AstroVed Menu
AstroVed
search
search

உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டுமா? தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!!

dateApril 28, 2025

போட்டி நிறைந்த இந்த உலகில், யார்தான் தேர்வில் சிறப்பாகச் சாதிக்க விரும்ப மாட்டார்கள்? குறிப்பாக மிக முக்கியமான நேரத்தில், சிறப்பாகச் சாதிப்பது மிகவும் கடினம். நம் நாட்டில் வேலைகள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதால், அதனைப்  பெறுவது மிகவும் கடினம். போட்டிகள் நிறைந்த இந்த உலகில், வேலை கிடைக்க வேண்டுமானால் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

எல்லாத் தேர்வுகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்கினால் தான்  வெற்றியின் சாரத்தை  ருசிக்க முடியும்.  ஒரு சாதாரண மாணவர் அனைத்துத் தேர்வுகளிலும் சிறப்பாகச் செயல்படுவது மிகவும் கடினம். எனவேதான், தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஏதேனும் ஜோதிட பரிகாரம்  உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற விரும்பினால், தங்கள்  விதியை அல்லது அதிர்ஷ்டத்தை எதிர்த்துப் போராட பயனுள்ள ஜோதிடபரிகாரங்களை நாடலாம். வெற்றியை அடைய, கடின உழைப்பு மற்றும் படிப்பில் முழு கவனம் செலுத்துவதோடு, இந்தப் பரிகாரங்களையும் நாட வேண்டும்.

தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன் உங்கள் குழந்தை பதற்றமடையத் தொடங்கினால், அல்லது தேர்வின் போது பீதியடைந்து மணிக்கணக்கில் தான் படித்த பாடங்களை மறந்துவிட்டால் என்ன ஆகும். அந்தக் குழந்தை தேர்வில் விரும்பிய மதிப்பெண்களைப் பெறுவது கடினம். அந்த சமயத்தில் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

தேர்வுகளில் வெற்றி பெற பரிகாரம் :

கல்வி என்பது மாணவர்களின் வாழ்க்கையில் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது புத்தக அறிவை மட்டுமல்ல, ஒரு நபரின் மனதையும் வளர்க்கும். இது நமது நாட்டின் தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால் போதுமான கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் பல மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறத் தவறிவிடுகிறார்கள். இந்த விஷயத்தில் தேர்வுகளுக்கான வாஸ்து குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

மாணவர்கள் தங்களால்  எளிதில் கற்கக்கூடிய பாடங்களை மட்டுமே ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். அதனை அவர்கள் வசதியாக உணர்கிறார்கள், மேலும் அவர்களுக்கு கடினமாக தோன்றும் பிற பாடங்களைப் புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால்  ஒருவர் வெற்றி பெற விரும்பினால் எல்லாவற்றையும் பற்றிய அறிவு அவசியம். சில நேரங்களில் மாணவர்கள் கடினமாக உழைத்தாலும், நல்ல மதிப்பெண் பெறத் தவறிவிடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பெற்றோர்கள் மிகவும் பதற்றமடைந்து, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறாததற்கான மறைமுக காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெறாமல் இருப்பதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்படும் விரக்திகளுக்கும் வாஸ்து தோஷம் காரணமாக இருக்கலாம். வாஸ்து குறைபாட்டிற்குப் பின்னால் உள்ள வாஸ்து தோஷம் ஒரு மாணவர் தனது தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவதைத் தடுக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்களுக்கு சில வாஸ்து குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். அதனைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல மதிப்பெண் பெற முடியும். மாணவர்கள் படிக்கும் இடத்தை வாஸ்து நிபுணர் பரிசோதித்தால், ஒரு மாணவர் கல்வி உலகில் சிறந்து விளங்க முடியும் மற்றும் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும். மேலும் அது மாணவர்கள் கவனமுடன் படித்து  நல்ல மதிப்பெண் பெற உதவுகின்றன.

தேர்வில் வெற்றி பெற வாஸ்து பரிகாரங்கள் :

ஒரு மாணவரின் படிப்பு அறை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் அமைந்திருக்க வேண்டும். இந்த திசைகள் மாணவர்களை மிகவும் சுறுசுறுப்பாகவும் கவனம் செலுத்தவும் உதவும். இதன் விளைவாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிழக்கு திசையை நோக்கிப் படிக்க வேண்டும், அதே நேரத்தில் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் படிக்கும் போது வடக்கு திசையை நோக்கிப் படிக்க வேண்டும்.

மாணவர்கள் உத்திரத்திற்கு கீழ் அமர்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும். உத்திரம் என்பது கட்டிடத்தின் சுமையை தாங்கக் கூடியதாகும். அந்த இடத்தில் அமர்ந்து படித்தால் கவனக்குறைவு ஏற்படும். இதனால் மாணவர்களின் படிப்பு திறன் பாதிக்கப்படும்.

சுவர்களின் வண்ணங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒரு மாணவர் படிக்கும் படிப்பு அறையின் சுவர்கள் எப்போதும் துடிப்பான வண்ணங்களால் வரையப்பட வேண்டும். இது அறையின் சூழலை வளமுள்ளதாக ஆக்குகிறது.  இதனால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிக்க முடியும்.  படிக்கும் அறையில் உள்ள விளக்குகளும் பளிச்சென இருக்க வேண்டும். இது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

படிக்கும் அறை இயற்கையான வெளிச்சம் நிறைந்ததாகவும், காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருப்பது அவசியம்.

