Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

செல்வம் வரும் 3 வழிகள் | 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்? | Wealth Creation

February 25, 2020 | Total Views : 1,244
Zoom In Zoom Out Print

செல்வம் என்று கூறப்படும் பதினாறு பேறுகள்:

மனிதர்களாகிய நாம், நமது வாழ்வில் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி பல வளங்கள் பெற்று வாழ விரும்புகிறோம். பெரியோர்கள் கூட பதினாறு பேறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள். இந்தப் பதினாறு பேறுகளையும் இனைத்தே முழுமையான செல்வம் என்று கூறப்படுகின்றது. அவை கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி ஆகியவை

செல்வம் வரும் 3 வழிகள்:

செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவள் லக்ஷ்மி தேவி ஆவாள். திருமகளின் கடாட்சம் இருந்தால் அங்கு எல்லா வகை செல்வங்களும் பொங்கிப் பெருகும். என்றாலும் திருமகளின் இயல்பு அவள் ஓரிடத்தில் நிலையாக இருக்கும் இயல்பு அற்றவள். எனவே செல்வத்தை ஈர்க்க நாம் வாழ்வில் மூன்று வழிகளை கடைபிடிக்க வேண்டும்.

01.திருமகளை ஈர்க்கும் வகையில் இல்லத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத, உபயோகப்படுத்தாத, உடைந்த எந்த ஒரு பொருளையும் வீட்டில் சேர்த்து வைப்பது கூடாது. அவசியம் தேவையெனில் அவற்றை உடனடியாக பழுது பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

02.இல்லத்தில் சண்டை சச்சரவுகள். எதிர் வாதம் செய்தல், விளக்கு ஏற்றும் நேரத்தில் தலை வாருதல், அந்தி சந்தி வேளையில் உணவு உண்ணுதல். புறம் கூறுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். உண்மை பேசுதல் வேண்டும். குடும்ப உறவினர்களிடம் சுமூக உறவு பராமரிக்க வேண்டும்.

03.நித்ய கர்ம அனுஷ்டாங்கங்களை தகுதிக்கும் நேரத்திற்கும் ஏற்ப தவறாமல் செய்ய வேண்டும். பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் லக்ஷ்மி பூஜை செய்வது சாலச் சிறந்தது.

3 தலைமுறைகளை தாண்டி  செல்வம் தங்க என்ன செய்யலாம்?

கிடைக்கும் செல்வத்தை கொண்டு ஏழை எளியவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யலாம். கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்களுக்கு தேவைப்படுவோருக்கு உதவி செய்வதன் மூலம் கிடக்கும் புண்ணியம் உங்கள் செல்வத்தை மூன்று தலைமுறைகளைத் தாண்டி தங்க வைக்கும்.

லக்ஷ்மி அஸ்டோத்த்ரம் கூறி லக்ஷ்மி தேவியை வழிபட வேண்டும். கனகதாரா ஸ்தோத்திர பாராயணம் தினமும் செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பணத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உரிய வகையில் பணத்தை செலவு செய்ய வேண்டும். ஏழை எலியவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக பாவித்து நடந்து கொள்ள வேண்டும். சிவபெருமான் அணிந்திருக்கும் ஆபரணங்களின் முக்கியத்துவம்!!! சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே!!

banner

Leave a Reply

Submit Comment