கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பார்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் தலையீடுகள் மற்றும் ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். திருமணம் மற்றும் தொழில் குறித்த விஷயங்களில் பெற்றோரின் சம்மதம் கிட்டும். தொழிலில் நீங்கள் முன்னேற்றம் காண சனி பகவான் உங்களுக்கு உதவியாக இருப்பார். கடவுள் அருளால் தான் எந்த ஒரு செயலும் நடக்கும் என்பதை நீங்கள் உணரும் காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும். மேலும் நாம் தனியாக எதையும் சாதிக்க இயலாது நம்மைச் சுற்றி மனிதர்கள் தேவை என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ளும் காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும்.