AstroVed Menu
AstroVed
search
search

Vishnupathi Punyakalam in Tamil | மாசி மாதம் பிறக்கும் போது மகாவிஷ்ணு கோவிலுக்கு போனால் என்ன பலன் தெரியுமா?

dateMarch 2, 2020

ஆலயம் செல்வது சாலவும் நன்று என்று நமது ஆன்றோர்கள் கூறுவார்கள். தினந்தோறும் ஆலயம் சென்று வழிபடுவதன் மூலம் நமது உடல், மனம், மற்றும் ஆன்மாவை நாம் தூய்மை செய்து கொள்ள இயலும். இதனால் நமது வாழ்க்கை தெளிவான நீரோட்டம் போல செல்ல வழி கிடைக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியமா என்று கேட்டால் நம்மில் பெரும்பாலோர் இல்லை என்று தான் கூறுவோம். ஏனெனில் இப்பொழுது நாம் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது மறுக்க முடியாத உண்மை. நம்மால் தினமும் ஆலயம் செல்ல முடியவில்லை என்றாலும். சில முக்கியமான நாட்களிலாவது நாம் ஆலயம் செல்வது நமக்கு நன்மை பயக்கும். இத்தகைய முக்கியமான நாளாக விளங்கும் மாசி மாத பிறப்பு பற்றி காண்போமா?

மாசி மாதமும் விஷ்ணு பதியும்:

தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. அவற்றுள் மாசி மாதம் பத்தாவது மாதமாக வருகின்றது. ஜோதிட ரீதியாக சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கிறார்.

சித்திரை, ஆடி, ஐப்பசி, தை – இந்த நான்கு மாதங்களும் பிரம்மாவுக்குரிய காலங்கள் ஆகும். இதனை விஷு புண்ணிய காலம் என்று கூறுவார்கள்.

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – இந்த நான்கு மாதங்களும் விஷ்ணுவுக்குரிய காலங்கள் ஆகும். இதனை விஷ்ணு பதி புண்ணிய காலம் என்று கூறுவார்கள்.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி - இந்த நான்கு மாதங்களும் சிவனுக்குரிய காலங்கள் ஆகும். இதனை ஷட சீதி புண்ணிய காலம் என்று கூறுவார்கள்.

விஷ்ணுபதி எப்பொழுது நிகழும்?:

நவ கிரகங்களின் நாயகனாக விளங்கும் சக்திவாய்ந்த சூரியன், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய இராசிகளில் நுழையும் போது விஷ்ணுபதி ஏற்படுகிறது. இந்த நிகழ்வு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வருடத்திற்கு நான்கு முறையும் நிகழ்கிறது.

விஷ்ணுபதியில் விஷ்ணுவை வணங்க வேண்டும்:

விஷ்ணுவை வணங்குவதற்கான சிறப்பான சந்தர்ப்பமாக விஷ்ணுபதி காலம் கருதப்படுகின்றது. இந்த காலக் கட்டங்களில் விஷ்ணு பகவானின் ஆற்றல் பிரபஞ்சத்தில் பரவிக் காணப்படும். எனவே இந்த நேரம் அதாவது விஷ்ணுபதி காலங்கள் மிகவும் புனிதமான காலங்களாக கருதப்படுகின்றது. இந்த காலம் மாதம் பிறக்கும் நாளின் பிரம்ம முஹூர்த்த நேரத்தில் இருந்து அடுத்த நாள் அதிகாலை வரை இருக்கும்.விஷ்ணுவின் ஆசீர்வாதங்களைப் பெற ஒரு நல்ல நாளில் ஆஸ்ட்ரோவேட்டில் விஷ்ணு ஹோமாவை (தீ ஆய்வகம்) செய்யுங்கள்.

விஷ்ணுபதி வழிபாடு தரும் பலன்:

புனிதமான விஷ்ணுபதியின் போது விஷ்ணுவின் நாமங்களை உச்சரிப்பதும் அவருக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்துவதும் பக்தர்களுக்கு மகத்தான நலனை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. பகவான் விஷ்ணுவின் அருளால் வாழ்வில் இன்பம் பொங்கும். சகல வளங்களும் பெருகும்.


banner

Leave a Reply