தனுசு ராசி – பொதுப்பலன்கள்
தனுசு ராசிக்காரர்களே தன் கையே தனக்கு உதவி என்பது போல உங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையப் போகிறீர்கள். அனைவரிடமும் வெளிப்படையாகப் பேசும் உங்கள் சிறந்த தன்மையால் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் போது கவனமாகச் செயல்படுங்கள். ஒரு முறைக்குப் பல முறை யோசித்து ஒவ்வொரு விஷயத்தையும் கையாளுங்கள். அது முன்னேற்றத்தைத் தரும். மேலும் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த முன்னேற்றம் காரணமாக அசையும் சொத்து, அசையா சொத்துகளை வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழிலில் உங்கள் பன்முக திறமைகள் வெளிப்படும். அதிக ஆற்றலுடன், மிக உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பல தரப்பட்ட சலுகைகள் உங்களைத் தேடிவரும். குடும்பத்தினருடனும், உங்கள் கூட்டாளிகளுடனும் மகிழ்ச்சியோடு நேரத்தைச் செலவிடப் போகிறீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் பெரியளவில் ஏற்றத்தைத் தரக்கூடிய மாதம் ஆகும்.
தனுசு ராசி – காதல் / திருமணம்
உங்கள் காதல் உறவு உங்கள் இருவரின் அதிக புரிந்துணர்வு காரணமாகவும் தீவிர அன்பினாலும் பலப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு கரும்பைப் போல் இனிக்கும். உங்கள் துணை உங்களை நன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வார். உங்கள் குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்வதும் நம்பிக்கை உணர்வும் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். இந்தக் காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய புது நம்பிக்கையைக் கொடுக்கும். உங்கள் இருவருக்குமான உறவுநிலை மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்ல மதிப்பைப் பெறுவீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை
தனுசு ராசி – நிதி நிலைமை
தனுசு ராசிக்காரர்களுக்கு இது யோகமான மாதமாகும். நீங்கள் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் அதற்கு ஏற்ப செலவுகளும் காத்திருக்கும். பொறுப்புடன் செயல்படுங்கள். உங்களுடைய சொத்து அடமானம் வைத்தோ அல்லது வங்கிக் கடன் பெறுவதன் மூலமோ நன்மைகள் பலவற்றை அடைவீர்கள். கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவது என்பது அரிதினும் அரிதான விஷயமாகி விட்டது. ஆனால் நீங்கள் சாமர்த்தியாக உங்கள் உறவினர்களிடம் கொடுத்த பணத்தை ஒரு வழியாகப் பேசி திருப்பி வாங்கிவிடுவீர்கள். பண விஷயத்தில் நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். குறிப்பாகப் பெற்ற கடனைச் சரியான நேரத்தில் திருப்பி செலுத்திவிடுவீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சனி பூஜை
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Leave a Reply