AstroVed Menu
AstroVed
search
search

அதிக செலவின்றி வாஸ்து குறைபாடுகளை நீக்கும் எளிய பரிகாரம்

dateJuly 15, 2023

ஒரு கட்டிடத்திற்கான உயிரோட்டமே வாஸ்து எனப்படும். ஒரு கட்டிடம் அல்லது வீட்டிற்கு உயிரோட்டம் இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும்  ஆயுளும் உண்டு   அதுபோல கட்டிடம் அல்லது வீட்டிற்கு சில நியதிகள் உண்டு பஞ்ச பூதங்களின் சரியான சேர்க்கையே சரியான வாஸ்து எனப்படும். பஞ்சபூதங்கள் யாதெனில் நெருப்பு, நிலம், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகும். இவை ஐந்தும் சரியான முறையில் இருந்தால் அங்கு வாஸ்து சரியாக இருக்கும். இதில் ஏதாவது ஒன்றில் குறைபாடு இருந்தாலும் வாஸ்து குறைபாடு காணப்படும். உதாரணமாக நீரினால் குறைபாடு இருந்தால் அந்த வீட்டில் பணம் தங்காது.  

விஞ்ஞானப் பூர்வமாக மின் காந்த அலைகளின் ஓட்டம் சீராக இருந்தால் வாஸ்து குறைபாடு இருக்காது. வடகிழக்கு மூலை தாழ்ந்து இருக்க வேண்டும். தென்மேற்கு மூலை மேடாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் காந்த ஓட்டம் சீராக இருக்கும். வீட்டின் வடகிழக்கு மூலையில் பாரமான பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே ஒரு வீட்டைக் கட்டும் போது வாஸ்து பூஜை மேற்கொண்டு வாஸ்து படிதான் கட்டப்படுகிறது. ஒரு கட்டிடம் அல்லது வீட்டில் சரியான வாஸ்து இருந்தால் அங்கு நல்ல அதிர்வலைகள் காணப்படும். அது நேர்மறை ஆற்றலை அளிக்கும்.அதையும் மீறி சில குறைபாடுகள் வரத்தான் செய்கிறது. இந்தக் குறைபாடுகள் காரணமாக வீட்டை இடித்துக் கட்டுதலோ அல்லது வீடு மாற்றுதலோ சாத்தியமற்ற செயலாகும். அதே போல வாஸ்து குறைபப்டுகளை நேக்க பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும் என்பதும் இல்லை. சிறிய பரிகாரங்கள் மூலம் வாஸ்து குறைபாடுகளை நீக்கிக் கொள்ள இயலும்.

பரிகாரனகள்:

ஈசான்ய மூலை என்னும் வடகிழக்கு மற்றும் கன்னி மூலை என்று  சொல்லப்படும் தென் மேற்கு என இரண்டு மூலைகளில் நீர் வருமாறு சிறியதாக நீர் ஊற்று வைப்பது நல்லது.

பூமிகாரகன் என்று அழைக்கபடும் செவ்வாய் பகவானை நினைத்து வாஸ்து நாட்களில் ஐந்து திரி போட்டு ஐந்து அகல் விளக்குகளை காlலை அல்லது மாலையில் ஏற்று வழிபடுங்கள். வாஸ்து நாட்கள் காலண்டரில் கொடுக்கப்பட்டிருக்கும். அன்று மாலை முருகன் ஆலயம் சென்று வழிபடலாம்.  வீட்டில் முருகன் படம் இருந்தாலும் காலையில் விளக்கேற்றி பூஜை ஆராதனை, நெய்வேத்தியம் என செய்து வாஸ்து புருஷனையும் மனதார வேண்டிக் கொள்ளலாம்.


banner

Leave a Reply