ஆடிப் பூரம் அன்று இந்த வளையல் அணிந்தால் குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவையெல்லாம் நீங்கி பணம் பன்மடங்கு பெருகுமாம்.

ஆபரணங்களை அணிவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. அது மட்டும் இன்றி நகைகள் நமது பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றது. நகைகள் நமது உடலில் உள்ள முக்கிய புள்ளிகளைத் தூண்டும் வகையில் அணியுமாறு நமது முன்னோர்கள் நமக்குக் கூறிச் சென்றுள்ளனர். பொதுவாக தங்க நகைகளை அணிவது தான் சிறந்தது. அது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் வெப்பத்தை தணிக்கவும் உதவுகிறது. தங்கம் மட்டும் இன்றி வெள்ளி, முத்து, பவளம், சங்கு போன்ற இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் ஆபரணங்களை நமது முன்னோர்கள் அணிந்து வந்துள்ளனர்.
நாம் இந்தப் பதிவில் சங்கு வளையல் அணிவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிக் காணப் போகிறோம்..
ஆடி மாதம் பெண்கள் வீட்டில் இந்த வளையல் அணிந்து இவற்றை செய்தால் சாட்சாத் அந்த மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்து குடியேறுவாள் என்பது நம்பிக்கை. என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் காண்போம்.
ஆடி மாதம் பெண்மையின் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம். ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் பல விசேஷங்கள் இருக்கும். அவற்றுள் ஒன்று ஆடிப் பூரம். அன்று அம்மனுக்கு வளையல் சார்த்தி வழிபாடுகளை நடத்துவது உண்டு. இந்த விழாவில் கலந்து கொள்வதன் மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கிட்டும்.ஆடிப் பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அணிவிப்பது மட்டும் அன்றி அன்று நீங்களும் உங்கள் கைகளில் சங்கு வளையல் அணிவதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் யாவும் விலகும்.
நாம் எத்தனையோ ஆபரணங்களை அணிகிறோம். அவற்றுள் வளையல் ஒன்று. வளையல் நாடி நரம்புகளைத் தொடும் போது நல்ல அதிர்வுகளை உருவாக்குகிறது. காப்பாக இருந்து நம்மை பாதுகாக்கிறது. கடலில் இருந்து கிடைக்கும் முதன்மையான பொருள் சங்கு ஆகும். சங்கு இருக்கும் இடம் எல்லாம் விஷ்ணுவின் வாசம் உள்ளது. மகாலட்சுமிக்கு பிடித்தமானது சங்கு.
சங்கு வளையல் அணிவதன் மூலம் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். அன்னியோன்யம் கூடும். குழந்தைப் பேறு கிட்டும். நேர்மறை ஆற்றல் கிட்டும். குளிர்ச்சியை கொடுக்கும் சங்கு சரும நோய்களை தீர்க்க வல்லது. அகமும் புறமும் இருக்கும் ஆரோக்கிய குறைபாடுகளை தீர்க்க வல்லது. வாழ்வை வளம் படுத்தக் கூடியது. பெயர் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு தரக் கூடியது.
சங்கு வளையல் அணிவதன் மூலம் பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். ஆடிப் பூரம் அன்று வீட்டில் சாமி முன் விளக்கேற்றி சிறிது நாணயங்களையும் அம்மன் முன் வைக்கவும். பிறகு பூஜைகளை முடித்த பிறகு அந்த நாணயங்களை உங்கள் கணவன் மற்றும் குழந்தைகளுக்கு உங்கள் சங்கு வளையல் அணிந்த கையால் கொடுங்கள். உங்கள் பணம் பன்மடங்கு பெருகும்.
