Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 September Month’s Rasi Palan for Meenam

August 21, 2018 | Total Views : 2,254
Zoom In Zoom Out Print

மீனம் ராசி – பொதுப்பலன்கள் மீன ராசிக்காரர்களே நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டிய காலம் இது. கடினமாக உழைப்பீர்கள். உழைப்பின் மீது நீங்கள் வைத்திருக்கும் அதிக நம்பிக்கையே அதற்குக் காரணம். நல்ல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திறமையால் பல சிக்கல்கள் எளிமையான முறையில் தீர்க்கப்படும். கடின உழைப்பு மற்றும் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்கள் இவைகளைத் தாண்டி பொழுது போக்கு மற்றும் பயணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அதற்கு ஏற்ப உங்கள் செலவுகளும் அதிகம் ஆகலாம். பணியிடத்தில் பொதுவாக சுமூகமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே வேலையில் நம்மால் கவனம் செலுத்த முடியும். அதனால் உடன் பணியாற்றும் ஊழியர்களுடன் நட்பு பராமரியுங்கள். இது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும். உங்கள் இயல்பு உங்கள் சுற்றத்தாரை கவர்ந்திழுத்து அவர்களால் உங்கள் புகழ் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை. அன்றாடம் ஏற்படும் சூழல்களை கையாளுவதில் உங்களுடைய பங்கு முக்கியமானதாக இருக்கலாம். வேலைப்பளு என்பது பெரும்பாலும் நாம் எதிர்கொள்வது தான். இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க முன்னுரிமை அளியுங்கள். உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கிய நிலை சாதாரணமாக இருக்கலாம். 2018-september-months-rasi-palan-meenam மீனம் ராசி – காதல் / திருமணம் மீன ராசிக்காரர்கள் காதல்/ திருமண உறவுகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இது போதாதா உங்கள் சந்தோஷத்திற்கு? உங்கள் புத்திசாலித்தனம் உங்கள் மீதுள்ள நன்மதிப்பை மேலும் வலுவாக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு அளிக்கும் ஆதரவு குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிப்பதற்கு உதவும். மணமாகாதவர்கள் நீங்கள் எதிர்பார்த்த நபரை வாழ்க்கைத்துணையாக அடைவீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை மீனம் ராசி – நிதி நிலைமை மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் பணத்தை கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்துச் சரியான முறையில் பார்த்து செலவு செய்யுங்கள். அதிகம் செலவு செய்ய நேர்ந்தால் மற்றவர்களிடமிருந்து கடன் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் யாரிடமும் கடன் பெறாமல் இருப்பது நல்லது.கடன் வாங்கியாவது செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அறவே தவிர்த்திடுங்கள். உங்கள் கையில் உள்ள பணத்தை கொண்டே செலவு செய்யுங்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜை
மீனம் ராசி – வேலை மீன ராசிக்காரர்களே உங்கள் வேலையில் கவனமாக செயல்படுங்கள். அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட உங்களுக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக வேலையை விட்டு நீங்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு கூட உள்ளது. நீங்கள் செய்யும் வேலையில் உங்கள் முழு கவனமும் இருக்கட்டும். பணி நேரங்களில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் உங்கள் மனம் போன போக்கில், நீங்கள் எண்ணியபடியோ அல்லது உங்கள் விரும்பமாக எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். வேலை சம்மந்தமான விஷயங்களில் மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது மிகவும் அவசியம். அதுவே புத்திசாலித்தனமும் கூட. எனவே மொத்தத்தில் உஷாராக இருங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை மீனம் ராசி – தொழில் மீன ராசிக்காரர்களே உங்கள் தொழில் வாழ்க்கை இந்த மாதத்தில் சராசரியான பலன்களைத் தரும். எனினும் அதிக பலனை எதிர்பார்க்காமல் உங்கள் தொழிலை சீராக முன்னெடுத்துச் செல்வதில் கவனமாய் இருங்கள். சில வேலைகளைச் செய்யும் போது உங்களுக்கு அதிக சுமை ஏற்படலாம். குறிப்பாகத் தொழில் கூட்டாளிகளுக்கு பணம் தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். கூட்டாளிகளைச் சரியான முறையில் கண்காணியுங்கள். அதனால் சில நேரங்களில் அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடியவையாக அமையலாம். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து செயல்படுங்கள். மீனம் ராசி – தொழில் வல்லுநர் மீன ராசிக்காரர்களே உங்கள் தொழில் வாழ்க்கை சாதாரணமாக தோன்றினாலும் உங்களுடைய திறமை என்ன என்பதை மேல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அதனால் கவனமுடன் பணியாற்றுங்கள். கடித போக்குவரத்தில் கவனம் தேவை. பொதுவாகத் தகவல் தொடர்புகளைச் சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே தொழிலில் மேம்பாட்டை எதிர்பார்க்க முடியும். நீங்களும் உங்கள் தொடர்புதிறனை சிறப்பாக வெளிப்படுத்துங்கள். சில நேரங்களில் உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் கவனக்குறைவாக இருக்கலாம். இது உங்களுக்குப் பின்னரே தெரியவரும். இதனால் வேலையில் பின்னடைவு ஏற்படும். இதை மனதில் வைத்துக்கொண்டு கவனத்துடன் தொழிலை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். மீனம் ராசி – ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அளவில் அக்கறைச் செலுத்த வேண்டிய மிக முக்கியமான மாதம் ஆகும். சரியான முறையில் கவனிக்கப்படாவிட்டால் அது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பல்வேறு காரணங்களால் போதுமான அளவு ஓய்வு இல்லாமல் போகலாம். இதுவே உங்களுக்கு உடல் உபாதையை ஏற்படுத்தும். செயற்கை உணவை தவிர்த்திடுங்கள். பழம், கீரை வகைகளை அதிகம் சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் உறங்கச் செல்லுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை மீனம் ராசி – மாணவர்கள் மீன ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் மந்தமான நிலை காணப்படுகிறது. அதனால் மனதளவில் சோர்வாகி விடாதீர்கள். நீங்கள் நினைத்தால் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு படிப்பில் உங்கள் கவனத்தை செலுத்த முடியும். அவ்வப்போது உங்கள் எண்ணங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கம் உங்கள் கவனத்தை குறைத்துவிடும். கடிவாளம் போட்ட குதிரையைப் போல உங்கள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். தேவைப்படும் போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உங்கள் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நல்ல தெளிவு பெறுங்கள். இந்த நேரத்தில் குழுவாக மற்ற மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது உங்களுக்குப் பல விதத்தில் நன்மை தான். வகுப்பறையைப் பொறுத்தவரையில் உங்கள் வருகை பதிவேட்டை சரியான முறையில் பராமரியுங்கள். அதிக விடுப்பு எடுக்காதீர்கள். அது சிக்கலை ஏற்படுத்தும். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 8, 10, 11, 18, 19, 20, 24, 29, மற்றும் 30 அசுப தினங்கள்: 9, 12, 17, 22, 25, 28 மற்றும் 31

உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

google play

Leave a Reply

Submit Comment