கும்ப ராசி - பொதுப்பலன்கள்
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளப் பழகுங்கள். உண்மைக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும், நேர்மையான நடத்தையும் உங்களுக்குத் துணைபுரியும். வருமானம் அதிகரிக்கும். தேவையான பணமும் கிடைக்கும். ஆனால், எண்ணங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். குடும்ப வாழ்க்கையில் நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இப்பொழுது உங்கள் கவலைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வாழ்வில் நல்ல மாற்றங்களும் ஏற்படும். பல புதிய பொருட்களை வாங்கி மகிழும் நிலை உண்டாகும். நீங்கள், ஆன்மீகப் பயணங்கள் அல்லது புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். நீங்கள் செய்யும் சிறிய பயணங்கள், உங்களுக்கு சாதகமாக அமையும். எனினும், பயணங்களின் பொழுது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கும்ப ராசி - காதல் / திருமணம்
இந்த மாதம் உங்கள் உறவுகள் நன்றாக இருக்கும். குறிப்பாக, உங்கள் துணையுடனான உறவு முறை சிறப்பாகவே அமைந்திருக்கும். எனினும், வாழ்க்கைத் துணையின் தேவைகளை அறிந்து, அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. இப்பொழுது நீங்கள், குடும்பப் பொறுப்புகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொண்டு, அவற்றை, குறித்த நேரத்தில் சரியாக முடித்து விடுவீர்கள். இதன் விளைவாக, குடும்ப வாழ்வில் அமைதி நிலவும். அது ஒரு இனிய அனுபவமாக விளங்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை
கும்ப ராசி - நிதி
முதலீடுகள் ஆதாயம் தரும். செலவுகள் சிறிது அதிகமாகக் காணப்பட்டாலும், அவை சமாளிக்கும்படியாகவே இருக்கும். பிறருக்கு முன்பு அளித்த கடன் தொகைகளையும், நீங்கள் இப்பொழுது திரும்ப வசூலிக்க முடியும். ஆகவே, இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எனினும், நன்கு யோசித்து, விவேகமான முறையில் பணத்தைச் செலவு செய்வது நல்லது.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: கேது பூஜை
கும்ப ராசி - வேலை
வேலையில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும்; நல்ல முன்னேற்றமும் ஏற்படும். உங்கள் பேச்சு மற்றும் உரையாடல் திறன், புதிய வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். சக பணியாளர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். இதனால் பணிச்சுமை குறையும்; ஆறுதல் கிடைக்கும். இப்பொழுது, சாதாரண முயற்சிகள் செய்வதன் மூலமே, உங்களின் பல எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை
கும்ப ராசி - தொழில்
தொழிலில் சாதாரண பலன்களையே எதிர்பார்க்க முடியும். நீங்கள் கடினமாக உழைத்தாலும், முழு முயற்சி செய்தாலும், இப்பொழுது நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைப்பது அரிது. வாடிக்கயாளர்களின் பாராட்டும் பெரிய அளவில் கிடைக்காது. எனினும், பங்குதாரர்கள் வழக்கமான ஆதரவை அளிப்பர். தொழில் சுமூகமாக நடைபெற, நீங்கள் உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கும்ப ராசி - தொழில் வல்லுனர்கள்
உங்கள் பொறுப்புகளை திட்டமிட்டு மேற்கொள்ள, இந்த மாதம் மிகவும் ஏற்றதாக இருக்கும். பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக, ஒத்துழைப்பு நல்குவார்கள். அலுவலகத்தில், வாகன வசதி கிடைக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். ஆனால், முடிவுகள் எடுப்பதில் சிறிது தடைகளும் குழப்பங்களும் உண்டாகலாம். எனினும், பணித்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள், சிறந்த முடிவுகளை எடுத்து வெற்றி பெற முடியும்.
கும்ப ராசி - ஆரோக்கியம்
உடல்நிலையில் கவனம் தேவைப்படும். உங்கள் அந்தரங்க உறுப்புகளில் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. எளிதில் உணர்ச்சி வசப்படுவதன் மூலம், உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கால்சியம் மற்றும் இரும்பு சத்துள்ள உணவை உட்கொள்வதும், முறையாக ஓய்வு எடுத்துக்கொள்வதும், நல்லாரோக்கியம் பெற உதவும். .
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
கும்ப ராசி - மாணவர்கள்
மாணவர்களுக்குக் கல்வியில், சுமாரான பலன்களே கிடைக்கக்கூடும். சிலர் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தேவையற்ற அதிக சிந்தனையும், மந்தமான உணர்வும் ஏற்படலாம். இதனால் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, மனதை அமைதியாக வைத்துக் கொள்ளப் பழகுங்கள். பாடங்களை கவனத்துடன் படிக்க முயற்சி செய்யுங்கள். பிறருடன் கலந்து பழகுவது, உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இதன் மூலம் பதட்டமான மனநிலை அமைதி பெறும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 5,7,11,12,13,14,16,17,18,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 1,2,3,4,6,8,9,10,15,21,25,26,31

Leave a Reply