Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

2018 September Month’s Rasi Palan for Mesham

August 21, 2018 | Total Views : 2,369
Zoom In Zoom Out Print

மேஷ ராசி – பொதுப்பலன்கள் மேஷ ராசிக்காரர்களே உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதே மகிழ்ச்சி உங்களையும் வந்து ஒட்டிக்கொள்ளும் அல்லவா. எனவே அனைவரிடமும் அன்பாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுங்கள். முன்னேற்றத்தைப் பற்றிய எண்ணம் எப்போதும் இருந்தாலும் குறிப்பாக உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் இப்போது கவனம் செலுத்துங்கள். எல்லா விஷயங்களிலும் பொறுமையாக செயல்படுங்கள். அவசரப்பட வேண்டாம். வேலை நிமித்தமாகச் செய்யும் பயண திட்டத்தில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எஞ்சியுள்ள பணிகளை முடிப்பதில் அக்கறை காட்டுவதன் மூலம் அவை சரியான நேரத்தில் முடிக்கப்படும். தகவல் தொடர்பில் கவனமாக இருங்கள் அதில் அலட்சியம் காட்ட வேண்டாம் நல்ல பெயர் எடுப்பது மிகக்கடினம் அதனால் உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விழிப்புணர்வோடு இருப்பது நல்லது. வேலையில் இருக்கும் போதே உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் எதிர்காலத்தை முன்னேற்றம் அடையச் செய்யும். வேலையைப் பொறுத்தவரை மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் உங்களுக்கு மனதில் என்ன தோணுகிறதோ அதைச் செய்யுங்கள். நெறிமுறைகளைப் பின்பற்றி நேர்மையான முறையில் வாழுங்கள். அது உங்கள் செல்வாக்கு, புகழ் இரண்டையும் இரண்டு மடங்கு உயர்த்தும். அதிகமான வேலைப்பளுவால் உங்களுக்கு உடல் சோர்வு அவ்வவ்போது ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் உற்சாகம் பெறுவீர்கள். உணவுப் பழக்கத்தை கையாளுங்கள். 2018-september-months-rasi-palan-mesham மேஷ ராசி – காதல் / திருமணம் உங்கள் உறவைப் பொறுத்தவரையில் அதிக சந்தோசத்தை கொடுக்கக்கூடிய நேரம் இது. உறவினர்களிடமும் மற்றவர்களிடமும் அன்பைப் பரிமாறிக்கொள்ளுங்கள். கொடுப்பதினால் மகிழ்ச்சி தருவது அன்பு மட்டுமே. உங்கள் காதல் வாழ்க்கை இன்பமாக இருப்பதோடு மனத்திருப்தியையும் அளிக்கும். அனைவரையும் மகிழ்ச்சியோடு வைத்திருக்க உங்கள் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணையை மகிழ்ச்சி அடைய வைக்கும் நோக்கத்தில் இன்பச்சுற்றுலாவிற்கான திட்டத்தைச் செயல்படுத்துவீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை மேஷ ராசி – நிதி நிலைமை எந்தவொரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு புத்திக்கூர்மையும் எச்சரிக்கை உணர்வும் மிக அவசியம். அந்த வகையில் உங்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நீங்கள் இந்தச் சமயத்தில் புத்திசாலித்தனமாகச் செயல்பட தயாராக இருங்கள். கூடுதல் மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிலையில் உங்கள் நண்பர்களும் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள். குறிப்பாக நண்பர்கள் மூலம் பணத்தை கடனாகப் பெறுவீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பணத்தை சிறிதுசிறிதாக சேமியுங்கள். எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு நீண்ட கால முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யுங்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை

