மிதுனம் ராசி – பொதுப்பலன்கள் உங்கள் கடமைகளை நீங்கள் எளிதாக நிறைவேற்ற இந்த மாதம் உங்களுக்கு ஏதுவாக உள்ளது. முன்னர் செய்து முடிக்காமல் பாதியில் விட்ட பணிகளை இப்பொழுது நீங்கள் செய்து முடிப்பதன் மூலம் உங்களுக்கு பொருளாதார மேம்பாடு மட்டுமன்றி பாராட்டும் சேர்ந்து கிடைக்கும். கிரக நிலைகள் கராணமாக இந்த மாதம் பணி விஷயத்தில் நீங்கள் பயணங்களையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணம் என்றால் நாலு பேரை சந்திக்கத் தானே செய்வீர்கள். எனவே இந்த மாதம் சமூகத்துடன் நல்ல தொடர்பு காரணமாக உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும். என்ன தான் சமூக உறவு சிறப்பாக இருந்தாலும் நம் வீடு தானே நமக்கு சுகமளிக்கும். இதிலும் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு கூட்டுக் குடும்பத்தில் இருப்பதற்கான சந்தர்ப்பம் இந்த மாதம் சாதகமாக அமையும். ஒரே கொண்டாட்டம் தான் உங்களுக்கு. வீடு சமூகம் மட்டுமின்றி தொழிலிலும் உங்களுக்கு சாதகமான பலன். இந்த மாதம் உங்களுக்கு தொழிலில் அந்தஸ்தை பெற்றுத் தரும். எல்லாம் சரியாக இருப்பதால் உங்கள் மனம் மிகவும் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். நீங்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கும் காரணத்தால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம். மிதுனம் ராசி – காதல் / திருமணம் பருப்பில்லாத கல்யாணம் இல்லை. சிக்கலில்லாத வாழ்கை இல்லை என்று கூறலாம்.ஆனாலும் மிதுன ராசியைச் சேர்ந்த காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகளுக்கு சந்தோசம் தரும் விஷயம் என்னவென்றால் உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் இந்த மாதம் தீர்ந்து விடும். கரம் பிடித்து வாழ்க்கைத் துணையாக வந்தவர்/ள் கரம் கொடுத்து ஆதரவு அளிப்பார். இந்த நிலையில் மகிழ்ச்சி தாண்டவமாடும் என்று சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனம் திறந்து பேசி கலந்துறவாட கனிவான காலமாக இந்த மாதம் அமையும். திருமணமாகதவர்கள் வரன் அமையப் பெற்று குடும்ப வாழ்வில் நுழைந்து குதூகலிப்பார்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை மிதுனம் ராசி – நிதி நிலைமை மிதுன ராசிக்காரர்களுக்கு மாத ஆரம்பத்திலேயே மகிழ்ச்சியான விஷயம் தான். நிதிநிலையைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கமின்றி ஸ்திரமான நிலை காண்பீர்கள். உங்களின் முதலீடுகள் மூலமாக இப்பொழுது நல்ல ஆதாயம் காண்பீர்கள். கையில் பணம் புரள ஆரம்பித்து விட்டதே. பிறகென்ன குறை? நீங்கள் நினைத்தை சாதித்துக் கொள்ளுங்கள். பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது ஒரு புறம் என்றால் உங்கள் செலவுகள் குறையும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தானே. எனவே பணத்தை சேமித்து வளமாக வாழுங்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: ராகு பூஜை
மிதுனம் ராசி – வேலை மிதுன ராசிகாரர்களுக்கு தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் முன்னேற்றம் காணப்பட்டு மனதில் திருப்தி பொங்கும். திருப்தியான மன நிலையில் நீங்கள் சிறப்பாக பணி புரியும் காரணத்தால் உங்கள் மீதிருக்கும் மதிப்பு கூடுவதைக் காண்பீர்கள் உங்கள் நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள நீங்கள் இன்னும் சிறப்பாக கவனமுடன் செயல்படுவீர்கள். உங்களோடு பணி புரிபவர்கள் நண்பர்களாக பழகி உங்களை பாராட்டுவது உங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும். இந்த நட்பை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் நல்ல முறையில் பழகுவது இயல்பு தானே. அது உங்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தரும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை மிதுனம் ராசி – தொழில் பொதுவாகவே சூழ்நிலையை திறம்பட புரிந்து கொள்ளும் இயல்புடைய நீங்கள் இந்த மாதம் அதனை விடா முயற்சியாக மேற்கொள்ள வேண்டியிருக்கும். விடுபட்ட பணிகளை எல்லாம் முடிப்பதன் மூலம் நீங்கள் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கலாம். இது உங்களின் நிதிநிலையை மேம்படுத்தும். வியாபாரத்தில் நீங்கள் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் புதிய வாய்புகள் உங்களை நாடி வரும் காலக் கட்டம். அதன் மூலம் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். மிதுனம் ராசி – தொழில் வல்லுநர் நாம் சிறப்பாக வேலை செய்தாலும் பிறரிடம் நற்பெயர் பெற்றால் அதில் கிடைக்கும் உற்சாகமே தனி சுகமளிக்கும். அந்த சுகத்தை நீங்கள் இந்த மாதம் பெற்று குதூகலிப்பீர்கள். இதுவே உங்களுக்கு கிடைத்த வெற்றி என்று நீங்கள் கொண்டாடலாம். ஊரோடு ஒத்து வாழ்தல் தானே நல்லது. எனவே உடன் பணி புரிபவர்களிடம் பரஸ்பர நல்லுணர்வை வளர்த்துக் கொள்வது உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். நீங்கள் பணிபுரியும் இடம் அல்லது துறை மாறுவதற்கு வாய்ப்பு வரும். பயணங்களுக்கான அறிகுறியும் தென்படுகின்றது. மிதுனம் ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் காரணத்தால் நீங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான சிக்கல்களையும் எதிர்கொள்ள தேவை இருக்காது. நல்ல ஆரோக்கியம் என்பதால் சுறுசுறுப்பும் காணப்படும். என்றாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : புதன் பூஜை மிதுனம் ராசி – மாணவர்கள் இந்த மாதம் உங்களுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும் என்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்கள் தாய் தந்தையரை உங்கள் வெற்றியால் பெருமிதம் கொள்ள வைப்பீர்கள். நீங்கள் சிறப்பாக திட்டமிடுவது மட்டுமின்றி அதனை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தவும் செய்வீர்கள். உங்களைத் தேடி வரும் வெளிநாட்டு வாய்ப்பை நீங்கள் தான் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டியிருக்கும் கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 4, 5, 8, 14, 15, 18, 24, 26, 27 மற்றும் 28 அசுப தினங்கள்: 3, 6, 9, 16, 22, 29, 30 மற்றும் 30
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply