x
x
x
cart-added The item has been added to your cart.

2018 September Month’s Rasi Palan for Kumbam

August 21, 2018 | Total Views : 1,803
Zoom In Zoom Out Print

கும்ப ராசி – பொதுப்பலன்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. பண வரவு அதிகம் இருப்பதால் செழிப்பை உணர்வீர்கள். அடுத்து என்ன விரும்பியதை வாங்கும் எண்ணம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த வேலைகளைச் சரியான நேரத்தில் முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். எனினும் ஒரு கை ஓசை எழுப்புமா? அதனால் உங்களுடன் வேலை செய்பவர்களையும் அனுசரித்துச் சென்றால் நீங்கள் விரும்பிய நல்ல பலன்களை அடைவீர்கள். என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். பொதுவாகவே நேர்மையான எண்ணம் நம்மை முன்னேறச் செய்யும் அதை உணர்ந்து உங்கள் எண்ண ஓட்டங்களில் கவனம் செலுத்துங்கள். அதோடு கூட தகவல் தொடர்பு பரிமாற்றம் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். தொழில் என்றாலே அவ்வவ்போது சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதைப் புத்திசாலித்தனமாக தீர்ப்பது உங்கள் கையில் தான் உள்ளது. தொழில் ரீதியான பயணம் என்றாலும் புதிய வகை நண்பர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். ஆனாலும் மிகுந்த கவனம் தேவைப்படும். யாரையும் நம்பி ஏமாறாதீர்கள். குறிப்பாக உங்கள் பொருட்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கிய நிலை சாதாரணமாக தோன்றுகிறது. Aquaries-September-Month-Tamil-Prediction-2018 கும்ப ராசி – காதல் / திருமணம் கும்ப ராசிக்காரர்களுக்கு காதல்/ திருமண உறவைப் பொறுத்தவரையில் சுமாரமாக இருக்கும். உறவைச் சிதைக்கக்கூடிய ஒரு கூர்மையான ஆயுதம் கோபம். உணர்ச்சிவசப்பட்டு கோபத்தை கொட்டிவிட்டு பின் அதற்காக வருந்துவது வீண் செயலாகும். அதனால் வார்த்தைகளை நிதானமாக யோசித்துப் பேசுங்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடக்க முயற்சி செய்யுங்கள். மேலும் எந்தவொரு விஷயத்தையும் சிறப்பாக திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள். மனிதனுக்கு வேலை ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் குடும்பம் என்பது மிக முக்கியம். எனவே குடும்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனைச் சரியாக செய்து முடியுங்கள். இதனால் மற்றவர்களும் உங்களுக்குப் புகழாரம் சூட்டுவார்கள். யாருக்கும் வாய்மொழி உத்தரவாதம் அளிக்காதீர்கள். மொத்தத்தில் எந்தவொரு செயலும் மிகக் கவனமாக செய்யப்பட வேண்டும் என்பதைத் தான் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை கும்ப ராசி – நிதி நிலைமை இந்த மாதம் யாருடைய ஆதரவும் இன்றி உங்கள் பணத்தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்வீர்கள். நிதிநிலைமை நன்றாக இருக்கும் போது செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவது தானே நியாயம். அந்த வகையில் அரசாங்கத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய வரிகளைச் சரியான முறையில் செலுத்தி விடுங்கள். அதே போல இந்தவொரு நல்ல சூழலை சாதகமாகப் பயன்படுத்தி வரும் வருமானத்தை சேமிப்பு செய்யத்திட்டமிடுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு நிபுணர்களிடம் ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. இதைவிடச் சந்தோஷ செய்தி என்னவென்றால் நீங்கள் கொடுத்த கடன்களைத் திரும்ப கேட்டு வாங்குவீர்கள். இது உங்கள் செலவுகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவான நேரமாகக் கருதப்படுவதால் இந்த காலகட்டத்தை சாதுரியமாக பயன்படுத்திக்கொள்வது நல்லது. நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: கேது பூஜை
