நீங்கள் சாமி கும்பிடுவது போல கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா?

கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களில் அசைவுகள் காணப்படும் என்று கூறப்படுகிறது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அறிவியலின்படி ஒருவருக்கு ஒரு இரவு தூக்கத்தில் 4 முதல் 7 கனவுகள் வரக்கூடும். இருப்பினும் இவற்றில் எல்லா கனவுகளையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. இதில் கடைசியாக நீங்கள் காணும் ஒரு கனவை மட்டுமே அதிகபட்சமாக நினைவுகொள்ள முடியும். மேலும் சிலருக்கு எந்த கனவுகளும் நினைவில் இருக்காமலும் போகலாம். இவை ஒவ்வொருவரின் மூளையின் செயல்பாட்டை பொருத்தும் மாறுபடும்.
நாம் கண்ட கனவு முழுவதும் நமது நினைவிற்கு வராமல் போகலாம். ஒரு சிலர் தாம் கண்ட கனவை அப்படியே விவரிப்பார்கள். சிலருக்கு அது மறந்தே போயிருக்கும். ஒரு சிலருக்கு கனவின் ஓரிரு காட்சிகள் மட்டும் நினைவில் இருக்கும். அதிகாலையில் நாம் காணும் கனவு பலிக்கும் என்று கூறுவார்கள். அதிகாலையில் நல்ல கனவு வந்தால் எழுந்து கை கால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.. மீண்டும் தூங்கக் கூடாது. அப்பொழுது தான் அந்தக் கனவு பலிதம் ஆகும் என்பார்கள்.
கனவில் பெரும்பாலும் நாம் வாழ்ந்த இடம், நாம் சந்தித்தை மனிதர்கள், நாம் சென்று வந்த ஊர்கள் இப்படி நமது ஆழ்மனதில் இருக்கும் விஷயங்கள் தான் வரும். நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் கனவில் வரும் பொழுது அது பூர்வ ஜென்ம தொடர்பாக இருக்கலாம்.
நீங்கள் சாமி கும்பிடுவது போல கனவு வந்தால் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம். கண்டிப்பாக அதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.உங்கள் ஆசைகளுக்கு நீங்கள் வடிவம் கொடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் எண்ணங்களை செயல்படுத்தப் போகிறீர்கள் என்று அர்த்தம். தெய்வ அருள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
சாமி கும்பிடுவது போல கனவில் வந்தால் காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டில் சாமி கும்பிடுங்கள். பிறகு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று உங்களால் இயன்ற தான, தர்மங்களை செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஆழ் மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் உடனே நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