மேஷ ராசி – வேலை மேஷ ராசிக்காரர்களே வேலை என்று சொன்னாலே கடின உழைப்பு, நேர்மையான அணுகுமுறை ஆகியவை அத்தியாவசியமாகும். இவை இரண்டு பண்புகளுமே உங்கள் முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக அமையப் போகிறது. நற்பலன்களை அள்ளித் தரப்போகிறது. மேலும் நீங்கள் தான் மிகச்சிறந்த பணியாளர் என்கின்ற அங்கீகாரத்தைப் பெறுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். அதனால் அதன் அடுத்த நிலையாகத் தன்னம்பிக்கை தானாகவே வந்துவிடும். நீங்கள் செய்கின்ற பணிக்குச் சிறப்பு முன்னுரிமை அளிப்பது உங்கள் நன்மதிப்பை மேலும் உயர்த்தும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நேரம் தவறாமல் பணிக்கு செல்வது, சக ஊழியர்களுடன் நட்புறவு பாராட்டுவது போன்றவை உங்கள் வளர்ச்சிக்க மேன்மேலும் வலு சேர்க்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: கணபதி பூஜை மேஷ ராசி – தொழில் உங்கள் தொழில் வளர்ச்சி சாதாரணமாக தோன்றலாம் ஆனாலும் அதற்காகக் கவலைப்படாதீர்கள். இரவு என்று இருந்தால் பகல் வரத்தானே செய்யும். எனவே மனம் தளராமல் நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி என்பது எளிதாகக் கிடைத்துவிடாது. உங்கள் லட்சியத்தை அடைவதற்குக் கடின உழைப்பும் விடா முயற்சியும் அவசியம். உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதை உணர்வீர்கள் எனினும் அதைப்பற்றி எல்லாம் பெரிதாக சிந்திக்காமல் உங்கள் வேலையில் கவனத்தை திருப்புங்கள். பாக்கியுள்ள வேலைகளை விரைந்து முடியுங்கள். இதனால் எதிர்காலத்தில் பெரிய வெகுமதி உங்களுக்குக் கிடைக்க போகிறது. மேஷ ராசி – தொழில் வல்லுநர் உங்கள் செயல்திறன் நன்கு வெளிப்பட்டு தொழிலில் வல்லமையோடு செயல்படக்கூடிய சாதகமான பலனை அளிக்கக்கூடிய மாதம் இது. எனவே உற்சாகமாக அதை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் அவற்றை மிக எளிதாக முடிக்கக்கூடிய திறமை மேலோங்கும். இதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனையப் போகிறீர்கள். மதிப்பும் மரியாதையும் உயர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து உங்கள் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் அதிக பணிகளும், பொறுப்புகளும் உங்களைத் தேடிவரும். வேலையின் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். நல்ல மனப்பான்மையோடு செயல்பட்டு வெற்றி காணுங்கள். மேஷ ராசி – ஆரோக்கியம் மேஷ ராசிக்காரர்களே ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இந்த மாதம் சாதாரணமாக தோன்றலாம். அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள். உடல் நலம் கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆத்திரம் அறிவை இழக்கச்செய்யும். அதோடு உடல் நலத்தையும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். ஆதலால் ஆத்திரம் வேண்டாம். மனதைச் சந்தோஷமாக அமைதியான முறையில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்தைச் சீராக்கும். உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். நடைப்பயிற்சி மற்றம் தியானப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை மேஷ ராசி – மாணவர்கள் மாணவர்களே நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றியடையப் போகிறீர்கள். சரஸ்வதி அருளால் தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதனால் உங்களுக்கு ஆசிரியர்களிடமும் மதிப்பு உயரும். கல்வியில் நல்ல நிலையை அடைவீர்கள். உங்களுடைய நன்மதிப்பால் முன்னேற்றத்திற்குக் குறைவு இருக்காது. நீங்கள் எதிர்பார்த்தபடி உயர்நிலைப் படிப்புகளுக்கான போட்டி தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையப் போகிறீர்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 4,5, 10,11,12,13, 19,22, 23, 27 மற்றும் 28 அசுப தினங்கள்: 3, 7, 9, 15, 18, 24, 29 மற்றும் 30

உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

google play
banner

Leave a Reply

Submit Comment