சர்வேஸ்வரனாய் விளங்கும் சிவன் :
சிவன் என்றால் கருணை மிக்கவர், மங்கலமானவர் என்று பொருள். சர்வேஸ்வரன் என்று அழைக்கப்படும் சிவன், சிவ சக்தி வடிவாக விளங்குபவர். சிவபெருமானுக்கு ஆக்கல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் என்ற ஐந்து அருட்சக்திகள் உள்ளன. மூவுலகையும் காத்து ரட்சிக்கும் சிவபெருமான், மூன்று உலகங்களிலும் ஒவ்வொரு அணுவிலும் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர்.
பெரும்பாலும் சிவனை நாம் லிங்க வடிவில் வணங்கினாலும், மனித உருவத்தில் சித்தரிக்கும் போது நாம் வணங்கும் பிற கடவுளின் உருவத்தில் இருந்து சிவனின் உருவம் வேறுபட்டும் தனித்திருப்பதையும் நாம் காணலாம்.சிவபெருமானின் ஆசீர்வாதங்களைப் பெற ஒரு நல்ல நாளில் ஆஸ்ட்ரோவேட்டில் சிவ ஹோமாவை (தீ ஆய்வகம்) செய்யுங்கள்
"சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே!!"
சிவபெருமானின் திரு உருவம்:
கங்காதரன், நாகாபரணன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவ பெருமான், தனது உடலெங்கும் சாம்பலைப் பூசிக் கொண்டு, புலித்தோலை உடலில் சுற்றிக் கொண்டு, ஜடா முடியில் கங்கையை தரித்தவராய், பிறை சூடியவராய், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தவராய், வாசுகி எண்ணும் நாகத்தை ஆபரணமாய் அணிந்தவராய், நெற்றிக் கண் உடையவராய் சித்தரிக்கப்படுகிறார்.
சிவபெருமானின் அங்க ஆபரணங்களின் முக்கியத்துவம்:
திருமுகம்: அன்பையும், திருமுடி(ஜடாமுடி) – செருக்கை அகற்றும் குணத்தையும் (அடி முடி கண்ட கதை வாயிலாக உணரலாம்) ஒருமுகப்பட்டு நாம் செயல்பட வேண்டும் என்பதையும் குறிக்கின்றது. முக்கண் – இச்சா சக்தி ஞான சக்தி, கிரியா சக்தி என்ற மூன்று சக்திகளையும், திரிசூலம் – ஆணவம், கண்மம், மாயை எண்ணும் மும்மலங்களை அகற்ற வேண்டும் என்பதை திரிசூலம் உணர்த்துகின்றது. நாகம் – குண்டலினி சக்தியை ஏற்றி, நமது ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகின்றது. கங்கை - வேகம் குறைத்து விவேகத்தை பெற்று மக்கள் ஆனந்தம் அடைய வேண்டும் என்பதையும், எப்பொழுதும் கங்கையின் நீரைப் போல தெளிவான தூய்மையான உள்ளம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது. . தோடு- ஆணவம் எண்ணும் வளையத்திற்குள் அகப்படாத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதையும் காட்டுகின்றது. பிறை சந்திரன் : மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனிதர்கள் உணர வேண்டும். மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்ற தத்துவத்தை உரைப்பதே பிறை சந்திரன் ஆகும். புலித்தோல் : மிருகங்களிடத்தில் கூட அன்பு காட்ட வேண்டும் என்பதையும். மிருக உணர்ச்சிகளுக்கு மனிதர்கள் தங்கள் மனதில் இடம் அளித்தல் கூடாது என்பதையும் குறிக்கின்றது. உடுக்கை: தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது.
சிவபெருமானின் அங்க ஆபரணம் பற்றி நாம் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்வோமா?
உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் சக்தி உள்ளது. சிவன் அணிந்திருக்கும் ருத்திராட்சம் ஈர்ப்பு விசையைக் குறிக்கும் ஆகர்ஷன சக்தியைக் குறிக்கின்றது.
சிவன் நெற்றியில் இருக்கும் விபூதி (சாம்பல்) என்றழைக்கப்படும் திருநீறு சக்தி நிலைகளைக் குறிக்கின்றது. இந்த சக்திகள் யாவும் மையம் நோக்கி குவிவதையே அவரின் நெற்றிக் கண் குறிக்கின்றது.
குவித்து வைத்த இந்த சக்தியின் ஓட்டம் மற்றும் பிரவாகத்தை கங்கை குறிக்கின்றது. அந்த பிரவாக்கத்திற்கு உயிரோட்டம் தருவதை பிறை சந்திரன் குறிக்கின்றது.
விழும் நிலை, விழா நிலை, இடைச் சம நிலை எண்ணும் மூன்று நிலைகளில் நம்மை சமன்படுத்தி ஐம்புலங்களை அடக்கி ஆள்வதை குண்டலினி சக்தியை காக்க வேண்டும் என்பதைசிவனின் நாகாபரணம் உணர்த்துகின்றது.
பூமியும் பிற கோள்களும் சுற்றும் போது ஏற்படும் ஓசை “ஓம்” எண்ணும் பிரணவ ஓசை என்று அறியப்படுவதால் அந்த ஓசையைக் குறிக்கும் அம்சமாக உடுக்கை திகழ்கின்றது.
சிவனையும், சிவனின் ஆற்றலையும் நாம் உணர்ந்து கொண்டால் நம் உடல் உள்ளம், சிந்தனை அனைத்தும் தெளியும் என்பதனை இது உணர்த்துகின்றது.

Leave a Reply