x
x
x
cart-added The item has been added to your cart.

July Monthly Kanni Rasi Palangal 2019 Tamil

May 3, 2019 | Total Views : 522
Zoom In Zoom Out Print

கன்னி ராசி - பொதுப்பலன்கள்

கன்னி ராசி அன்பர்களே! இது உங்களுக்கு இனிய மாதமாக இருக்கும். பல துறைகளிலும், குறிப்படத்தக்க முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணிகள் பாராட்டும் அங்கீகாரமும் பெறும். உங்கள் பெருந்தன்மையான குணம், பிரச்சினைகளை நன்கு சமாளித்துத் தீர்க்க உதவும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மனநிறைவு தரும். நல்ல புரிந்துணர்வும், பலரையும் அனுசரித்து நடந்து கொள்ளும் உங்கள் இயல்பும், உறவுகளை வலுப்படுத்தும். மன மகிழ்ச்சிக்காக, வாழ்க்கைத் துணையுடன் வெளியிடங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பும் ஏற்படும். உங்களுக்குள் ஏற்படும் நல்ல மாற்றத்தைக் கண்டு,  நீங்களே ஆச்சரியமும், சந்தோஷமும் அடைவீர்கள். இப்பொழுது உங்கள் பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். தேவைப்படும் நேரத்தில், சேமிப்பிலிருந்து சிறிது பணம் எடுத்துச் செலவு செய்ய வேண்டி வரும். ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும்.  

2019-july-months-rasi-palan-for-kanni

கன்னி ராசி - காதல் / திருமணம்
 
இது அனுகூலமான மாதமாக இருக்கும். காதலோ, குடும்பமோ எதுவாக இருந்தாலும் சரி, துணையுடனான உங்கள் அணுகுமுறை, நட்பின் அடிப்படையில் அமைந்த சுமுகமான ஒன்றாக இருக்கும். இதனால் காதல், குடும்ப உறவுகள் நல்லுறவாக விளங்கும்.

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பகவான் பூஜை

கன்னி ராசி - நிதி  

நிதி தொடர்பான பல நன்மைகளைத் தரும் மாதம் இது. உங்கள் பொருளாதாரத் தேவைகள் முழுமையாக நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்து, லாபம் காணும் வாய்ப்புகளும் உருவாகும். கடன் வாங்கிய தொகைகளை திரும்பச் செலுத்தி, நீங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். ஆனால், இந்த நேரத்தில் நீங்கள் யாருக்கும் கடன் கொடுத்து விடாதீர்கள். அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவது கடினம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.  

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சூரியன்  பூஜை

கன்னி ராசி - வேலை

நீங்கள் நம்பிக்கையுடன் செயலாற்றினால், உங்கள் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க இயலும். இப்பொழுது, நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட, பெரிய வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் உங்களுக்குத் தரும். உங்கள் செயலாற்றல்,  மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். இது, பணிகளை மேலும் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ள உங்களை ஊக்குவிக்கும்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன்  பூஜை

கன்னி ராசி - தொழில் 

தொழில் முன்னேற்றத்திற்காக, நீங்கள் ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள். அதிர்ஷ்டமும் உங்களுக்குக் கைகொடுக்கும். எனவே, சீரிய முயற்சிகளின் மூலம், நீங்கள் நல்ல லாபம் ஈட்டலாம். உங்கள் செயல்பாடுகளும் உரிய பாராட்டுகளைப் பெறும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால், இப்பொழுது, வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம். குறிப்பாக, கூட்டாளியுடன் சேர்ந்து முதலீடு செய்து, கூட்டுத் தொழில் செய்தால் சிறந்த லாபம் காணலாம். 

கன்னி ராசி - தொழில் வல்லுனர்கள் 

தொழில் வல்லுனர்கள் இதுவரை கண்டிராத அற்புத முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் பணி சிறக்கும்; இதனால் உங்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சிலர், எதிர்பாராத தொலை தூரப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. அதன் மூலம் நீங்கள் மனநிறைவு பெறலாம்.  

கன்னி ராசி - ஆரோக்கியம் 

ஆரோக்கியத்தில் இப்பொழுது கவனம் தேவை. பெரிய நோய் நொடிகள் தாக்காவிட்டாலும் கூட, சிறிய அசௌகரியங்களையாவது நீங்கள் உணரக்கூடும். எனவே யோகா போன்றவை செய்வதும், நல்ல ஓய்வெடுத்துக் கொள்வதும் நன்மை தரும். மூத்த குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சைக்காக, செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை

கன்னி ராசி - மாணவர்கள்

மாணவர்களின் திறமை மேம்படும். உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். சில சிறிய விஷயங்களுக்காக நீங்கள் கவலைப்படும் நிலை உருவாகலாம். ஆனால், உங்கள் அறிவுத்திறன் கொண்டு, உங்களால் அவற்றை நன்றாகவே சமாளிக்க முடியும். சில நேரங்களில், வரம்பு மீறிய ஆர்வம் காரணமாக நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் கல்வி தொடர்பான தகவல்களைப் பெறுவதிலும், சில தடைகள் நேரலாம். மேற்படிப்பு குறித்து முடிவெடுப்பதற்கு முன், அதன் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்து, அதன் பின்னரே செயல்பாட்டில் இறங்குங்கள்.

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 4,5,7,11,12,13,14,16,17,18,19,20,22,23,24,28,29,30.
அசுப தினங்கள்: 1,2,3,6,8,9,10,15,21,25,26,27,31

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos