குபேர வசியத்தை ஈர்த்து கொடுக்கும் குபேர யந்திரம்

நமது வாழ்வில் பணம் என்பது அன்றாட தேவையாகி விட்டது. அதனை சம்பாதிப்பதும் சேர்த்து வைப்பதும் பெரிய சாதனையாக உள்ளது. ஒருபுறம் பணம் சம்பாதித்தாலும் மறுபுறம் செலவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு சிலருக்கு, ஏன் பலருக்கு பணத்தை சேமிக்க முடிவதில்லை. எல்லாருக்கும் பணத்தை ஈர்க்கும் சக்தி அமைவதில்லை. அதற்கு லட்சுமி கடாட்சம் தேவை என்று கூறுவார்கள். லட்சுமி என்பவள் செல்வத்திற்கு அதிபதி ஆவாள். எனவே அவள் அருள் உள்ளவர்களிடத்தில் தான் செல்வம் தாண்டவம் ஆடும். அவள் செல்வத்திற்கு அதிபதி என்றால் அந்த செல்வத்தை பாதுகாக்கும் காவலர் குபேரன் ஆவார்.
குபேரன் நிதிகளைக் காப்பவர். செல்வத்தின் பாதுகாவலர். இவர், லட்சுமி தேவி அருளும் செல்வத்தை விநியோகிப்பவராக கருதப்படுகிறார். இந்த பதவி இவருக்கு எவ்வாறு கிடைத்தது? ஒரு முறை இவர் சூழ்ச்சியினால் தனது செல்வம் அத்தனையையும் இழந்து விடுகிறார். அந்த நேரத்தில் அவர் செய்வதறியாது திகைத்து ஈசனை சரண் அடைகிறார். ஈசனும் அவர் மீது கருணை கொண்டு வழிகாட்ட முன்வருகிறார். அவர் சில நெல்லிமரங்களை நட்டு வருமாறு கூறுகிறார். இவ்வாறு அவர் வைத்த நெல்லிமரம் காய்த்து கனி தர தர இவரது செலவ நிலை உயர்கிறது. தான் இழந்த அத்தனை செல்வங்களையும் அடைகிறார். இந்திரன் அமுதம் பருகும் பொழுது அதன் ஒரு துளி பூமியில் விழுந்து அதுவே நெல்லிமரமாக மாறியது. அந்த மரத்தை நட்டு வர அதில் கனிகள் உருவாக உருவாக செல்வ நிலை உயரும் என்பது ஐதீகம்.
எனவே நெல்லிக்கனியை அதிக அளவில் உபயோகிக்க உபயோகிக்க குபேர வசியம் உண்டாகும். பணம் ஈர்க்கப்படும். பணத்தை ஈர்க்க வேண்டுபவர்கள் குபேரனின் அருள் பெற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் ஒன்றினைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை வெள்ளி ஹோரையில் ஆரம்பிக்க வேண்டும். ஒரு பச்சை நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிகப்பு நிறத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை எழுதி குபேர யந்திரத்தை தயார் செய்து கொள்ளுங்கள். பணத்தை ஈர்க்க வேண்டும் என்ற உங்கள் வேண்டுதலை மனதார எண்ணிக் கொள்ளுங்கள்.
பிறகு பின்வரும் குபேர மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள்.
குபேர மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் குபேராய வசிய நமஹ !
பிறகு ஐந்து நெல்லிக்கனியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் பூந்திரியை வைத்து விளக்கு ஏற்றி ஆரத்தி செய்யுங்கள்.
யந்திரத்தை உங்கள் பர்ஸ் அல்லது பீரோவில் வைத்துக் கொள்ளலாம். பிரதி வெள்ளிக்கிழமை இதனை நீங்கள் செய்து கொண்டு வாருங்கள். உங்கள் செல்வ நிலை உயர்வதை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.
ஆரத்தி செய்த நெல்லிக்கனியை நீங்கள் சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொண்டு குபேர வசியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
