மிதுனம் ராசி - பொதுப்பலன்கள்
கடமையே கண்ணாக இருக்க வேண்டிய மாதமாகத் தான் இந்த மாதம் உங்களுக்கு காணப்படுகின்றது. உங்கள் கடமையை நீங்கள் நேர்மையாக எடுக்க வேண்டிய காலமிது. முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவேண்டிய காலமும் இதுவே, எனவே நம்பிக்கையுடன் செயல்படுங்கள். தன்னம்பிக்கையை இழந்து விட்டால் செயல்படுவது கடினமாகி விடும். எனவே நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். என்ன தான் நீங்கள் உங்களை கட்டுப்படுத்திக் கொண்டாலும் சூழ்நிலைக்கேற்பவும் சமாளித்து நடந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்த சூழ்நிலையில் நீங்கள் மன மகிழ்ச்சி வேண்டி வெளியிடங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். அதன் மூலம் மன அமைதியை தேடுவீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் மன அமைதியைக் காணலாம். உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மிதுனம் ராசி - காதல்/திருமணம்
அன்பை நாம் செலுத்தினாலும் அதனை புரிந்து கொள்ள வேண்டியவர் புரிந்து கொண்டால் தான் அதற்கு ஒரு மதிப்பு இருக்கும். இந்த மாதம் உங்கள் அன்பு உங்கள் வாழ்க்கைத் துணையால் நன்கு புரிந்து கொள்ளப்படும். அன்பு குடிகொண்ட இடத்தில் மகிழ்ச்சி இருக்கும் என்பதை சொல்லித் தான் தெரியவும் வேண்டுமா என்ன? இந்த சூழ்நிலையில் நீங்கள் குடும்ப உறவு, குடும்பப் பணிகள் என்று அனைத்திற்கும் முக்கியத்துவம் அளித்து செயல்படுவது நல்லது. எல்லாவற்றையம் ஒரே சமயத்தில் செய்வது சவாலானது என்றாலும் நீங்கள் அதனை எதிர்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் அன்பை வெளிப்படுத்த நீங்கள் குடும்பத்தோடு பயணங்களை மேற்கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மிதுனம் ராசி - நிதி
பொருளாதரத்தை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சாதாரண மாதமாக இருக்கும். புதிய பொறுப்புகளை எடுக்கும் முன்பு நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நீங்கள் தூண்டுதல் பெயரில் எந்தவொரு பொருளையும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும். அது உங்களுக்கு லாபம் அளிக்காமல் போகலாம். சொத்து விவகாரங்களுக்கு, அதாவது சொத்தை வாங்குவதாக இருந்தாலும் சரி அல்லது விற்பதாக இருந்தாலும் சரி அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு அது சாதகமாக இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: ராகு பூஜை
மிதுனம் ராசி - வேலை
வேலை செய்யும் இடத்தில உங்கள் மனப் போராட்டங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம். உங்கள் மனப் போக்கை மேலதிகாரிகளிடம் காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களிடம் அமைதியற்ற நிலை காரணமாக மனம் ஒரு நிலையாக இருக்காது. இந்த நிலையில் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் செயலாற்றினால், நேர்மையாக பணியாற்றினால் பணியிடத்தில் உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை
மிதுனம் ராசி - தொழில்
இந்த மாதம் உங்களிடம் பதட்டம் காணப்படும் என்பதால் நீங்கள் கவனமாகவும், நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். பதட்டம் காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் நீங்கள் உங்கள் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நன்மை அளிக்குமா என்று யோசித்து செயல்படுவது சிறந்தது.
மிதுனம் ராசி - தொழில் வல்லுநர்
உங்கள் பணியில் காணப்படும் பிரச்சினைகளும், பணியில் வளர்ச்சியற்ற நிலையும் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் சிறிது சிந்தித்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதன் மூலம் நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். பணியிடத்தில் உங்கள் நடத்தையும் தாராள மனப்பான்மையும் பெரும் பாராட்டைப் பெறும்.
மிதுனம் ராசி - ஆரோக்கியம்
உணவே மருந்து. எனவே நீங்கள் உங்கள் உணவு முறையில் எவ்வளுவுக்கெவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் ஆரோக்கியம் வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் ஆரோக்கியம் என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : புதன் பூஜை
மிதுனம் ராசி - மாணவர்கள்
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நிறைந்த திருப்தியை அளிக்கும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதால் நீங்கள் சரியான முறையில் முயற்சி செய்வதன் மூலம் கல்வியில் சிறந்த பலன்களைப் பெற இயலும். சிறப்பாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் நீங்கள் நிதி உதவி பெறும் தகுதியைப் பெறுவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 2,3,7,8,10,11,12,15,16,17,19,21,22,24,25,29,30.
அசுப தினங்கள்: 1,4,5,6,9,13,14,18,20,23,26,27,28.
Leave a Reply