ஜூலை முதல் வாரத்தில் நிகழும் 3 கிரக பெயர்ச்சிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கிரகங்கள் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கின்றன. இதனை கோட்சாரம் அல்லது கோள் சாரம் என்று கூறுவார்கள். இவ்வாறு கிரகங்கள் தங்கள் நிலைகளில் மாறும் போது அதன் தாக்கம் நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு (2023) ஜூலை மாதத்தின் முதல் வாரம் மூன்று முக்கிய கிரகங்கள் ராசி மாறி சஞ்சரிக்கின்றன. ஜூலை 1 ஆம் தேதி கடக ராசியில் நீசத்தில் இருந்த செவ்வாய் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை 7 ஆம் தேதி சுக்கிரனும் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை 8 ஆம் தேதி முதல் புதன் கடக ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த கிரக நிலையில் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்:
சூரியன் புதன் கடக ராசியில் இணைந்து இருப்பதால் தந்தை, மாமா மற்றும் தாய் வழியில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். அரசாங்க வழியில் ஆதாயங்கள் கூடும். மாணவர்களுக்கு இதுவரை படிப்பில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். அரசாங்க உதவி கிட்டும். விவசாயம் சிறப்பாக இருக்கும் பொருளாதார் ஏற்றம் இருக்கும். 5 ஆம் இடத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சிம்ம ராசியில் இருப்பதால் பல வித நன்மைகள் உண்டாகும் வீடு வாசல் சொத்து கிட்டும். அரசாங்க உத்தியோகம் கிட்டும். குழந்தைப் பேறு கிட்டும். பதவி உயர்வு கிட்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நல்ல செய்திகள் வரும். திருமண வாழ்க்கை இனிதாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைக்கப் பெறுவார்கள். நட்பு வட்டாரம் விரிவடையும்.
சிம்மம்
லக்னத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு. வெளிநாட்டு யோகம் கிட்டும். காதல் கை கூடும். காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றிக் கொள்வார்கள். வீட்டில் சுப காரியகள் நடக்கும். மலை பிரதேசங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். மனது நிறைந்து இருக்கும். விரைய ஸ்தானத்தில் சூரியன் புதன் இணைவு காரணமாக வெளிநாடு செல்லும் பயணம் இருக்கும்; புதிய வேலை வாய்ப்பு அமையும். பண வரவு இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக தைரியம் அதிகரிக்கும்.
துலாம்:
இந்த மாதம் உங்களுக்கு மிகவும் முக்கியமான மாதமாக இருக்கும். புதிய விஷயங்களைத் தொடங்க சாதகமான காலமாக இருக்கும். சில முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இக்காலம் சாதகமாக இருக்கும்.பத்தாம் இடத்தில் சூரியன் புதன் இனைவு புதாதித்ய யோகத்தை அளிக்கும். படிப்பு மற்றும் வேலையில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பீர்கள். உங்களில் சிலர் சுய தொழிலை ஆரம்பிப்பீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை ஏதேனும் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையேயான உறவு வலுப்பெறும். நிலம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.வெளிநாட்டு பிரயாணம் செய்வீர்கள். பதவி உயர்வு ஏற்படும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். நட்பு வட்டம் விரியும். பிறரின் உதவிகள் கிட்டும். வியாபாரம் மூலம் பல லாபங்கள் கிட்டும்.
