விருச்சிக ராசி - பொதுப்பலன்கள்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்று கூறினால் மிகை ஆகாது. உங்கள் காரியங்கள் அனைத்தையும் நீங்கள் செவ்வனே செய்து முடிப்பீர்கள். அதன் மூலம் உங்கள் மதிப்பினை நிரூபிக்கும் வாய்ப்பினையும் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் நீங்கள் பல்வேறு ஆதாரங்கள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் உற்சாகம் மற்றும் நீங்கள் அளிக்கும் ஆதரவைக் கண்டு உங்கள் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சியடைவார்கள். கடினமான சூழ்நிலைகள் காணப்பட்டால் கூட நீங்கள் உங்கள் அறிவுத் திறமையால் வென்று விடுவீர்கள். உங்கள் முன்னேற்றத்த்தை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகளும் உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையிலேயே இருக்கும். பணி நிமித்தமான பயணங்களுக்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். தெய்வ வழிபாடு உங்களுக்கு வலிமை சேர்க்கும். மனதிற்கு ஆறுதல் அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சாதாரணமாக காணப்படும்.
விருச்சிக ராசி - காதல் /திருமணம்
விருச்சிக ராசி காதலர்கள் இந்த மாதம் அனுசரித்து நடந்து கொள்வார்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் தேவை அறிந்து நடந்து கொள்வதன் மூலம் அமைதியான வாழ்க்கை வாழலாம். குடும்பத்தில் இருக்கும் பிறருடனும் கவனமாக உரையாடுவது சிறந்த பலனை அளிக்கும். உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களுடன் நீங்கள் பயணம் செல்வதன் மூலம் ஆத்ம திருப்தி அடைவீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறியும் காலம் இது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
விருச்சிக ராசி - நிதி
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. இந்த மாதம் உங்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீண்ட காலத் திட்டங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இந்த மாதம் பயணங்களும் பயணங்களால் செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செலவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளாவிடில் உங்கள் பணம் கரையும் வாய்ப்பு உள்ளது.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை
விருச்சிக ராசி - வேலை
இந்த மாதம் உங்கள் வேலைகளில் ஏற்படும் பின்னடைவுகளை கடும் முயற்சிகளின் மூலம் நீங்கள் சரி செய்து விடுவீர்கள். இதனால் பாதகமான நிலையிலிருந்து உங்களை காத்துக் கொள்வீர்கள். பணியில் வளர்ச்சியும் காண்பீர்கள். உங்களின் இந்த அசாத்தியமான திறமை உங்கள் மேலதிகாரிகளைக் கவரும். சக பணியாளர்களுடன் சண்டை சச்சரவு இன்றி நல்லுறவை பராமரியுங்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை
விருச்சிக ராசி - தொழில்
வியாபாரத்தில், நீங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். மேலும் வியாபார முன்னேற்றம் மெதுவாகவும் முறையாகவும் அதிகரிக்கும். உங்கள் நடவடிக்கைகள் உங்களை பிறரிடமிருந்து தனித்துவமான நபராக காட்டும். உங்களுடைய விருப்பங்கள் அதிக முயற்சிகளுக்குப் பின் நிறைவேற்றப்படும். விரைவாக பணிகளை முடிக்க சில வேலைகளை உங்கள் கூட்டாளிகளுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.
விருச்சிக ராசி - தொழில் வல்லுநர்
பணியில் முன்னேற்றம் கண்டு நல்லதொரு நிலையை நீங்கள் அடையும் பொன்னான தருணம் இது. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம் உங்கள் வளர்ச்சி கண்டு உங்கள் பணியில் தவறுகள் காணத் தயாராகத் தான் இருக்கும். நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. அதே சமயம் உங்களுக்கு உதவி புரியவும் ஆதரவு தரவும் சில நல்ல உள்ளங்களும் இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவைப் பராமரியுங்கள்.
விருச்சிக ராசி - ஆரோக்கியம்
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் உங்களால் சிறப்பாக செயலாற்ற முடியும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஓய்வும், நல்ல முறையான ஆரோக்கியமான உணவும் சிறந்த ஆரோக்கியத்திற்கு துணை நிற்பவை. இந்த மாதம் உங்களுக்கு வாய்வு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
விருச்சிக ராசி - மாணவர்கள்
விருச்சிக ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பில் சேர இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். கலை மற்றும் கலாச்சார ஆர்வம் அதிகரிக்கும். அதன் மூலம் புதிய நட்பு வட்டம் உருவாகும். கல்வி சம்பந்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள நேரும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,2,3,7,8,10,15,16,17,19,21,22,24,25,26,29,30.
அசுப தினங்கள்: 4,5,6,9,11,12,13,14,18,20,23,27,28.
Leave a Reply