ரிஷப ராசி - பொதுப்பலன்கள்
ரிஷப ராசி அன்பர்களே! இது, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உகந்த மாதம் ஆகும். இப்பொழுது, நீங்கள் அனைவரிடமும் நட்புணர்வுடன் பழகுவது நல்லது. தவறினால், பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவார்கள். தேவைப்படும் நேரத்தில், வேண்டிய நன்மைகளைச் செய்வார்கள்.
ரிஷப ராசி - காதல் /திருமணம்
உங்களில் சிலருக்கு காதல் மலரும். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு, காதல் துணையுடனான உறவு வலுப்படும். திருமணமானவர்கள், தங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை விரும்பும் வகையில் விருந்து, விழா, கேளிக்கைகளில் பங்கு கொண்டு மகிழ்வீர்கள்; அவர்களையும் மகிழ்விப்பீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரக பூஜை
ரிஷப ராசி - நிதி
உங்கள் நிதிநிலை மேம்படும். பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். வருவாய் உயரும். இப்பொழுது, உங்களது வழக்கமான வேலை, தொழில் போன்றவற்றுடன் கூட, கூடுதல் பணிகளிலும் ஈடுபட்டு, நீங்கள் பொருள் ஈட்டுவீர்கள். சேமிப்புகளைப் பெருக்குவதற்கும், இது அனுகூலமான நேரம் ஆகும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை
ரிஷப ராசி - வேலை
இந்த மாதம் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டு, பணியில் முன்னேற்றம் காண இயலும். உடன் பணியாற்றுபவர்களுடன் சுமுக உறவு நிலவும். இது, அவர்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் பெற்றுத் தந்து, உங்களுக்கு நல்ல பலன் விளைவிக்கும். உங்கள் செயல் திறனும், உயர் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கும். இதனால், பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை
ரிஷப ராசி - தொழில்
சோம்பல், இப்பொழுது, உங்கள் சத்ருவாக மாறலாம். இதனால் உங்கள் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படலாம். ஆகவே, நீங்கள் துடிப்புடன் செயல்பட்டு, உங்கள் பணிகளை, முறையாக, குறித்த நேரத்தில் முடிப்பது நல்லது. பங்குதாரர்களும், தொழிலில் சாக்கு போக்கு சொல்லி, நேரம் கடத்தக் கூடும். ஜாக்கிரதை தேவை. உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், சீரான தொழில் முன்னேற்றத்தை நீங்கள் அடையலாம்.
ரிஷப ராசி - தொழில் வல்லுனர்
தொழில் வல்லுனர்களான நீங்கள், முனைப்புடன் செயல்படும் காலம் இது. கடின முயற்சி மூலம், பணிகளை நீங்கள் சரியாக செய்து முடிப்பீர்கள். ஆயினும், உங்கள் நல்ல பெயரையும், மதிப்பு மரியாதையையும் கெடுக்கும் வகையில், எதிரிகள் சிலர், பணியிடத்தில் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும். இதனால் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இது குறித்து, உஷாராக இருக்கவும்; விழிப்புணர்வுடன் செயலாற்றவும். தவறினால், பின்னடவை சந்திக்க நேரிடும்.
ரிஷப ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும், எனவே இது குறித்துக் கவலை வேண்டாம். இப்பொழுது உங்களிடம், மகிழ்ச்சியும், மனநிறைவும் கூட நிறைந்திருக்கும். இவையும் உங்கள் நல்லாரோக்கியத்திற்குக் காரணமாக அமையும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : சூரியன் பூஜை
ரிஷப ராசி - மாணவர்கள்
இம்மாதம், மாணவர்களின் கல்வி சிறப்பாக அமையும். கவனத்துடனும், உற்சாகத்துடனும் படித்து, குறித்த நேரத்தில், பாடங்களை நீங்கள் முறையாக முடிப்பீர்கள். உங்கள் சமயோசித புத்தி, ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்து, பாராட்டு பெறும். நண்பர்கள் மத்தியிலும், உங்கள் மதிப்பு உயரும். கல்வித் திறன் மற்றும் கடின உழைப்பு காரணமாக, உங்களில் பலர் மேற்படிப்புக்குச் செல்லும் வாய்ப்பும் உருவாகும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி பூஜை
சுப தினங்கள் : 4,5,7,11,12,13,14,18,19,20,22,23,24,27,28,29,30
அசுப தினங்கள் : 1,2,3,6,8,9,10,15,16,17,21,25,26,31

Leave a Reply