AstroVed Menu
AstroVed
search
search

September Matha Rasi Palan for Kadagam 2018

dateSeptember 19, 2018

கடக ராசி – பொதுப்பலன்கள் கடக ராசிக்காரர்களே நீங்கள் வெகு நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல நேரம் வந்துவிட்டது. உங்கள் திறமைகளை சிறப்பான முறையில் கையாள வேண்டிய மாதம் இது. வேலை ரீதியாக அதிக பளு இருக்கலாம். அதையெல்லாம் மனதில் போட்டுக் கொள்ளாதீர்கள். சற்று கடினமாக இருந்தாலும் வேலை சரியான முறையில் முடிக்கப்படும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியில் இந்த வலியெல்லாம் போயே போய் விடும். அதனால் ஏற்படும் வெற்றி உங்களைப் புதிய ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க போகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் உணர்ச்சியைக் காட்ட நேரிடலாம். அது உங்களுக்குச் சிக்கலைத் தரும். எனவே உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. உங்கள் அகங்காரத்தை மற்றவர்களிடம் காட்டாதீர்கள். அது எப்போதுமே அழிவைக் கொடுக்கும். உங்கள் தகவல் தொடர்பு திறன் உங்களைப் பாதுகாத்து பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றி விடும். அனைத்து விஷயங்களிலும் ஸ்திரமான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணையால் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம். அதைப் பெரிது படுத்தாதீர்கள். உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். மன அமைதி கிடைக்கும். உங்கள் உடல் நிலை சாதாரணமாக தோன்றும். அன்றாடம் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள். 2018-september-months-rasi-palan-kadagam கடக ராசி – காதல் / திருமணம் கடக ராசிக்காரர்களுக்கு பதட்டத்தைத் தரும் மாதம் இது. உங்களுக்கு சிக்கல்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிக்கல்கள் இல்லாத உறவுகள் எங்கே இருக்கிறது? எந்த வகைப் பிரச்சனையாக இருந்தாலும் உங்கள் மன வலிமையாலும், தன்னம்பிக்கையாலும் அனைத்தையும் சமாளிப்பீர்கள். மனது வைத்துவிட்டால் நம்மால் முடியாத விஷயம் ஒன்று இருக்குமா என்ன? உங்கள் நன்மதிப்பு மேம்படும். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் உங்களுடைய உண்மையான அன்பை வெளிக்காட்டுங்கள். கணவன்-மனைவி உறவு புத்துணர்ச்சி பெற்று மலரும். பழைய விஷயங்களை மறந்துவிடுங்கள். வருங்காலத்தை நினைத்து சந்தோஷமாக வாழுங்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை கடக ராசி – நிதி நிலைமை கடக ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் உறுதியான நிலை உண்டாகும். உறுதித்தன்மை தானே எல்லோரும் எதிர்பார்கின்ற ஒரு விஷயம்? பிறகென்ன சந்தோஷத்திற்கு குறைவே இல்லை. இருப்பினும், செலவுகளைக் கண்காணியுங்கள். சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். திட்டமிட்டுச் செலவு செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே செய்த முதலீட்டில் இருந்து லாபம் கிடைக்கும். இது உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். வங்கி கணக்கில் கணிசமான தொகை உயர்ந்து உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும். பொதுவாக நாம் மற்றவருக்குக் கொடுத்த பணம் திரும்ப வந்தால் அது அதிசயம் தான், அந்த் அதிசயம் உங்களுக்கு இப்போது நிகழும். உங்கள் உறவினர்களிடம் நீங்கள் கொடுத்த பணத்தைத் திரும்ப பெறுவீர்கள். இது உங்கள் மாத செலவுகளுக்கு பெரிதும் உதவும். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை

 

கடக ராசி – வேலை வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. ஆனால் நீங்கள் விரும்பிய விஷயங்கள் இந்த மாதம் நிச்சயமாக நடந்தேறும். தைரியமாக இருங்கள். வேலைப்பளு அதிகமாகக் இருப்பதை உணர்வீக்ள். கடினமான உழைப்பு இருக்கும். அதற்கேற்ற அங்கீகாரம் வேண்டும் அல்லவா? உங்களுடைய வேலைத்திறனை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். இதனால் மன திருப்தி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருங்கள். பொறுத்தார் பூமி ஆள்வார். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்கள் பொறுமையை சோதிப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் கோபத்தை காட்டி விடாதீர்கள். அனைவரிடமும் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன் பூஜை கடக ராசி – தொழில் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலைப் பொறுத்தவரை உங்களுடைய முயற்சிகளைப் பொறுத்து எல்லாம் அமையும். முயற்சியே நாம் அடைய வேண்டிய இலக்கை அடையச் செய்யும். உங்கள் தொழில் சார்ந்த கூட்டாளிகளிடம் கலந்து பேசுங்கள். தொழில் ரீதியாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். எந்தவொரு ஆவணத்திலும் கையொப்பம் போட வேண்டிய சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. அவசரப்பட்டு ஒரு செயலைச் செய்து விட்டு பின்னர் அதற்காக வருந்த வேண்டாம். எடுத்துக் கொண்ட வேலையை மிகச் சரியாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கடக ராசி – தொழில் வல்லுநர் கடக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் காலம் இது. சிறப்பாகச் செயல்பட்டு நல்ல நிலையை அடையப் போகிறீர்கள்..உங்கள் திறமையை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டாதீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் தொழில் திறனைக் கணிப்பார்கள். யாரிடமும் தேவையில்லாமல் வாக்குறுதிகளை வழங்காதீர்கள். வாக்குறுதி வழங்கினால் அதைக் காப்பாற்ற முயற்சியுங்கள். கடக ராசி – ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சாதாரணமாக தோன்றலாம். உணவில் அக்கறை காட்டுங்கள். சத்தான உணவை உண்ணுங்கள். ஆரோக்கியம் தானாகவே மேம்படும். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அதிகம் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. காலை, மாலை உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல் வலிமையோடு காணப்படுவதை உணர்வீர்கள். ஆரோக்கியமான வாழ்வே அனந்தமான வாழ்வு. ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை கடக ராசி – மாணவர்கள் கடக ராசியைக் கொண்ட மாணவர்களுக்குப் படிப்பில் தங்களுடைய திறமையை காட்டும் சிறப்பான நேரம் காதிருக்கிறது. படிப்பைத் தவிர விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுங்கள். உங்கள் ஆர்வத்தை அதிகம் காட்டுங்கள். நீங்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு அனைத்து வகையிலும் பெற்றோர்கள் வலது கரமாக இருப்பார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? உங்களுடைய தவறான எண்ணங்களை அவர்களிடம் காட்டாதீர்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1 7, 10, 11, 19, 27, 28, 29 மற்றும் 30 அசுப தினங்கள்: 9, 12, 22, 23, 26, 28

உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

google play

banner

Leave a Reply