AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2025 | Viruchigam Rasi Sani Peyarchi Palangal 2023-2025

dateDecember 21, 2022

விருச்சிகம் ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி  அன்பர்களே!  உங்கள்  ராசியில் இருந்து நான்காம் வீடான கும்ப ராசியில் சனி பெயர்ச்சி நடைபெறுகின்றது. இந்த பெயர்ச்சி ஜனவரி 17, 2023 அன்று நடக்கும், இது மார்ச் 29, 2025 வரை கும்ப ராசியில் இருக்கும். சனி உங்கள் ராசியிலிருந்து 3 ஆம் வீட்டையும் 4ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார்.

உங்கள்  ராசியிலிருந்து 4வது வீட்டில் சனி பெயர்ச்சி நடக்கிறது. சனி உங்கள் 3 மற்றும் 4 ஆம் வீடுகளை ஆட்சி செய்கிறார். 3 ஆம் வீடு முயற்சிகள், தொடர்பு மற்றும் இளைய உடன்பிறப்புகளைக் குறிக்கின்றது. 4 ஆம் வீடு தாய், நிலம், வீடு மற்றும் ஆடம்பரமான வசதிகளைக் குறிக்கின்றது. இந்த பெயர்ச்சி சனியின்  சொந்த ராசியான கும்பத்தில் நடக்கப் போகிறது. உங்கள் ராசி நாதன் செவ்வாயுடன் சனிக்கு நல்ல உறவு இல்லாவிட்டாலும், அவர் தனது கடமைகளை  செய்து, தனக்கு சொந்தமான வீடுகளின் குணாதிசயங்களின் பலன்களை வழங்குவார்.

விருச்சிகம் – உத்தியோகம்

தொழில் ஸ்தானம் என்னும் 10 ஆம் வீட்டில் சனியின் 7 ஆம் பார்வை விழுகின்றது. எனவே  பணிச்சுமை அதிகமாக இருக்கும், மேலும் வளர்ச்சியில் தாமதம் இந்த நேரத்தில் மிகவும் பொதுவானது. உங்கள் சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். உங்கள் பணி அட்டவணையைப் பற்றிய தெளிவான திட்டத்தை வைத்திருங்கள், மேலும் முடிக்க முடியும்  என்று  தோன்றும் வேலையை மட்டுமே செய்ய ஒப்புக்கொள்ளுங்கள். புதிய பணி மாற்றம் இருக்கலாம்.  இது  சிக்கலை ஏற்படுத்தக்கூடும்; இருப்பினும் அதை திறமையாக முடிக்க உங்களுக்கு போதுமான திறன்கள் இருக்கும்.

விருச்சிகம் – காதல் / குடும்ப உறவு

தேவை ஏற்படும் போதெல்லாம் அம்மாவின் ஆதரவு இருக்கும். ஆனால் உங்கள் தந்தையின் ஆதரவு தாமதமாகும், மேலும் உறவில் விரிசல் ஏற்படலாம். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை  அமையும். நிம்மதியான வாழ்க்கை அமையும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

விருச்ச்சிகம் – திருமண வாழ்க்கை

கணவன் மனைவி  உறவும் மிகவும் ஆதரவாகவும் சிறப்பாகவும் தெரிகிறது. பரஸ்பர புரிதல் இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுவீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். மேலும் வாழ்க்கையில் அமைதி இருக்கும்.  இருப்பினும், நீங்கள் சில நேரங்களில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அப்படியானால், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, ​​அது உங்கள் உறவை சேதப்படுத்தாது.

விருச்சிகம் – நிதிநிலை

இந்த ஆண்டு, உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் ஆதாயமும் லாபமும் கூடும். சிலர் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வெற்றியையும் பெறலாம். இந்த முதலீடுகள் எதிர்காலத்திற்கான அடித்தளமாக இருக்கும், எனவே தெளிவான திட்டங்களை வைத்திருங்கள். எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கக்கூடும். மேலும் ஆடம்பர வசதிகளுக்காக அதிக செலவு செய்யலாம். நில முதலீடுகள் பலன் தரும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். லாபம் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யலாம்.

விருச்சிகம் – மாணவர்கள்

மாணவர்கள் கல்வியில் பிரகாசிக்கலாம். அவர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த முடியும் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர்களின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள இயலும். ஆராய்ச்சி தொடர்பான  படிப்பு சிறப்பாக   இருக்கும்.  மேலும் முடிவுகள் சிறப்பாக இருக்கலாம். சிலர் உயர்கல்வி படிக்க உதவித்தொகை பெறலாம். போட்டித் தேர்வுகளுக்கு முயலுபவர்கள்  அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெறலாம்

விருச்சிகம் – ஆரோக்கியம்

கருப்பை பிரச்சினைகள் ஏற்படலாம். மற்றும் குடல் பிரச்சினைகள் கூட இருக்கலாம். பெரிய மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறவும். இந்த சனிப்பெயர்ச்சி அர்த்த அஷ்டம சனி என்று அழைக்கப்படுவதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயைக் கட்டுப்படுத்த உதவும் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நேரத்திற்கு உணவு சாப்பிடுங்கள். சரியான உணவை எடுத்துக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

விருச்சிகம் – பரிகாரங்கள்

பிச்சைக்காரர்களுக்கு ஆடை அளியுங்கள் மற்றும்  முதியோர் இல்லங்களுக்கு அளியுங்கள்

சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுங்கள். அகல் விளக்கில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுங்கள்  

ஏழைகளுக்கு உணவளியுங்கள்


banner

Leave a Reply