படுக்கை அறை இப்படி இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்

படுக்கை அறை என்பது நாம் அமைதியாக ஓய்வெடுத்து உறங்க வேண்டிய இடம். எனவே அதற்குண்டான சூழ்நிலையில் படுக்கை அறை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படுக்கை அறையின் பாதகமான சூழ்நிலை தம்பதியரின் ஒற்றுமையைக் குலைக்கும். இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம் மற்றும் சுமுக உறவில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே படுக்கை அறை ஆற்றல் நிலை சீராக இருக்கமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆற்றல் நிலை இருக்க படுக்கை அறையில் தேவையற்ற பொருட்களை வைத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். படுக்கை அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் எப்பொழுதும் மூடியே இருக்கக் கூடாது. அறை முழுவதும் நேர்மறை ஆற்றல் பரவும் விதமாக தினமும் அறைக் கதவு மற்றும் ஜன்னல்களை 15-ல் இருந்து 20 நிமிடங்கள் திறந்து வைக்க வேண்டும்.
செய்யக் கூடாதவை
∙ படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்கக் கூடாது.
∙ பயன்படுத்தாமல் இருக்கும் கடிகாரத்தை, ஓடாத கடிகாரத்தை படுக்கை அறையில் வைக்கக் கூடாது
∙ மின்னணு சாதனங்களை வைப்பது படுக்கை அறையின் ஆற்றலை கெடுக்கும்.
∙ மீன் தொட்டிகள், நீர் ஊற்றுகள் போன்றவற்றை படுக்கை அறையில் வைக்கக் கூடாது
∙ முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கக் கூடாது
∙ கூர்மையான பொருட்கள் மற்றும் ஆயதங்களை படுக்கை அறையில் வைக்கக் கூடாது
∙ செருப்பு ஷூ முதலியவற்றை படுக்கை அறையில் வைக்கக் கூடாது
∙ படுக்கையை பிரதிபலிக்கும் வகையில் எந்தவொரு பொருளையும் படுக்கை அறையில் வைக்கக் கூடாது
∙ படுக்கை அறையில் சுவாமி படங்களை மாட்டி வைத்தல் கூடாது
∙ இறந்தவர் படங்களையும் படுக்கை அறையில் மாட்டி வைத்தல் கூடாது
∙ படுக்கையறையில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படியே வைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் படுக்கையில் இருந்து தூரத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் அதிக மின்னழுத்தம் தரக்கூடிய சாதனங்கள் ஆகும். அவற்றின் அதிர்வலைகள் கதிர்வீச்சை ஏற்படுத்தக் கூடியவை. இவை நமது உடல் நலத்தை பாதிக்கும்.
∙ கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாமல் படுக்கையறையில் உறங்க கூடாது.
∙ படுக்கை அறையில் உணவு உண்ணுதல் கூடாது.
∙ தலை மாட்டில் தண்ணீர் வைத்துக் கொண்டு படுக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் அதனை காலையில் செடிக்கு ஊற்றி விட வேண்டும்.
செய்யக் கூடியவை
∙ தலையனுக்கு அடியில் மயிலிறகை வைத்து உறங்கலாம்.
∙ புனித நூல்களை தலைமாட்டில் வைத்து உறங்கலாம்.
∙ படுக்கை அறையில் நீலம் அல்லது இளம் பச்சை நிற சுண்ணாம்பை அடிப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ள முடியும்.
∙ படுக்கை அறையில் கண்டிப்பாக சிறிய விளக்கு எரிய வேண்டும்.
∙ கிழக்கு அல்லது தெற்கில் தலை வைத்து படுக்கலாம்.
∙ சுவர்களில் கலைநயமிக்க ஓவியங்கள், குதிரை படங்கள், இரண்டு வாத்துகள் ஒன்றாக இருப்பது போல படங்களை வைப்பது அதிர்ஷ்டத்தை தரும்.
