உங்கள் வீட்டு பீரோ இந்த திசையில் இருந்தால் பணவரவும் இருக்காது, வீண் விரயமும் அதிகமாகும்

நாம் வாழும் வாழ்க்கை வளமாக இருக்கவும் வாழ்வு செழிப்பாக இருக்கவும் நாம் வாழும் இடமும் நமக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எனவே தான் நாம் வாழும் வீடு வாஸ்துப்படி அமைந்துள்ளதா என பார்ப்பது அவசியம் ஆகிறது. வாஸ்து முறையில் அமைக்கப்பட்ட வீடு நமது துன்பங்களை குறைத்து இன்பங்களை அதிகரிக்கின்றது. மேலும் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உரிய இடம் உண்டு. அதற்குரிய இடத்தில் அந்த அந்த பொருளை வைப்பதன் மூலம் அதன் பயன்பாடு நமக்கு நன்மை அளிக்கும். அந்தவகையில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது பணம் வைக்கும் பீரோ. நம்மில் பெரும்பாலோர் பீரோவில் தான் பணம் வைக்கும் பழக்கம் உள்ளது.
பணம் என்றால் செலவு ஆகாமல் இருக்குமா? செலவு ஆகத் தான் செய்யும். அது நல்ல செலவாக இருக்க வேண்டும் என்று தானே நீங்கள் விரும்புவீர்கள். நல்ல செலவுகள் மகிழ்ச்சி தானே அளிக்கும். சுபச் செலவுகள் என்றாலும் பண வரவும் இருக்க வேண்டும் அல்லவா? கடினமாக உழைத்த பணத்தை சேமிக்க வேண்டும் என்ற ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். பணத்தை பீரோவில் அடுக்கி அதனை பார்பதிலேயே ஒரு அலாதி சந்தோஷம் இருக்கும். திருமகளாம் லட்சுமி தேவியின் கடாட்சம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். ஆனால் உங்கள் வீட்டு பீரோ இந்த திசையில் இருந்தால் பணவரவும் இருக்காது, வீண் விரயமும் அதிகமாகும். அது எந்த திசை என்பதைப் பற்றி பார்ப்போம். அதனை தவிர்ப்பதன் மூலம் உங்கள் பண வரவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். வீண் விரயங்களையும் குறைக்கலாம்.
பீரோ வைக்கக் கூடாத திசைகள்:
வடகிழக்கு மூலை என்பது ஈசான்ய மூலை எனப்படும். ஈசனுக்கு உரிய இடம் உங்கள் பீரோ ஈசான்ய மூலையில் இருந்தால் உங்கள் பணம் தண்ணீர் போல செலவாகும். எனவே வடகிழக்கு மூலையில் பீரோ வைத்தல் ஆகாது.
வடமேற்கு மூலை வாயு மூலை. இது வாயு பகவானுக்கு உரிய இடம். இந்த இடத்தில் உங்கள் பீரோ இருந்தால் காற்று போல பணம் செலவாகும். கடன் அதிகரிக்கும், தென்கிழக்கு மூலை அக்னி மூலை எனப்படும். அக்னி மூலையில் சமையல் அறை இருக்க வேண்டும். இந்த இடத்தில் உங்க பணப்பெட்டி இருந்தால் மருத்துவ செலவுகள் அதிகமாகும்.இங்கே பணம் வைக்கும் பீரோவை வைத்தல் நெருப்பில் பணம் போடுவதற்கு சமம். வீண் விரயங்களும் செலவுகளும் அதிகரிக்கும்.
எந்த திசையில் பீரோ வைக்க வேண்டும்?
பீரோ வைக்க சரியான இடம் எதுவென்றால் தென் மேற்கு மூலை. தென் மேற்கு மூலையில் பாரம் மிகுந்த பீரோவை நாம் வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் கூடும். இங்கு பீரோவை வைப்பதன் மூலம் பணம் குவியும். குறிப்பாக மருத்துவ செலவுகள் குறையும்.
மேலும் ஒருவருடைய வருமானம் அதிகரிக்க வேண்டும், தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் மேற்கு திசை நோக்கி தங்களின் பீரோவை வைத்து விட வேண்டும். பீரோவின் பின்புறம் மேற்கு திசை நோக்கியும், முன்புறம் கிழக்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் வீண் விரயத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
