AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

2019 April Month’s Rasi Palan for Simmam

dateMarch 6, 2019

சிம்மம் ராசி  -  பொதுப்பலன்கள்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் அனைத்திலும் நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்களின் சொந்த வாழ்க்கையில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்களின் கடந்த கால எண்ணங்கள் யாவும் இப்போழுது செயல்வடிவம் பெறும். நீங்கள் நினைத்தது யாவும் நிறைவேறும் காலம் இது. எனவே வெற்றி நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.  உங்களின் சந்தோஷமான மனநிலை காரணமாக நீங்கள் அனைவரிடமும் கலகலப்பாகப் பழகுவீர்கள். நீங்கள் வேலை விஷயமாக வெளியிடங்களுக்கு பயணம் சென்று வருவீர்கள். பண வரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இயல்பான இயந்ததிரத்தனமான வாழ்விலிருந்து விடுபட நீங்கள் ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தனிமையை விரட்ட நீங்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் பிறருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். 


 

சிம்மம் ராசி  -  காதல்/திருமணம்

காதலர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே நல்லுறவு காணப்படும். நல்லுறவு மற்றும் நல்லிணக்கம் காரணமாக குடும்பத்தில் அமைதி குடிகொள்ளும். திருமணமாகாதவர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயம் ஆவதற்கான வாய்புகள் கிடைக்கும் 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
 

சிம்மம் ராசி  -  நிதி 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாத நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதை மேலும் சிறப்பாக ஆக்கிக் கொள்ள நீங்கள் நேர்மையாக செயலாற்ற வேண்டும். அதன் மூலம் நீங்கள் பணத்தை பெருக்க முடியும். கையில் பணம் புரளும் போது நீங்கள் சேமிப்பதிலும் நாட்டம் செலுத்துவது உங்களுக்கு இரட்டிப்பு பலனை அளிக்கும். எனவே பொறுமையாகவும் புத்திசாலித் தனமாகவும் செயல்பட வேண்டிய காலம் இது. பண விஷயங்களில் யாருக்கும் எந்த வாக்குறுதியும் நீங்கள் அளிக்காமல் கவனமாக இருங்கள்.

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன்  பூஜை

சிம்மம் ராசி  -   வேலை

இந்த மாதம் உங்கள் பணியிடச் சூழலை சிறப்பாக்கிக் கொள்ள நீங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உங்களின் வெளிப்படை யான பேச்சுத் திறனால் நீங்கள் மேலதிகாரிகளின் மனதைக் கவர்வீர்கள். அவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் யாரிடமும் நீங்கள் பண உதவி கேட்காதீர்கள், குறிப்பாக உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம்.

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை

சிம்மம் ராசி  -  தொழில்

சில சமயங்களில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவுகள் நம் வளர்சிக்கு ஏதுவானதாக அமையும். சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் அந்த மாதிரி சூழ்நிலை காணப்படுகின்றது. உங்கள் தனிப்பட்ட முடிவுகளே உங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும். எனவே உங்கள் செயல் திறனை வளர்த்துக் கொண்டு உற்சாகத்துடன் புதிய பணிகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் பணிகள் ஏதாவது முடிக்காமல் விட்டிருந்தால் அவற்றையும் இப்பொழுது செய்து முடிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. 

சிம்மம் ராசி  -  தொழில் வல்லுநர் 

தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்படும் காரணத்தால் தெளிவாக முடிவுகளை எடுக்கும் மன நிலையில் இருப்பார்கள்.  புதிய சிந்தனைகள் உருவாகும்.  அமைதியாக முயன்று சிறப்பாக செயல்படுவதன் மூலம் சிந்தனைகள் செயல் வடிவம் பெற்று வெற்றிக் கனியை பறிக்கலாம். உங்களின் அதீத முயற்சியும் வேலையில் நீங்கள் காட்டும் கண்டிப்பும் உங்களுக்கு பதவி உயர்வைக் கூட பெற்றுத் தரும்.  

சிம்மம் ராசி  -  ஆரோக்கியம்

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியம் சரியாக இருந்தால் தானே உங்களால் சரியாக செயல்பட முடியும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.  கோப உணர்வு ஆரோக்கியத்தின் எதிரி ஆகும். அதை கட்டுப்படுத்தாவிட்டால் இரத்தக் கொதிப்பு போன்ற உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். எனவே நீங்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உங்களை காத்துக் கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

சிம்மம் ராசி  -  மாணவர்கள்

இந்த மாதம் மாணவர்கள் தங்களின் உறுதியான முயற்சிகள் மூலம் பாடங்களை படித்து முடிப்பார்கள். நீங்கள் தேர்வில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்கள் முயற்சிகள் நீங்கள் விரும்பிய பலன்களை அளிக்கும்.  படிப்பில் உங்கள் செயல்திறன் பற்றி உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படலாம். உங்களில் சிலர்  உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச்  செல்ல நேரிடலாம். சேர்க்கையின் போது ஆவணங்களை முழுமையாகச் சரி பார்ப்பது நல்லது. 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,3,7,8,10,11,12,15,16,17,19,21,22,24,25,26,29,30.
அசுப தினங்கள்: 4,5,6,9,13,14,18,20,23,27,28.


banner

Leave a Reply