AstroVed Menu
AstroVed
search
search

சுக்கிரன் பலம் அதிகரிக்க | Sukra Yogam in Tamil

dateMay 15, 2023

நவகிரகங்கள் ஒன்பது ஆகும். அவற்றுள் ஒன்று சுக்கிரன். சுக்கிரன் அசுர குரு. சுக்கிரன் இல்லாமல் அழகு, சந்தோசம் இல்லை. தாம்பத்திய வாழ்வு சிறக்க சுக்கிரன் பலமாக இருக்க வேண்டியது அவசியம். ஆடை ஆபரணம், நகைகள்,காதல், இன்பம்,கவர்ச்சி. திருமணம், வாசனை திரவியம் இவை சுக்கிரனின் காரகங்களுள் சில ஆகும். சுக்கிரன் நமது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் யோகத்தை அளிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சுக்கிரன் இல்லாமல் சந்தோசம் இல்லை. பணத்தட்டுப்பாடு, பணப்பற்றாக்குறை, பண நெருக்கடி இல்லாமல் இருக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டியது அவசியம்.

சுக்கிரன் பலம் அதிகரிக்க

இன்பகரமான வாழ்க்கை வாழ சுக்கிரனின் அருள் மிகவும் அவசியம். வீடு கட்டவும் வாகனம் வாங்கவும் சுக்கிரனின் அருள் அவசியம் தேவை. சுக்கிரன் பலமாக இருந்தால் தான் பெண்ணிற்கு மாங்கல்ய பலம் சேரும். ஆடை ஆபரணங்கள் சேரும். நமது அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அல்லது சில பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் கிட்டும்.

  • அத்திமரம் சுக்கிர பகவானுக்கு உரிய சமித்து ஆகும். அத்தி மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய சிறிய குச்சியை கொண்டு வந்து நம் வீட்டில் பத்திரப்படுத்தி வைப்பது மிகவும் நல்லது. அத்திமர குச்சியின் மீது மஞ்சள் தடவி பணம் வைக்கும் பெட்டியில் வைத்தாலும் நமக்கு செல்வ செழிப்பை கொண்டு வந்து சேர்க்கும்.
  • சுக்கிரனுக்கு உரிய தானியம் மொச்சை ஆகும். சுக்கிரனின் பலம் பெற நமது உணவில் மொச்சையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் மொச்சையை தானமாக அளித்தால் நல்லது. சூரிய காந்தி விதைகள், பாதாம் பருப்பு, சிவப்பு பூசனி விதைகள், நிலக்கடலை இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சுக்கிரனின் பலம் அதிகரிக்கும்.
  • வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலையில் குத்து விளக்கேற்றி மகா லட்சுமியை வணங்கி வருவதன் மூலம் சுக்கிரன் அருள் கிட்டும்.
  • வெள்ளிக்கிழமை நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு மல்லிகை பூவை மாலையாக கட்டி கொண்டு போய் போட்டு இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.
  • வெள்ளி மோதிரம், மெட்டி போன்ற வெள்ளி ஆபரணம் அணிவது சுக்கிரனின் பலத்தை கூட்டும்.
  • ஸ்ரீம் ப்ரிஸீ மந்திரம் ஜெபிப்பதன் மூலம் சுக்கிரன் பலம் கூடும்.
  • சுக்கிரனை பலப்படுத்த வெள்ளை நிற உடைகள் அல்லது கைக்குட்டை மற்றும் பிங்க் நிற ஆடைகளை வெள்ளிக்கிழமை பயன்படுத்த வேண்டும்.
  • வெள்ளை நிற இனிப்பை செய்து பிறருக்கு அளித்து வருவதன் மூலம் சுக்கிரன் பலம் பெரும்.
  • தண்ணீரில் சிறிது ஏலக்காய் பன்னிர் சேர்த்து தினமும் குளித்து வர சுக்கிரன் பலம் கூடும்.

banner

Leave a Reply