசு ராசி - நிதி
பொருளாதார ரீதியாக சிறந்த பலன் அளிக்கும் காலம் இது. இப்பொழுது, நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து நல்ல பொருள் ஈட்டுவீர்கள். ஊக வணிகம் மூலமும், பணம் சேரும். குறுகிய பயணங்கள், ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றுக்காக பணம் செலவு செய்வீர்கள். இவ்வாறு உங்கள் சேமிப்பு, பயன் தருவதாக அமையும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சனி பகவான் பூஜை
தனுசு ராசி - வேலை
வேலையைப் பொறுத்தவரை, இது சுமாரான மாதமாகவே இருக்கும். சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், அவை தாமதமாகவே உண்டாகும். சில பின்னடைவுகளும் கூட நேரலாம். பணி தொடர்பான முடிவுகள் எடுப்பதில், சிறு தடைகள், குழப்பங்கள் போன்றவற்றை சந்திக்கலாம். எனினும், உங்கள் கடின முயற்சிகளும், நேர்மையான நடவடிக்கைகளும், உங்கள் பெயரையும், புகழையும் மேம்படுத்தும். பணி நிமித்தமாக சில பயணங்களையும், நீங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரிய பகவான் பூஜை
தனுசு ராசி - தொழில்
தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அதிக வாடிக்கையாளர்களால், வருமானம் அதிகாரிக்கும். அதே நேரம், வாடிக்கையாளர்களுடன் உறவும் மேம்படும். இதனால், அதிக வாய்ப்புகளும் உருவாகும். தொழிலில் பெயரும், புகழும் கிடைக்கும். உங்கள் செயல் திட்டங்களும், நல்ல ஆதரவைப் பெற்றுத் தரும். உங்கள் நன்மதிப்பும், வாழ்க்கைத் தரமும் உயரும்.
தனுசு ராசி - தொழில் வல்லுனர்கள்
இந்த காலகட்டத்தில், சாதாரண விஷயங்களுக்குக் கூட நீங்கள் உணர்ச்சி வசப்படக்கூடும். எனவே, உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம், நீங்கள் பிரச்சினைகள் மற்றும் ஏமாற்றங்களிலிருந்து தப்பிக்கலாம். பணியிடத்தில் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். பணிகளை முடிக்க, நீங்கள் கூடுதல் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டி வரலாம். சிலரது நன்மதிப்பிற்கும் பங்கம் வர வாய்ப்பு உள்ளதால், உங்கள் வார்த்தைகளிலும், நடவடிக்கைகளிலும் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு ராசி - ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். பணிச்சுமை காரணமாக பதட்டம் ஏற்படலாம். இதனால், கண்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கக் கூடும். கவனமின்மை மற்றும் தேவையற்ற பயம் காரணமாகவும் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
தனுசு ராசி - மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் நம்பிக்கையோடு கடினமாக உழைப்பீர்கள். இதன் காரணமாக, நல்ல, நீடித்த பலன் கிடைக்கும். நீங்கள், உங்கள் பாடங்களை முறையாகப் படித்து முடிப்பீர்கள். ஆனால், அளவுக்கதிகமான தன்னம்பிக்கை வேண்டாம். இது துன்பம் விளைவிக்கலாம். மேலும், நண்பர்களின் ஆலோசனைப்படி எல்லாம் செயல்பட நினைக்க வேண்டாம். இது ஆபத்தாக முடியும். தியானப் பயிற்சி மேற்கொள்வது, நீங்கள் நம்பிக்கையோடு செயல்பட உதவும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 7,11,12,13,14,16,17,18,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 1,2,3,4,5,6,8,9,10,15,21,25,26,31.
