மிதுனம் பொதுப்பலன்கள்:நீங்கள்செய்யும் செயல்களின் விளைவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருக்க நீங்கள் விரைந்து செயலாற்ற வேண்டும்.உங்களிடம்இருக்கும் புத்திசாலித்தனத்தின் மூலம் எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்று உணர முடியும்.
மிதுனம் வேலை / தொழில்: ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பதட்டம் காணப்படும். சகபணியாளர்களிடம் நல்லுறவைப் பேணுவது பயனளிக்கும்.
மிதுனம் காதல் / திருமணம்:குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாய் உங்கள் துணையுடன் மோதல் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். நட்பான அணுகுமுறையும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்வதும் நன்மை தரும்.
மிதுனம் பணம் / நிதிநிலைமை: நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். நிதிநிலையைப் பாதுகாக்க திட்டமிடல் அவசியம்.
மிதுனம் ஆரோக்கியம்: மனஅழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். ஓய்வு மற்றும் தியானத்திற்கென சிறிது நேரத்தை ஒதுக்கவும்.