Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 September Month’s Rasi Palan for Simha

August 21, 2018 | Total Views : 2,166
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி – பொதுப்பலன்கள் சிம்ம ராசிக்காரர்களே இது வரை உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறதை எண்ணி உற்சாகமாக இருங்கள். எப்பேர்ப்பட்ட சவால்களையும் எதிர் கொண்டு வெற்றியடைவீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் வருவாய் நன்றாக இருப்பதால் கையில் இருக்கும் பணத்தை எதிர்காலம் கருதி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறப்பான நேரம். உலகத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு தயாராக இருங்கள். புரியவில்லையா? நீங்கள் வெளிநாடு பறக்க உள்ளீர்கள். அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்ட சொத்தை வாங்கி மகிழ்ச்சியடையப் போகிறீர்கள். இதை விடச் சந்தோஷ தருணம் உண்டா? சமூக அந்தஸ்தில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி மேல் வெற்றி தான். வேலையில் உங்கள் திறமையான செயல்பாட்டால் நல்ல மரியாதை கிடைக்கும். இதனால் பண லாபம் பெறுவீர்கள். ஆரோக்கியம் சம்மந்தமான குறைபாடு எதுவும் இருக்காது. 2018-september-months-rasi-palan-simha சிம்ம ராசி – காதல் / திருமணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் காதல்/திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகிறது. சிறுசிறு விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் விளக்கம் கொடுக்க வேண்டாம். இயல்பாக இருங்கள். ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக இருக்கும் காலம் இது. குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் இருந்துவிட்டால் மற்றவை அனைத்தும் எளிதாக அடைந்துவிடலாம். குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிடுங்கள். மேலும் நீங்கள் நேர்மையாக இருந்தால் அதற்கு ஏற்றப் பலன் உங்களுக்குக் கிடைக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை சிம்ம ராசி – நிதி நிலைமை சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் வேலையைச் சரியானபடி செய்யுங்கள். அதுவே உங்களுக்கு நிறைவு தரும். செலவுகளைக் கண்காணியுங்கள். உங்கள் குடும்பத்தினரில் ஒருவர் அதிகமாக ஆடம்பரச் செலவு செய்யலாம். அதைத் தவிர்க்க முயலுங்கள். பணத்தைச் சரியான முறையில் செலவு செய்வதில் அக்கறை காட்டுவது நல்லது. அவசர தேவைகள் ஏற்படலாம். ஆன்மீக பயணங்களுக்காக செலவு செய்யக்கூடிய நேரமாகவும் இந்தக் காலகட்டம் அமையலாம். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை

 

சிம்ம ராசி – வேலை வேலையைப் பொறுத்தவரையில் இது மன நிறைவைத் தரக்கூடிய மாதமாகக் கருதலாம். வாழ்க்கையில் நல்ல மேன்மை நிலையை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகள் அமைவதைப் பொருத்து தானே உங்களுடைய திறமையை வெளிக்காட்ட முடியும்? எல்லாப் பணிகளிலும் நீங்கள் நினைத்த முடிவு கிடைக்கும். வேலை செய்யும்போது மற்றவர்கள் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். பெரும்பாலும் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பாக்கியுள்ள பணிகளை முடித்துவிடுங்கள். அதுவே உங்களுக்குப் பாராட்டை பெற்றுத்தரும். உடன் பணியாற்றுபவர்கள் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை சிம்ம ராசி – தொழில் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி நிலை சராசரியாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடந்தேறும். கால நேரம் உங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. உங்களின் செயல்பாட்டில் நிலையான தன்மையை கடைப்பிடியுங்கள். அது உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்த மாதத்தில் நடுவே சற்று வேலைப்பளு அதிகமாக இருக்க நேரிடலாம்.. அதிகம் நேரம் கஷ்டப்படுவதற்கு தயாராக இருங்கள். உங்கள் செயல்பாடு நேர்மையாக இருப்பதால் தொழிலில் நினைத்த முன்னேற்றம் கிடைக்கும். சிம்ம ராசி – தொழில் வல்லுநர் செய்கின்ற வேலைக்குச் சரியான ஊதியம் ஒரு பக்கம் நம்மை சந்தோஷப் படுத்தினாலும் அதற்கு மேல் நம்முடைய பணியைப் பாராட்டுவதன் காரணமாக நம் மதிப்பு உயர்ந்தால் அது மேலும் நம்மை உற்சாகப் படுத்தும் அல்லவா? இப்போது அதே நிலைதான் உங்களுக்கும். உங்கள் பணி பாராட்டப்பட்டு வெகுமதி பெறப் போகிறீர்கள். உயர் அதிகாரிகளிடம் நல்ல உறவைப் பராமரியுங்கள். உங்கள் வேலையை நல்ல முறையில் நிறைவு செய்ய உங்கள் தன்னம்பிக்கை பெரிதும் உதவும். பணி நீட்டிப்பு பெறுவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பும் கிடைக்கும். அந்த வாய்ப்பைத் தவற விட்டு விடாதீர்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள். சிம்ம ராசி – ஆரோக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உடல் நிலையில் பெரிதாக பிரச்சனை ஏதும் இருக்காது. ஆனாலும் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். அன்றாடம் சத்தான உணவைச் சாப்பிடுங்கள். அதிகம் வெளியில் அலையாதீர்கள். உங்களுக்குத் தூசியினால் ஒவ்வாமை ஏற்படலாம். அதன் காரணமாக தோல் வியாதிகள் உண்டாகலாம். கவனம் தேவை. ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை சிம்ம ராசி – மாணவர்கள் சிம்ம ராசி மாணவர்களுக்குப் படிப்பில் சீரான நிலை இருக்கும். படிப்பில் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளைச் செய்து முடித்து வெற்றி காணப் போகிறீர்கள். சில வேளைகளில் படிப்பு மீது கவனம் ஏற்படவில்லை எனக் கவலை வேண்டாம். சிறிது சிறிதாக உங்கள் கவனம் திரும்பும். உங்களுடைய நேர்மையான நடவடிக்கை உங்களுக்குப் படிக்கும் இடத்தில் நல்ல பெயரை வாங்கித் தரும். உங்கள் மேல் படிப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். குறிப்பாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பீர்கள். அது நல்லபடியாக முடியும். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 4, 5, 8, 9, 12, 13, 19, 20, 22, 23, 29 மற்றும் 30 அசுப தினங்கள்: 3, 10, 11, 15, 24, 26 மற்றும் 28

உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

google play

Leave a Reply

Submit Comment