விசுவாசு வருடம் வளமாக அமைய வேண்டுமா?

தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. இந்த சித்திரை புத்தாண்டின் பெயர் விசுவாவசு என்பது ஆகும். இது அறுபது ஆண்டு முறையின் 39-வது ஆண்டாகும். "விசுவாவசு" என்றால் நேர்மையான பண்பாளர், தயாள சிந்தனை உடையவர், செல்வந்தர் என்று பொருள்.
ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டும் சித்திரை முதல் தேதியன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும், இந்த ஆண்டு நமக்கு நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பம் ஆகும். எனவே தான் வருடப் பிறப்பிற்கு முதல் நாள் இரவு பூஜை அறையில் தங்கம், வெள்ளி, கண்ணாடி சிறிது பணம், மஞ்சள் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை வைத்து வருடப் பிறப்பன்று முதலில் அதனைக் காண்பார்கள். அதன் மூலம் வாழ்வில் மங்கலம் பெருகும் என்பது நம்பிக்கை.
நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் சில சமயம் தடைகள் வருவதுண்டு. அவற்றைத் தாண்டித் தான் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் இறை வழிபாட்டை மேற்கொள்வோம். நமது முயற்சிகள் இருந்த போதிலும் இறை அருளும் நமக்கு அவசியம் தேவை. எனவே புத்தாண்டு அன்று நாம் காணும் மங்கலம் வாழ்வில் என்றென்றும் நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
எந்த செயலாக இருந்தாலும் அல்லது எந்த முயற்சியாக இருந்தாலும் நாம் தடைகள் நீங்க முதலில் விநாயகரை வழிபட வேண்டும்.நமது முயற்சிகள் யாவும் எந்த தடையும் இன்றி நடக்க அருள்பவர் அவரே.
தித்திக்கும் புத்தாண்டாக இந்த வருடம் அமைய நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகப் பெருமான் ஆவார். போர்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமான் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் ஆவார். அவரை வணங்குவதன் மூலம் தீவினைகள் யாவும் நீங்கும். உங்களிடம் காணப்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும்.
தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் முருகப் பெருமானுக்கு முன் இரண்டு தீபம் ஏற்றி கீழ்க் கண்ட இந்த மந்திரத்தை ஆறு முறை கூற வேண்டும்.
காலையில் கூற நேரம் இல்லை என்பவர்கள் அல்லது கூற இயலாதவர்கள் மாலையிலும் கூறலாம்.
முருகப் பெருமானுக்குரிய மந்திரம் :
சரவணபவ
ரவணபவச
வணபவசர
ணபவசரவ
பவசரவண
வசரவணப
முருகப் பெருமானின் இந்த மந்திரத்தை மனமுருக வேண்டி ஜெபிப்பதன் மூலம் அவரின் பரிபூரண அருளால் உங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகும்.