கும்ப ராசி – வேலை உங்களுக்கு வேலையைப் பொறுத்தவரையில் வேலைப்பளு குறைவாக இருக்கும். சுமாரான பலன்களே கிடைக்கும். எனினும் மனம் தளராதீர்கள். தொழில்துறையில் வெற்றி கண்டவர்கள் பெரும்பாலானோர் கடினமாக உழைத்தவர்கள் என்பதை உலகம் அறியும் எனவே தொழிலில் உயர் நிலையை அடைய அதிக நேரம் செலவு செய்யுங்கள். தன் கையே தனக்கு உதவி என்பது போல உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை நீங்களே தீர்த்து கொள்ள வேண்டிய சூழல் காணப்படுகிறது.. உடன் பணியாற்றும் ஊழியர்களிடம் அன்பு காட்டுங்கள். ஆதரவாக இருங்கள். இதனால் எதிர்காலத்தில் உங்கள் வெற்றிக்கு அவர்கள் துணையாக இருப்பார்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை கும்ப ராசி – தொழில் உங்கள் தொழில் வளர்ச்சி சிறிது மந்தமாக இருப்பதாக உணர்வீர்கள். ஆனால் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறாமல் காலம் தாழ்த்தும் நிலை ஏற்படும். வருத்தம் அடையத் தேவையில்லை. ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்பது நீங்கள் அறிந்தது தானே. எனவே மாற்று நடவடிக்கை மேற்கொண்டு வேலையில் உறுதியான நிலையை அடையுங்கள். உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகரிக்கலாம். சிக்கன நடவடிக்கை எடுத்து அவற்றைச் சரி செய்து கொள்ளுங்கள். வேலையைப் பொறுத்த வரையில் உங்கள் பங்குதாரர்களை கலக்காமல் எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம். இல்லையென்றால் அது சிக்கல்களை உருவாக்கும். கும்ப ராசி – தொழில் வல்லுநர் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் திறமை தான் உங்களுக்குக் கைக்கொடுக்க போகிறது. குறிப்பாகத் தொழில் முறையோடு உங்கள் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளிடம் நட்போடு பழகுவது எல்லா வகையிலும் உதவியாக இருக்கும். சொல்லப்போனால் அதுவே உங்களுக்கு சிறப்பு அங்கீகாரத்தை வாங்கித் தரலாம். நற்பெயர் அங்கீகாரம் இவை கிடைத்துவிட்டாலே சந்தோசத்திற்குப் பஞ்சம் இருக்காது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தப் போகிறது. மேலும் வளர்ச்சி பெறும் வகையில் உங்களுடைய செயல்திறனிலும் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பு மாற்றம் ஏற்படும். எந்த வகை பணியாக இருந்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும் உங்களுடைய முழுமையான பண்புகளால் நிம்மதியுடன் இருப்பீர்கள். கும்ப ராசி – ஆரோக்கியம் கும்ப ராசிக்காரர்களுக்கு உங்கள் உடல் ஆரோக்கிய நிலை சாதாரணமாக இருந்தாலும் அவ்வவ்போது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து தெரிந்து கொள்ளுங்கள். உணவே மருந்து. எனவே உணவு எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாட்டோடு இருங்கள். கட்டுப்பாடு இல்லாத உணவு செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். பெரும்பாலும் வீட்டு உணவை உட்கொண்டு வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். குறிப்பாக எண்ணெய் வகை உணவுகளை அறவே மறந்து விடுங்கள். காய்கறி பழங்களை அதிகம் சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை கும்ப ராசி – மாணவர்கள் கும்ப ராசி மாணவச் செல்வங்களே இப்போது வெற்றி உங்கள் கையில் பழம் சாப்பிட விரும்பினால் காயாக இருப்பது கனியும் வரை காத்திருக்க வேண்டும். அது போல உங்களுடைய வெற்றிக்குச் சிறிது காலம் பொறுமையோடு காத்திருங்கள். படிப்பில் மட்டும் உங்களுடைய முழு கவனமும் இருக்க வேண்டும்.. உங்கள் சொந்த கருத்துகளைச் செயல்படுத்தாமல் அறிவுப் பூர்வமாக யோசித்து எந்தவொரு விஷயத்தையும் செய்யுங்கள். குழுவாகச் சேர்ந்து படிப்பது உங்களுக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும். மேலும். அது உங்களுக்கு ஏராளமான விஷயங்களையும் கற்றுத்தரும். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 7, 8, 14, 15, 18, 22, 23, 27 மற்றும் 28 வது அசுப தினங்கள்: 4 , 6 , 9 , 16, 19 , 24, 25 மற்றும் 29 வது

உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

google play

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos