காதலர்களுக்கு இந்த மாதம் தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற மாதம் ஆகும். காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்து காணப்படலாம். வீட்டில் உள்ள வயதில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அமைதி நிலவ சண்டை மற்றும் வாக்கு வாதத்தை தவிர்க்க வேண்டும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்களை அளிக்கும் மாதமாக இருக்கலாம்.