துலாம் ராசி - பொதுப்பலன்கள்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணிச்சுமை அதிகமாக இருப்பதை உணர்வீர்கள். ஆனால் அதற்காக எரிச்சல்படாதீர்கள். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பொறுமையாக இருப்பதால் மட்டுமே சிறப்பான நிலையை அடைய முடியும். உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானப் பயிற்சியை செய்யுங்கள். உங்கள் பணியில் எப்பொழுதுமே கவனம் இருக்க வேண்டிய நேரம் இது. தொழில்ரீதியாகச் சிறிது மந்தநிலை தோன்றலாம். உங்களை நீங்களே உத்வேகப்படுத்திக்கொள்ளுங்கள். வேலை விஷயங்களில் கடுமையான உழைப்பு தேவை. என்றாலும் சமூக வாழ்வில் சிறிது ஆறுதல் அடைவீர்கள். உங்களால் ஆர்வத்துடன் செய்யப்படும் வேலைச் சிறப்பாகவே முடிவடையும். எனவே உங்கள் பணியில் ஆர்வம் அவசியம். கடன் அன்பை முறிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் யாரிடமிருந்தும் கடன் வாங்காதீர்கள். திருப்பிக் கொடுக்கும் போது பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கும் போது கட்டுப்பாடான உணவு என்பது முதலில் நினைவில் வரவேண்டும். ஆகவே உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும். ஆரோக்கிய நிலையைப் பொறுத்தமட்டில் மிதமாக இருக்கும்.
துலாம் ராசி - காதல் / திருமணம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை சராசரியாக தோன்றும். காதலில் உண்மை என்பது மிக அவசியம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் காதலரிடம் வாக்குறுதிகளைக் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிக நேரங்களில் அதிருப்தியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தைப் பொறுத்த வரை கணவன்-மனைவி இடையே நேர்மையைக் கடைப்பிடியுங்கள். எதிலும் நிதானம் தேவை. அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் கையாளுங்கள். மணம் ஆகாமல் வரன் தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
துலாம் ராசி - நிதி நிலைமை
துலாம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்கள் கையிலிருக்கும் பணத்தைக் கவனத்துடன் செலவழியுங்கள். நீங்கள் ஏற்கனவே சேமித்த பணம் செலவாகலாம். எல்லாவிதமான பணத்தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுவீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல பணத்தைச் சேமிக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு உதவும்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய் பூஜை
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Leave a Reply