AstroVed Menu
AstroVed
search
search

2018 March Month’s Rasi Palan for Rishabam

dateSeptember 19, 2018
ரிஷபம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உங்கள் சௌகரியங்களை மேம்படுத்துவதில் உற்சாகமாக இருப்பீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். பணி நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறந்த முதலீடுகளை செய்வதற்கு இது உகந்த மாதம். அது உங்கள் எதிர்காலத்திற்கான சொத்தாக இருக்கும். மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் செயல்களை முடிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ரிஷபம் ராசி - காதல் / திருமணம் மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் உறவில் அனுகூலம் காண்பீர்கள். உறவில் அன்பும் அன்யோன்யமும் காணப்படும். இதனால் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். உங்கள் அன்பின் காரணமாக உங்கள் துணையுடனான உறவில் நல்ல பிணைப்பு காணப்படும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : ராகு ஹோமம் 2018-march-months-rasi-palan-for-rishabam ரிஷபம் ராசி - நிதி நிலைமை அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக மாதத்தின் முதல் பகுதியில் பண வரவை விட செலவுகள் அதிகமாக காணப்படும். இதனால் சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைந்து காணப்படும். இதனால் நீங்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இதனால் சிக்கல்கள் ஏற்படும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் சரியான பாதையில் சென்று பண வரவு காண்பீர்கள். நிதி நிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி பூஜை ரிஷபம் ராசி - வேலை சவால்கள் நிறைந்து காணப்பட்டாலும் மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் பணியில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். பணியில் வளர்ச்சி பெற முன்கூட்டியே திட்டமிடவேண்டியது அவசியம். மாதத்தின் முதல் பாதியில் பயணத்திற்கான வாய்ப்பு உள்ளது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் அதற்கான பலன் கிடைக்கும். ரிஷபம் ராசி - தொழில் மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் தொழில் சிறப்பாக விளங்கும். அதிக லாபம் பெற்றுத் தரும். உங்கள் தொழில் ஸ்திரத்தன்மை காணவும் அதில் வெற்றியின் உச்சத்தை அடையவும் தேவையான தொடக்கம் மாதத்தின் முதல் பாதியில் காணப்படும். நீங்கள் போட்டியாளர்களிடம் எளிதில் வெற்றி பெறுவீர்கள். இந்த மாத இறுதியில் புதிய தொழில் காணவும் வளர்ச்சி பெறவும் வாய்ப்புள்ளது. ரிஷபம் ராசி - தொழில் வல்லுனர்கள் தொழில் வல்லுநர்களுக்கு மாதத்தின் இரண்டாம் பகுதி அனுகூலமாக காணப்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடினமான பணிகளையும் எளிதாக ஆற்ற முடியும். அதன் மூலம் அதிக திருப்தி உண்டாகும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : சனி பூஜை ரிஷபம் ராசி - ஆரோக்கியம் மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் மிதமாக காணப்படும். சளி அல்லது இருமலால் பாதிக்கப்படுவீர்கள். என்றாலும் மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பரிகாரம் ; ஸ்ரீ தன்வந்தரி ஹோமம் ரிஷபம் ராசி - மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும் உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தவும் இது உங்களுக்கு சிறந்த மாதம். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பில் முன்னணி வகிப்பீர்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 1,3,4,6,7,8,13,14,18,19,21,22,23,26,27,28. அசுப தினங்கள்: 2,5,9,10,11,12.15,16,17,20,24,25,29,31.

banner

Leave a Reply

  • pavithra


    is true

    March 10, 2018