கடக ராசி - பொதுப்பலன்கள்
கடக ராசி அன்பர்களே! நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டிய மாதம் இது. எக்காரணத்தைக் கொண்டும் தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படும் உங்களது ஒவ்வொரு செயலும், நல்ல பலன் அளிக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும், சில ஏமாற்றங்கள், தாமதங்களுக்குப் பிறகாவது, நீங்கள் நல்ல பலனை அடைவீர்கள். உங்கள் நோக்கங்களும் நிறைவேறும். இந்த நேரத்தில், நுட்பமான விஷயங்களையும் உங்களால் கவனமாகக் கையாள முடியும். முனைப்புடன் செயலாற்றி, உங்கள் இலக்குகளை எட்டவும் முடியும். பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். ஆயினும் இதைப் பொருட்படுத்தாமல், உங்கள் சேமிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும், உங்கள் உடல்நிலை சுமாராகவே இருக்கும்.
கடக ராசி - காதல் / திருமணம்
உறவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையும் இனிமையாகவே கழியும். ஆயினும், சில நேரங்களில் நீங்கள் நடந்து கொள்ளும் முறை காரணமாக, பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது துணைவருக்கு, உங்களிடம் சில எதிர்பார்ப்புகளும் இருக்கும். நீங்கள் இவற்றையெல்லாம் உணர்ந்து, அவரது எண்ணங்களுக்கு உரிய மதிப்பளித்து நடந்து கொள்வது, குடும்பத்தில் அமைதியையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும். ஆனால், திருமண வயதில் உள்ளவர்களுக்கு, தகுந்த வரன்கள் அமையும் வாய்ப்பு சற்று குறைவாகவே காணப்படுகின்றது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பகவான் பூஜை
கடக ராசி - நிதி
தற்பொழுது உங்கள் பொருளாதார நிலை, நன்றாகவே இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வேறு சில நல்ல வாய்ப்புகளையும் நீங்கள் இப்பொழுது பெற முடியும். ஆனால், சிலர் பண உதவி கேட்டு, உங்களை அணுகலாம். இந்த கோரிக்கைகளை நீங்கள் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில், இவ்வாறு கொடுத்த தொகை, உங்களுக்குத் திரும்பக் கிடைப்பது கடினம்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சுக்கிரன் பூஜை
கடக ராசி - வேலை
இந்த மாதம், வேலையில் நீங்கள் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இப்பொழுது நீங்கள் முழு தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள் என்றாலும், முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது, குழப்பமாக உணர்வீர்கள். மேலும், உங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகக் கூடும் என்பதால், இந் நேரத்தில் நீங்கள் உங்கள் பன்முகத் திறனை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைப்பதற்கான நல்ல வாய்ப்பும் உள்ளது.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை
கடக ராசி - தொழில்
தொழிலைப் பொறுத்த வரை, இது உங்களுக்கு அனுகூலம் தரும் மாதமாக அமையும். நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்தித்து, அவற்றை வெற்றி கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவீர்கள். இந்தக் காலகட்டத்தில், அதிர்ஷ்டமும் படிப்படியாக உங்களைத் தேடி வரும். சமுதாய சேவை, பொதுநலத் தொண்டு போன்ற பணிகளில் உங்களை நீங்கள் அதிகம் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
கடக ராசி - தொழில் வல்லுனர்
தொழில் வல்லுனர்களே, இந்த மாதம் நீங்கள் ஈடுபடும் அனைத்துப் பணிகளிலும், தகுந்த அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் பக்கம் வீசும் அதிர்ஷ்டக் காற்றும், உங்களுக்கு பாராட்டு, பெயர், புகழ் போன்றவற்றைப் பெற்றுத் தந்து, உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். உங்கள் செயல்திறன், எதிர்பாராத ஆதாயங்களையும் பெற்றுத் தரும். உயர் அதிகாரிகள், சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்கள் போன்றவர்களின் தொடர்பு மூலம், உங்களுக்கு நற்பெயர் விளையும்; பல நன்மைகளும் ஏற்படும்.
கடக ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம், உங்கள் உடல்நிலை சுமாராகத் தான் இருக்கும். சிலருக்கு, ரத்தக் கொதிப்பு சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோய் உடையவர்கள், சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது நன்மை தரும். சில நேரங்களில், இனம் காண முடியாத பிரச்சினைகள் கூட, உங்களுக்குக் கவலை அளிக்கக் கூடும். இந்த நேரத்தில், மருத்துவரின் ஆலோசனை பெறுவதும், அதன்படி உணவு முறையைப் பின்பற்றுவதும், உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
கடக ராசி - மாணவர்கள்
மாணவர்களாகிய நீங்கள், இந்த மாதம் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர்களுடன் உரையாடும் பொழுதும், பிறருடன் பேசும் போழுதும் மிகுந்த கவனத்துடன் இருப்பதும் நன்மை தரும். நல்ல ஒழுக்கமானவர்களுடன் மட்டும் நட்புறவை வளர்த்துக் கொள்ளப் பழகுங்கள். படிப்பு தொடர்பான சில முக்கிய விஷயங்களில், நீங்கள் உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படலாம். எனவே, எச்சரிக்கையுடன் உங்கள் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. இப்பொழுது, உங்கள் இசை மற்றும் இலக்கியத் திறமைகள் போன்றவற்றை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உருவாகும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள் : 4,5,7,11,12,13,14,16,17,18,23,24,27,28,29,30.
அசுப தினங்கள் : 1,2,3,6,8,9,10,15,19,20,21,22,25,26,31.

Leave a Reply