விருச்சிகம் ராசி – பொதுப்பலன்கள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது ஏற்றம் தரக்கூடிய நல்ல மாதம். யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். அப்படி வாக்குறுதி அளிக்கக்கூடிய தேவை இருந்தால், பல முறை யோசியுங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் வெளியுலக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்கும். உங்கள் வீடு மற்றும் சொத்துகள் தொடர்பான விஷயங்களைச் சரியான முறையில் பராமரிப்பதற்கோ அல்லது சீர்ப்படுத்துவதற்கோ இது உகந்த நேரம். மேலும் உங்கள் பழக்க வழக்கத்தை விரிவுபடுத்துங்கள். நீங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வி.ஐ.பி ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. வேலையில் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் வீட்டில் விசேஷமான நிகழ்ச்சி நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். சாப்பிடாமல் உடல் நலத்தைக் கெடுத்து கொள்ளாதீர்கள்.
விருச்சிகம் ராசி – காதல் / திருமணம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் காதல்/திருமண வாழ்க்கை சாதாரணமாக காணப்படும். வாயிலிருந்து வரும் வார்த்தையில் அதிக கவனம் வேண்டும். அதனால் உங்கள் பேச்சில் கவனத்தோடு இருங்கள். ஏனென்றால் உங்கள் பேச்சால் உங்கள் வாழ்க்கைத்துணை திடீர் பதட்டம் அடையலாம். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு அவர் சொல்படி நடக்க வேண்டிய காலம் இதுவல்ல. எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன் பல முறை யோசியுங்கள். பாக்கியுள்ள வேலைகளை ஒற்றுமையுடன் கைகோர்த்துச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜைவிருச்சிகம் ராசி – நிதி நிலைமை
இந்த மாதம் உங்கள் பணத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குள் ஒரு வழி ஆகிவிடுவீர்கள். வீணாகச் செலவு செய்யாதீர்கள். கவனமாகச் செயல்படுங்கள். பெரிய அளவிலான பணப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் முன் சிறிய அளவிலான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னோட்டம் பாருங்கள். நண்பர்கள், உறவினர்கள் சரியான நேரத்தில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜைவிருச்சிகம் ராசி – வேலைவிருச்சிக ராசிக்காரர்களே வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் வேலையில் அதிக கவனம் இருக்கட்டும். கவனக்குறைவாக இருக்காதீர்கள். எந்த வேலை முதலில் செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு உங்கள் பணிகளை சிறப்பாகச் செய்து முடியுங்கள். உங்கள் வேலையைப் பார்த்து சில நேரங்களில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை ஏளனப் பார்வை பார்க்கலாம். அதைக் கண்டுகொள்ளாதீர்கள். குறிப்பாகக் கவனத்தோடு வார்த்தையைக் கையாளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடப்பதற்குச் சற்று காலதாமதம் ஏற்படலாம். அதற்காகக் கவலை கொள்ளாதீர்கள். பொறுமை கடலினும் பெரியது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜைவிருச்சிகம் ராசி – தொழில்
விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் உங்கள் தொழிலில் புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள். நீங்கள் செய்யும் சிறு விஷயங்கள் கூட உங்களை உயர்வடைய செய்யும். என் கடமை பணி செய்து கிடைப்பதே என்பது போன்று வேலையில் உண்மையான அர்ப்பணிப்போடும், அக்கறையோடும் செயல்படுங்கள். அது உங்கள் நிலையை உயர்த்தும். பயணத்தின் போது புதிய நபர்களைச் சந்திக்க நேரிடலாம். உங்களுடைய செயல்பாடு அவர்களை ஈர்க்கும். உங்கள் வேலையின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். ஆனாலும் சிக்கனமாக செயல்படுங்கள்.
விருச்சிகம் ராசி – தொழில் வல்லுநர்விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் தொழில் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். கடின முயற்சிகள் மட்டுமே வெற்றியைத் தரும். அதை மனதில் வைத்துச் செயல்படுங்கள். துரிதமான வகையில் பலன்களை பெறுவதற்கு ஏற்றவாறு உங்கள் புத்தியை செயல்படுத்துங்கள். எடுத்த வேலையை முடிப்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு கட்டாயம் தேவைப்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யாதீர்கள். திட்டமிட்டுச் செயல்படுங்கள் வெற்றி உங்களைத் தேடிவரும்.
விருச்சிகம் ராசி – ஆரோக்கியம்
விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு சிறு பிரச்சனையையும் எளிதாக எடுத்துக்கொண்டு அப்படியே விட்டுவிடாதீர்கள். அது சிக்கலாக மாறக்கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு ஏற்றவாறு உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். குறிப்பாகக் கீரை மற்றும் சத்தான உணவுகளை வகைகளை தேர்தெடுத்து உண்ணுங்கள். உடல் வலிமை பெறுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜைவிருச்சிகம் ராசி –மாணவர்கள்
விருச்சிக ராசி மாணவர்களே இது உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்று சொல்லலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை எளிதாகப் பெறப் போகிறீர்கள். படிப்பில் தனி அக்கறை காட்டுங்கள். குழுவாகப் படிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள். அப்போது உங்களுக்குள் சச்சரவுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிக்கலான தருணங்களில் உங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு பிரச்சனையைச் சமாளித்து அதிலிருந்து வெளியே வாருங்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 1, 8, 10, 11, 14, 15, 19, 20, 27, 28, 29 மற்றும் 30
அசுப தினங்கள்: 9, 12, 17, 22, 24, 25 மற்றும் 26
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags: 2018 Viruchigam Rasi Palan September Matha Rasi Palan 2018 Viruchigam Rasi Palangal 2018 September Viruchigam September Month Viruchigam Palan 2018 September Month Viruchigam Palan 2018 2018 Viruchigam Rasi Palan September Matha Rasi Palan 2018 Viruchigam Rasi Palangal 2018 September Viruchigam விருச்சிகம் மாத ராசி பலன் 2018
Leave a Reply