உங்கள் ராசிக்கு 4வது வீடாகிய மிதுன ராசியில் குருபெயர்ச்சி நிகழும். இந்த பெயர்ச்சி மே 15, 2025, காலை 2:30 மணி யில் இருந்து , ஜூன் 2, 2026 வரை இருக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் இருந்து 8வது, 10வது மற்றும் 12வது வீடுகளில் இருக்கும்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது முன்னேற்றம் தரும் காலக்கட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும். சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பராமரிக்க முயலுங்கள். இது சுமுகமான பணிச்சூழலுக்கு வழி வகுக்கும். குழுப் பணி உங்களுக்கு நன்மை அளிக்கும். குழுப்பணி மற்றும் திறந்த தொடர்புகளின் விளைவாக நீங்கள் சிறப்பாக உங்கள் பணிகளை முடித்து அளிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான நிலை இருக்கும்.
கணவன் மனைவி தங்கள் உறவில் சில சவால்களை சந்திக்க நேரலாம். வெளிப்படையாக பேசாததே அதற்கு காரணமாக இருக்கும். அனுசரிப்பும் விட்டுக் கொடுத்து செல்வதும் உறவில் சுமுக நிலையைக் கொண்டு வரும். வேலை அழுத்தங்கள், குடும்பக் கடமைகள் அல்லது பணப் பிரச்சினைகள் அதிகரிக்கும் போது பதட்டங்கள் எழலாம். எனவே நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டும்.
குடும்பத்தில் இருக்கும். வயதான உறுப்பினர்களுடனும் சுமுகமான உறவு நிலை இருக்கும். அவர்களுடன் பழகுவது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும், அவர்கள் உங்கள் கவலையயை நீக்க ஆலோசனை வழங்குவார்கள். உங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பதை நீங்கள் கடினமாக உணரலாம். உங்களின் அன்பான காதல் துணையுடன் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை.
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்கலாம். இந்த நேரத்தில் ஜலதோஷம் உங்களை பாதிக்கலாம். மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண்கள் பெற இதுவே நல்ல நேரம். நேர்மையாக படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆசிரியர் மற்றும் பெற்றோர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். அதன் மூலம் மாணவர்கள் வெற்றியைப் பெறுவார்கள்.
இந்த காலகட்டம் பொருளாதார வகையில் சில சவால்களைக் கொண்டு வரும். எனவே நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். பட்ஜெட் அமைத்து செலவுகளை மேற்கொள்ள வேண்டும். செலவினங்கள் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்படுங்கள். அற்ப விஷயங்களுக்குச் செலவு செய்யாதீர்கள்; அத்தியாவசியங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
உத்தியோகம்
உத்தியோகத்தைப் பொறுத்தவரை அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் நீங்கள் பதவி உயர்வு பெறலாம். சக பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். நீங்களும் அவர்களுடன் ஒற்றுமையாகப் பணி புரிவீர்கள். நீங்கள் குழுவினருடன் இணைந்து பணி புரியலாம். அதன் மூலம் நிர்வாக இலக்குகளை நீங்கள் எளிதில் அடையலாம். உங்கள் தனிப்பட்ட முன்னேற்றமும் சாத்தியமாகலாம்.நீங்கள் பதவி உயர்வுகளுடன், ஊதிய உயர்வுகளும் பெறலாம். இது உங்களின் கடின முயற்சிக்கான அங்கீகாரமாக இருக்கும்.
காதல் / குடும்ப உறவு
வீட்டில் இருக்கும் வயது மூத்த உறுப்பினர்களுடனான உறவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கலாம். அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். குழந்தைகளைக் கையாள்வது சவாலனதாக இருக்கலாம். அவர்கள் உங்கள் பொறுமையை எல்லையில்லாமல் சோதிக்கலாம். நீங்கள் சில நேரங்களில் பொறுமை இழக்க நேரிடலாம். நீங்கள் அதிக உணர்ச்சி வசப்பட நேரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படையாக தொடர்பு கொள்ளுங்கள்.
திருமண வாழ்க்கை
கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில மோதல்கள் எழலாம். சிறு பேச்சு வார்த்தைகள் தவறான புரிதல்களாக மாறலாம். அதனால் சில சிக்கல்கள் எழலாம். இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதனை சமாளிக்க நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழலாம். அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
நிதிநிலை
நீங்கள் இந்த காலக்கட்டத்தில் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். பட்ஜெட் அமைத்து வரவு செலவுகளை மேற்கொள்வது நல்லது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையானவற்றிற்கு மட்டும் செலவு செய்யுங்கள். இந்த நேரத்தில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து உங்களுக்கு உதவி கிடைக்காது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் உண்மையிலேயே உங்களை சார்ந்து இருக்க வேண்டிய நேரம் இது. இப்போதுள்ள சூழ்நிலையில் சில சுயக்கட்டுப்பாடு பெரிய உதவியாக இருக்கும்.
மாணவர்கள்
ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். இளங்கலை பட்டதாரிகளும் நன்றாகப் படித்து நல்ல தரங்களைப் பெறுவார்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். மாணவர்களின் கவனத் திறன் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் விசாவிற்கான வாய்ப்புகளை பெறலாம்.
ஆரோக்கியம்
குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் சோர்வு, தலைவலி அல்லது இலேசான சளி போன்ற சிறிய வியாதிகள் இருக்கலாம். எனவே,ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாகனம் ஓட்டும் போது, கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்

Leave a Reply