AstroVed Menu
AstroVed
search
search

தினமும் இந்த புகையை வீட்டில் போட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும்

dateJuly 26, 2023

நமது வாழ்க்கை தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீர் என்று ஒரு பின்னடைவு அல்லது தேக்கத்தை நாம் சில நேரங்களில் உணர்வோம். இதற்கு காரணம் கண் திருஷ்டியாக இருக்கலாம். அதன் காரணமாக மனதில் கஷ்டங்கள்,, சஞ்சலங்கள், தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், நிம்மதியின்மை, சுறுசுறுப்பின்மை போன்றவற்றை உணர்வோம். நேர்மறை ஆற்றல் குறைந்து ஒரு எதிர்மறை ஆற்றல் நம்மை ஆக்கிரமித்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். சில சமயங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். வேலையில் பிரச்சினை, வருமானம் போதாமை, வீண் விரயங்கள் இப்படி எதாவது தடைகள் இருக்கலாம். முயற்சிகளில் தடைகள் முன்னேற்றத்தில் தடைகள், உடல் நலக் கோளாறுகள் என நாம் பாதிக்கப்படலாம். இவற்றில் இருந்து எல்லாம் நாம் தப்பிக்கவும் இவை நம்மை அண்டாமல் காக்கவும் செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் காணப் போகிறோம்.

செயற்கை ரசாயனம் இல்லாத இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தொடர்ந்து  48 நாட்கள் தூப சாம்பிராணி போடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் கூடும்.  இதற்கு கரி அல்லது கொட்டாங்கச்சியை பயன்படுத்தி கங்கு (நெருப்பு) பெருக்க வேண்டும். இதனை ஒரு சாம்பிராணி தூபக் காலில் போட்டு அதில் தூபப் பொடியை போட வேண்டும்.  

லவங்கபட்டை, வெட்டி வேர், வெண்கடுகு, கஸ்தூரி மஞ்சள், வசம்பு, குங்குலியம் இவற்றை தூள் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை என இரண்டு வேளையும் தூபம் போட வேண்டும்.    

வீட்டில் இருக்கும் அனைத்து சுவாமி படங்கள், சிலைகள் பணப்பெட்டி, அறைகள், என அனைத்து இடத்திற்கும் தூபம் காட்ட வேண்டும். இதன் மூலம் தன ஆகஷர்சன சக்தி பெருகும். லட்சுமி கடாட்சம் கூடும்  குபேரரின்  அருள் கிட்டும் தொழில் வளம் பெருகும். கண் திருஷ்டி நீங்கும். நிமமதியின்மை போக்கும்.தூக்கமின்மயை நீககும். தரித்திரத்தை விலக்கும். கண் திருஷ்டியயை போக்கும் அமைதி மற்றும்  ஆரோக்கியம் அளிக்கும்.  காற்றில் உள்ள ஈரப்பதத்தை  உறிஞ்சி நுண் கிருமிகளை அழிக்கும். தெய்வீக நறுமணம் பக்தி உணர்வை அளிக்கும்.

தினமும் இந்த புகை போடும் வழக்கத்தை கொண்டு வாருங்கள்.48நாட்கள் தொடர்ந்து தூபம் போட்டு வந்தால். வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள் நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.


banner

Leave a Reply