வைகாசி மாதத்தில் பெளர்ணமி திதியும், விசாகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளை வைகாசி விசாகம் என்கிறோம். இது ஆண்டு தோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி விசாகமானது ஜூன் 2 ம் தேதி காலை 05.55 மணிக்கு துவங்கி, ஜூன் 03 ம் தேதி காலை 05.54 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.
முருகர் ஒரு சக்திவாய்ந்த போர்க்கடவுள். சூரனை வதைத்த வீரன் எனவே அவர் போர்க் கடவுளாகவும் மற்றும் ஞானக் கடவுள் என்றும் தமிழ்க் கடவுள் என்றும் போற்றப்படுபவர். மனிதகுலத்தை அச்சுறுத்தும் தீமையிலிருந்து உலகைக் காப்பாற்ற சிவனின் நெற்றிக் கண்களில் இருந்து தோன்றியவர், முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் விசாகம் நட்சத்திரம் வரும் என்றாலும்,வைகாசி மாதத்தில் வரும் விசாகம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
வைகாசி விசாக சிறப்புகள் :
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகள் தோன்றி ஆறு குழந்தைகளாக ஆகின. இவர்களை வளர்க்கும் பொறுப்பு கார்த்திகை பெண்களுக்கு வழங்கப்பட்டது. பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைத்த போது ஆறுமுகம் கொண்ட ஒரு குழந்தையாக மாறியது எனவே தான் முருகன் ஆறுமுகன் என்றும் கந்தன் என்றும் அழைக்கப்படுகிறார். முருகு என்றால் அழகு. மயிலை தனது வாகனமாகக் கொண்டவர். மயிலை வாகனமாக கொண்டவன் என்பது விசாகன் என்ற சொல்லுக்கு பொருளாகும். இதனால் வைகாசி விசாகத்தன்று முருகனுடன் சேர்த்து வேலையும், மயிலையும் வணங்குவது மிக சிறப்பானதாகும். அதே சமயம் 6 முனிவர்களின் சாபங்களை போக்கி, முருகன் அருள் செய்த தினமும் இதே வைகாசி விசாகம் தான்.
முருகனின் அருள் :
முருகனின் அருள் வேண்டுவோர் முருகனுக்கு பல விரதங்கள் இருப்பது வழக்கம் அவற்றுள் முக்கியமானது வைகாசி விசாக விரதம். முருகனுக்கு விரதம் என்றாலே கண்டிப்பாக காவடி இடம் பெரும். முருகனின் பரிபூரண அருள் வேண்டுவோர் வைகாசி விசாகத்தன்று பால்குடம், காவடி எடுத்து வழிபடுவது சிறப்பு. ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே முருகனுக்கு வழிபாடு செய்து பூஜை அர்ச்சனை செய்து தூப தீபம் மற்றும் நெய்வேத்தியம்செய்து முருகனின் அருளைப் பெறலாம்.
வைகாசி விசாக விரத பலன்கள் :
முருகனின் ஆறு முகங்கள் நமக்கு ஆறு வரங்களை அருளுகின்றன்
∙ ஞானம்
∙ வைராக்கியம்
∙ பலம்
∙ கீர்த்தி
∙ ஸ்ரீ எனப்படும் செல்வம்
∙ ஐஸ்வரியம்

Leave a Reply