AstroVed Menu
AstroVed
search
search

விபூதி என்னும் திருநீற்றை பூசும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

dateJuly 5, 2023

நமது சரீரத்தில் சிவ சின்னமாக பூசுவது விபூதி ஆகும். இதனை திருநீறு என்றும் கூறுவார்கள். விபூதி என்பது பசுவின் சாணத்தில் இருந்து  தயாரிக்கப்படுகிறது. இதனை ரட்சை என்றும் கூறலாம்.

விபூதி தரிக்கும் திசை:

வடக்கு அல்லது கிழக்கு முகமாக இருந்து விபூதி தரித்தல் வேண்டும்.

விபூதி தரிக்கும் முறை

நிலத்திலே சிந்தாமல் அண்ணாந்து சிவ சிவ என்று கூறி வலது கை நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும். அல்லது நடுவிரல் மற்றும் மோதிர விரலில் எடுத்து தரிக்க வேண்டும். தலையைக் கவிழ்ந்து கொண்டு விபூதியை தரித்தல் ஆகாது. மோதிர விரல் மற்றும் கட்டை விரலை இணைத்து விபூதி எடுத்து தரிப்பதன் மூலம் காரிய சித்தி ஏற்படும்.விபூதியை  நிலத்தில் சிந்தினால் அதனை எடுத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

விபூதியை ஒரு விரலில் வைத்து தரித்தல் அவ்வளவு உசிதமல்ல. அப்படி தரிக்க நேர்ந்தால் மோதிர விரலில் வைத்து தரிக்க வேண்டும். கட்டை விரலில் தரித்தால் தீராத வியாதியும் நடு விரலால் தரித்தால் நிம்மதியின்மையும் சுண்டு விரலால் தரித்தால் கிரக தோஷமும் ஏற்படும்

விபூதி தரிக்கும் நேரம்:

சூரிய உதயத்திலும்   சந்தியாகாலம் சூரிய அஸ்தமன சமயத்திலும் குளிப்பதற்கு முன்னும் பின்னும், பூஜைக்கு முன்னும் பின்னும் போஜனம் செய்வதற்கு முன்னும் பின்னும் மல ஜலம் கழிப்பதற்கு முன்னும் பின்னும் விபூதி தரிக்கலாம்.

Leave a Reply