படிக்கும் குழந்தையின் நிழல், படிக்கும் மேஜை மீது படாமல் இருக்க வேண்டும்.

சுவர்களில் தொங்கும் படங்கள் மற்றும் ஓவியங்கள் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எலும்புக்கூடுகள், சூரிய அஸ்தமனம், டிராகன்கள் அல்லது தீய கதாபாத்திரங்களின் ஓவியங்கள் சுற்றுப்புறத்தை முற்றிலும் எதிர்மறையாக மாற்றுவதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். சூரிய உதயம், ஓடும் கார்கள், ஓடும் குதிரைகள் போன்ற ஓவியங்கள்/படங்களைத் தொங்கவிட வேண்டும், ஏனெனில் அவை மாணவர்களின் ஆற்றல் மட்டத்தை அதிகரித்து அவர்களின் மனநிலையை உயர்த்துகின்றன.

படிப்பு மேசை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். மேஜையை ஒருபோதும் சுவருக்கு எதிராக வைக்கக்கூடாது. படிப்பு மேசையின் முன் போதுமான திறந்தவெளி இருக்க வேண்டும், இதனால் மாணவர்களின் மனதில் புதிய கருத்துக்கள் எழும். புத்தக அலமாரியை ஒருபோதும் பக்கவாட்டில் அல்லது படிப்பு மேசையின் மேல் வைக்கக்கூடாது. புத்தக அலமாரியை படிப்பு மேசையின் மேல் வைத்தால், அது மாணவர்களின் மனதில் படிப்பு அழுத்தத்தை அதிகரிக்கும்.

படிப்பு மேசையில், ஆசிகளைப் பெற ஒரு கடவுளின் சிலையை வைக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட வாஸ்து பரிகாரங்களைப் பின்பற்றினால், மாணவர்களும் வேலை தேடுபவர்களும் வெற்றி பெறுவது உறுதி. இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றினால் அவர்களின் கனவுகள் நிச்சயமாக நனவாகும்.

கணபதியை தினமும் வழிபடுவது மிகவும் அவசியம்.மாணவர்கள்   புதன்கிழமை அன்று  கணபதிக்கு அருகம்புல் மற்றும் லட்டு படைக்க வேண்டும். மாணவனின் அறையில் கணபதியின் சிலை அல்லது புகைப்படம் வைக்கப்பட வேண்டும்.

அதிக முயற்சிக்குப் பிறகும் ஒரு மாணவன் /மானவை  எந்தவொரு தேர்விலோ அல்லது போட்டியிலோ வெற்றி பெறத் தவறினால், பெற்றோர்கள் அவரிடம் / அவளிடம் ஒவ்வொரு நாளும் சிவப்பு மலர், மற்றும் அட்சதை அளித்து அதனை உதய சூரியனுக்கு தண்ணீர் அளித்து படைக்கச் சொல்ல வேண்டும்.

மாணவர்கள் தங்கள் மனதைப் படிப்பில் ஈடுபடுத்த கற்பூரம் மற்றும் படிகாரத்தை படிக்கும் அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் அந்த இடத்தின் எதிர்மறை ஆற்றல் நீக்கப்படுகிறது.

கடின உழைப்புக்குப் பிறகும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாவிட்டால், வியாழக்கிழமை ஒரு ஆன்மீக  தலத்திற்குச் சென்று வாசகர்களுக்கு ஆன்மீகப்  புத்தகங்களை நன்கொடையாக வழங்க வேண்டும்.

ஒரு குழந்தை எழுத விரும்பவில்லை என்றால், அவள்/அவள் படிக்கும் இடம் அல்லது மேசைக்கு அருகில் சரஸ்வதி அன்னையின் படத்தை வைத்து, தினமும் அவளை வணங்கச் சொல்லுங்கள்.

குழந்தைகளின் மனம் சரியாக ஈடுபடும் வகையில் படிக்கும் அறையில் மயில் இறகுகளை வைக்கவும். மயில் இறகுகள் ஒரு இடத்தின் எதிர்மறை சக்தியை நீக்கும் அற்புத சக்தியைக் கொண்டுள்ளன என்று ஜோதிடம் கூறுகிறது. மயில் இறகுகளின் மூலம் கவனத்திறன் மற்றும்  புரிந்துகொள்ளும் சக்திகள் அதிகரிக்கும்.

தேர்வில் விரும்பிய வெற்றியைப் பெற, மாணவர்கள் தேர்வுக்காக வீட்டை விட்டு வெளியேறும்போது தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிட்ட பிறகு வெளியே செல்ல வேண்டும்.

தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பரிகாரங்கள்:

பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பது நல்ல பலனைத் தரும்.

சில துளசி இலைகள், நீர் மற்றும் இனிப்பு மிட்டாய் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும். முறையாகக் கலந்த பிறகு, மாணவர்கள் அதனைப் பருக வேண்டும். இது  நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

தேர்வில் வெற்றி பெறுவதற்கான மேற்கூறிய ஜோதிட பரிகாரங்களை மேற்கொண்டால் மாணவர்கள் முழுமையான வெற்றியைப் பெறுவது உறுதி என்று நம்பப்படுகிறது.

நீங்களும் நம்பிக்கையுடன் முயன்று பாருங்கள்.


banner

Leave a Reply