AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

வியாழக்கிழமை இந்த வழிபாட்டை பக்தி சிரத்தையுடன் மற்றும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால் நீங்கள் கஷ்டத்தில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள்

dateJuly 26, 2023

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இந்த உலகில் நமக்கு கண் எதிரே இருக்கும் தெய்வமாக அன்னை தந்தை விளங்குகிறார்கள். அவர்கள் தான் நம்மை பாதுகாத்து போற்றிப் பேணி வளர்க்கிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக குருவைக் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு தான் தெய்வம். கல்வி அறிவை போதித்து நம்மை நல்வழிப்படுத்துபவர்கள் நமது குருமார்கள்.

கபீர்தாசர் கூட தனது பாடலில் குருவின் மகிமையைப் போற்றிக் கூறியுள்ளார். கடவுள், குரு இருவரும் வந்து உன் முன்னால் நின்றால், நீ யாரை தேர்ந்தெடுப்பாய்?  என்று கேட்டால் நான் குருவைத் தான் தேர்ந்து எடுப்பேன். ஏனெனில் குருநாதர் தான் எனக்கு கடவுளைக் காட்டினார் என்ற தனது பாடல் மூலம் குருவின் மகிமையை நமக்கு எடுத்துக் கூறி உள்ளார்.   

நாம் என்ன தான் கடவுளை வணங்கினாலும் நம்மை கடவுளுக்கு அருகில் கொண்டு செல்பவர் நமது குருவாகத் தான் இருக்க முடியும். எல்லா நாட்களும் குருவை வணங்கலாம் என்றாலும் வியாழக்கிழமை  அன்று குருவின் ஆதிக்கம் நிறைந்து காணப்படும். அன்று குருபகவானை வணங்குவதன் மூலம்  நிச்சயம் வாழ்வில் மேன்மை அடைய இயலும்.

குரு பகவானுக்கு உரிய நாள்: வியாழக்கிழமை, உரிய நிறம்: மஞ்சள், உரிய எண் :3 உரிய தானியம் கொண்டைக் கடலை. நவகிரகங்களில் குருபகவானை பொன்னன் என்று அழைப்பார்கள். தனகாரகன் என்று அழைப்பார்கள். தனம் என்றால் பணம், செல்வம். குருவை வணங்குவதன் மூலம் நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழலாம்.

எனவே வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை, நவக்கிரக குருவை வணங்குவது சிறப்பு. இது மட்டும் இன்றி  ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சாய் பாபா, மகா பெரியவர் போன்ற குருமார்களையும் வணங்கலாம். வியாழன் அன்று குருவை வணங்குவதன் மூலம் ஞானம் பெருகும்.  

நீங்கள் யாரை குருவாக நினைக்கிறீர்களோ, உங்கள் குடும்ப வழக்கப்படி உங்கள் குருவின் படத்தை ஒரு சிறிய மேஜை அல்லது மனைப் பலகை மேல் வைக்கவும். படத்திற்கு மஞ்சள் நிற பூக்களை சார்த்தவும். பின்பு படத்தின்  முன் விளக்கேற்றி தூப தீப ஆராதனை செய்யவும். பிறகு 9 முறை வலம் வந்து வணங்கவும்.  பிறகு குரு பகவானின் பீஜ மந்திரத்தை உச்சரிக்கவும். முடிந்தால் அன்று விரதம் மேற்கொள்ளவும்.

குருமகவானின் பீஜ மந்திரம்:

ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ

இவ்வாறு தொடர்ந்து செய்து வர உங்கள் இல்லத்தில் அமைதி தவழும். லட்சுமி கடாட்சம் பெருகும். சரஸ்வதி கடாட்சம் கூடும். செல்வ வளம் பெருகும்.


banner

Leave a Reply