மேஷ ராசி - பொதுப்பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம், வாழ்க்கையில் நீங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். தெளிவான எண்ணங்கள் மற்றும் செயல்களின் மூலம் வெற்றியும் காணலாம். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, சரியான தருணம் இது. ஆகவே, முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியிலும் திருப்தி காண்பீர்கள்; அதற்கான பலன்களையும் உடனடியாகப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நன்கு கலந்து பழகும் வாய்ப்பு ஏற்படும். இது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
மேஷ ராசி - காதல் /திருமணம்
காதல் துணையுடன் உங்கள் உறவு சிறக்கும். பிரச்சினைகளைக் கையாளும் உங்கள் திறனும், துணைவரின் பாராட்டைப் பெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்குத் தக்க துணை அமையும். திருமணமான தம்பதிகளிடையே இணக்கமான, நெருங்கிய உறவு மலரும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மேஷ ராசி - நிதி
இந்த மாதம், நீங்கள் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை காணலாம். முதலீடு குறித்த உங்கள் முக்கிய முடிவுகளும் நல்ல பலன் அளிக்கும். எனினும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். எனவே, அதற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பது நல்லது. உங்கள் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம். பயணங்கள் தொடர்பான எதிர்பாராத செலவுகளும் எழலாம். எனினும் கவலை வேண்டாம். சேமிப்பை வைத்து, செலவுகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை
மேஷ ராசி - வேலை
நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, இந்த மாதம் உங்களைத் தேடி வரும். பணியிடத்தில் உங்கள் தனித் திறனை நன்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகும். உங்கள் சிறந்த பணியும், செயல்திறனும் பாராட்டு பெறும். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை உயரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : கணபதி பூஜை
மேஷ ராசி - தொழில்
தொழிலில் அதிக வாய்ப்புகள் உருவாகும். இவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதம் உங்கள் வாடிக்கையாளர்கள் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது அவசியம். தவிர, பொதுவாகவே இந்த மாதம் நீங்கள் தொழிலில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மாதத்தின் மத்தியில் பணிச்சுமை கூடலாம். எச்சரிக்கையுடன் செயலாற்றுங்கள்.
மேஷ ராசி - தொழில் வல்லுனர்
இம் மாதம் தொழில் வல்லுனர்களுக்கு பணியில் ஆழ்ந்த கவனம் தேவைப்படும். பயணங்கள் அலைச்சல் தரும். இவற்றில் சில, தேவையற்றதாகவும் இருக்கும். இதனால் சோர்வும், உடல் அசதியும் ஏற்படும். உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நீங்கள் சுமூகமான உறவைப் பராமரிப்பது அவசியம். எல்லா செயல்களையும் பொறுமையுடன் கையாள வேண்டிய காலகட்டம் இது. எனவே நீங்கள் அமைதி காப்பது நல்லது.
.
மேஷ ராசி - ஆரோக்கியம்
மேஷ ராசி அன்பர்கள், தங்கள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது. பதட்டமான எண்ணங்கள் காரணமாக இரத்தக் கொதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மனதைக் கட்டுப்படுத்தி, அமைதி பெற யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மேலும், பல நேரங்களில் உங்களுக்குச் சோர்வும் ஏற்படலாம். தவிர, உட்கொள்ளும் உணவிலும் கவனம் தேவை. இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமுள்ள உணவை உண்பது, ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை
மேஷ ராசி - மாணவர்கள்
இந்த மாதம் மாணவர்களான நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஆற்றலுடனும், சுறுசுறுப்புடனும் செயலாற்றுவீர்கள். புது நட்புகளும் உருவாகும். இவை, நீடித்த, பயனுள்ள நட்புகளாகத் தொடரும் வாய்ப்பும் உள்ளது.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி பூஜை
சுப தினங்கள் : 4,5,7,11,16,17,18,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள் : 1,2,3,6,8,9,10,12,13,14,15,21,25,26,31.

Leave a Reply